search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை பஞ்சாப்"

    ஐ.பி.எல். போட்டியில், மும்பை அணியிடம் 3 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறித்து பஞ்சாப் கேப்டன் அஸ்வின், மீண்டும் ஒருமுறை தான் சிறந்த பவுலர் என்பதை பும்ரா நிரூபித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். #IPL2018
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று மும்பையில் நடந்த ஆட்டத்தில் மும்பை 3 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றது.

    முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 186 ரன் எடுத்தது. அடுத்த விளையாடிய பஞ்சாப் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 183 ரன் எடுத்தது. இந்த வெற்றி மூலம் மும்பை பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.

    7-வது தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணிக்கு பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த அணி ரன் ரேட்டில் (-0.490) மோசமாக இருக்கிறது.

    தனது கடைசி லீக் ஆட்டத்தில் (சென்னைக்கு எதிராக) நல்ல ரன் ரேட்டுடன் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். மும்பைக்கு எதிரான தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறியதாவது:-


    இலக்கை சேசிங் செய்த போது பேட்டிங் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் சரியாக செயல்படவில்லை. மும்பை வீரர் பும்ரா சிறப்பாக பந்து வீசினார். மீண்டும் ஒரு முறை தான் சிறந்த பவுலர் என்பதை நிரூபித்துள்ளார். கடந்த போட்டியில் (பெங்களூருக்கு எதிராக) நாங்கள் மிகவும் மோசமாக விளையாடினோம்.

    அது பற்றி எங்கள் பேட்ஸ்மேன்களிடம் ஆலோசித்தோம். லோகேஷ் ராகுல், ஆரோன் பிஞ்ச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி கட்டத்தில் ராகுல் அவுட் ஆன விதம் சரியா, தவறா  என்று கூறுவது மிகவும் கடினம். அந்த பந்தை அவர் தவறாக அடித்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-


    முக்கியமான இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது. எதை எதிர்பார்த்தேனோ அதை வீரர்கள் செய்து முடித்தார்கள். இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானது என்பதிலும், அதிகமான ஸ்கோர் குவிக்க முடியும் என்பதும் தெரியும்.

    நாங்கள் மிடில் ஓவரில் தடுமாறிவிட்டோம். பொல்லார்ட் எப்போதுமே எங்கள் அணியின் மேட்ச் வின்னர் தான். கடந்த சில ஆட்டங்களில் அவரை நீக்கிவிட்டு விளையாடினோம். அது எப்பேதும் கடினமான முடிவு தான். 11 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படாததற்காக அவர் வருத்தப்பட்டார்.

    கடைசி கட்ட ஓவர்களில் டுமினி வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் பொல்லார்டுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க நினைத்தேன். நெருக்கடியான சூழ்நிலையில் அவர் எப்போதுமே நன்றாக ஆடக்கூடியவர். அதை அவர் சரியாகவே செய்தார். பும்ரா கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பாக பந்துவீசி வருகிறார். பொறுப்பை எடுத்துக்கொண்டு அவர் அபாரமாக வீசினார்.

    இவ்வாறு அவர் கூறினார். #IPL2018 #MIvKXIP #Ashwin
    ×