search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முல்லை வேந்தன்"

    அன்புமணி ராதாஸ் - முல்லை வேந்தன் சந்திப்பு நிகழ்ந்த நிலையில், முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தனை திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார். #MullaiVenthan #DMK
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

    தருமபுரி தொகுதியில் திமுக சார்பில் செந்தில்குமாரும், அதிமுக கூட்டணி கட்சியான பாமக சார்பில் அன்புமணி ராமதாசும், அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் களம் காண்கின்றனர். தருமபுரி தொகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அன்புமணி, திமுக முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தனைச் சந்தித்து ஆதரவு கோரியுள்ளார்.



    கடந்த 2014 தேர்தலுக்கு பிறகு திமுக-வில் இருந்து நீக்கப்பட்ட முல்லை வேந்தன் அதிருப்தி காரணமாக தேமுதிக-வில் இணைந்தார். பின்னர் கடந்த ஆண்டு மீண்டும் திமுக-வுக்கு திரும்பினார். கோவை மக்களவை தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட இவர், சமீப காலமாக மீண்டும் அதிருப்தியில் இருந்துள்ளார். இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் - முல்லை வேந்தன் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

    இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். #MullaiVenthan #DMK

    அ.தி.மு.க. ஆட்சியை ஒழிக்க மு.க. ஸ்டாலினால் மட்டுமே முடியும் என்று முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் தெரிவித்துள்ளார். #ADMK #MKStalin #Mullaivendhan
    தருமபுரி:

    தி.மு.க.வில் மீண்டும் இணைந்த முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் இன்று தருமபுரிக்கு வந்தார். அவருக்கு மதிகோண்பாளையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் தருமபுரி 4 ரோட்டில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தார். காமராஜர், அம்பேத்கார், பெரியார் சிலைகளுக்கும் மாலை அணிவித்தார்.

    அதன்பிறகு அவர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்துக்கு வந்தார். அங்கும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    என்னை மீண்டும் தி.மு.க.வில் இணைத்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கலைஞர் உயிரோடு இருந்தபோது அண்ணா அறிவாலயத்தில் எப்படி என்னை வரவேற்றாரோ அதேபோல மு.க. ஸ்டாலினும் என்னை அன்புடன் வரவேற்றார்.

    நான் மரணம் அடைந்தால் என் உடல் மீது இருவர்ண கொடியை போர்த்தும் வாய்ப்பை வழங்கி உள்ளனர். மத்தியில் உள்ள மதவாத ஆட்சியையும், தமிழ்நாட்டில் உள்ள ஊழல் ஆட்சியையும் ஒழிக்க வேண்டும். இதை ஒழிக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே முடியும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.


    தருமபுரி மாவட்டம் மீண்டும் தி.மு.க. கோட்டை என்பதை நிரூபிப்போம். அதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். என்னை மீண்டும் கட்சியில் இணைக்க உதவிய நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தருமபுரி மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் தர்மசெல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.  #ADMK #MKStalin #Mullaivendhan
    ×