என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மூன் ஜே இன்
நீங்கள் தேடியது "மூன் ஜே இன்"
அமெரிக்காவின் தொடர் நிர்பந்தங்களுக்கு இடையே தென்கொரியா அதிபர் மூன் ஜே இன், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர். #KimJongUn #MoonJaein #Denuclearisationtalks
பியாங்யாங்:
சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசினர். உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சம்மதம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அவர் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும், வடகொரியா அணுகுண்டு சோதனையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையோ நடத்தவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன் டிரம்பை மீண்டும் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து கிம் ஜாங் அன் கடிதம் எழுதி உள்ளார்.
இந்த நிலையில் வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவதற்கு அளித்த உறுதியை எப்படி நிறைவேற்றிக்காட்டுவது என்பது தொடர்பாக வடகொரியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என கூறினார்.
இந்நிலையில், அமெரிக்காவின் தொடர் நிர்பந்தங்களுக்கு இடையே தென்கொரியா அதிபர் மூன் ஜே இன், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் வடகொரியா தலைநகர் பியாங்காங்கில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக இருவரும் விரைவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #KimJongUn #MoonJaein #Denuclearisationtalks

இதற்கு இடையே வடகொரியா மீது ஏற்கனவே விதித்த பொருளாதார தடைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக உள்ள நாடுகள் பற்றி விவாதிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கூட்டவேண்டும் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் தொடர் நிர்பந்தங்களுக்கு இடையே தென்கொரியா அதிபர் மூன் ஜே இன், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் வடகொரியா தலைநகர் பியாங்காங்கில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக இருவரும் விரைவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #KimJongUn #MoonJaein #Denuclearisationtalks
இந்தியா - தென்கொரியா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் அதிபர் மூன் ஜே-இன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர்.
புதுடெல்லி :
தென்கொரியா அதிபர் மூன் ஜே-இன் இந்தியாவில் 5 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மூன் ஜே-இன் மற்றும் அவரது மனைவி மற்றும் அந்நாட்டின் மந்திரிகள், உயரதிகாரிகள் ஆகியோர் கடந்த 8-ம் தேதி டெல்லி வந்தடைந்தனர். தென் கொரிய அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் இன்று அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் மூன் ஜே-இன் மற்றும் அவரது மனைவியை வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து, மூன் ஜே-இன், மோடி மற்றும் இருநாட்டு அதிகாரிகள் பங்கேற்ற சந்திப்பு நடைபெற்றது. இதில், இந்தியா தென்கொரியா இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது.
இந்தியா - தென்கொரியா விரிவான கூட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவது, தொலைத்தொடர்பு, உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிரி பொருளாதாரம் போன்ற துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக 11 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தானது.
சந்திப்பிற்கு பிறகு இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மோடி கூறுகையில், ‘ஒவ்வொரு நடுத்தர இந்திய குடும்பங்களிலும் கொரியாவில் தாயாரிக்கப்பட்ட பொருட்களில் ஏதேனும் ஒன்று நிச்சயம் இடம்பெற்றிருக்கும். கொரிய தயாரிப்பு பொருட்கள் தனித்துவம் வாய்ந்தது. மேக் இன் இந்தியா திட்டத்தில் தென் கொரியா இணைந்ததன் மூலம் பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்’ என தெரிவித்தார்.
மோடியை தொடர்ந்து பேசிய மூன் ஜே-இன், ‘இந்தியா - தென் கொரியா இடையே கடந்த 45 ஆண்டுகளாக நல்லுறவு நிலவி வருகிறது. 2015-ம் ஆண்டு தென்கொரியாவிற்கு மோடி வருகை தந்த பிறகு இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. நான்காவது தொழில் புரட்சியில் மக்களின் வளம் மற்றும் அமைதியை ஊக்குவிக்க மோடியும் நானும் தீர்மானித்துள்ளோம். எதிர்கால வளர்ச்சியை தோற்றுவிக்கும் நோக்கில் இருநாடுகளும் பரஸ்பரம் சிறந்த ஒத்துழைப்பு நல்கும்’ என கூறினார்.

அரசுமுறை பயணமாக இந்தியா வந்தடைந்த தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
புதுடெல்லி :
தென்கொரியா அதிபர் மூன் ஜே-இன் இந்தியாவில் 5 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மூன் ஜே-இன் மற்றும் அவரது மனைவி மற்றும் அந்நாட்டின் மந்திரிகள், உயரதிகாரிகள் ஆகியோர் கடந்த 8-ம் தேதி டெல்லி வந்தடைந்தனர்.
டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய மூன் ஜே-இன், உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சாம்சங் செல்போன் உற்பத்தி ஆலையை பிரதமர் மோடியுடன் இணைந்து நேற்று திறந்து வைத்தார்.
அரசுமுறை வரவேற்பை தொடர்ந்து, ராஜ்காட் சென்ற மூன் ஜே-இன், அங்கு அமைந்திருக்கும் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மனைவியுடன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்து நிகழ்ச்சியில் மூன் ஜே-இன் பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில், அதிபர் மூன் ஜே-இன்க்கு ஜனாதிபதி மாளிகையில் இன்று அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் மூன் ஜே-இன் மற்றும் அவரது மனைவியை வரவேற்றனர்.
அரசுமுறை வரவேற்பை தொடர்ந்து, ராஜ்காட் சென்ற மூன் ஜே-இன், அங்கு அமைந்திருக்கும் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மனைவியுடன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்து நிகழ்ச்சியில் மூன் ஜே-இன் பங்கேற்க உள்ளார்.
இந்தியா மற்றும் தென்கொரியா இடையே வர்த்தகம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருநாட்டு அமைச்சர்களும் இன்று கையெத்திட்டனர்.
புதுடெல்லி :
தென்கொரியா அதிபர் மூன் ஜே-இன் வரும் 11-ம் தேதிவரை இந்தியாவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மூன் ஜே-இன், அவரது மனைவி மற்றும் அந்நாட்டின் மந்திரிகள், உயரதிகாரிகள் குழுவுடன் அவர் நேற்று டெல்லி வந்தடைந்தார்.
இந்நிலையில், இந்தியா மற்றும் தென் கொரியா இடையே வர்த்தகம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. தென் கொரிய வர்த்தக மந்திரி கிம் ஹியூன் சோங் மற்றும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி சுரேஷ் பிரபு ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய மந்திரி சுரேஷ் பிரபு, இந்தியா மற்றும் தென்கொரியா நாடுகளின் நல்லுறவை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்ல, இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் வணிகம் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார்.
இதற்கிடையே, தென்கொரிய வர்த்தக மந்திரி கிம் ஹியூன் சோங் செய்தியாளர்களிடத்தில் கூறுகையில், ‘இந்தியா - தென்கொரியா இடையே மேக் இன் இந்தியா திட்டத்தின் முதல்படியாக உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் சுமார் 5 ஆயிரம் கோடி மதிப்பில் விரிவுபடுத்தப்பட உள்ள சாம்சங் செல்போன் தயாரிப்பு தொழிற்சாலையை பிரதமர் மோடி மற்றும் தென்கொரிய அதிபர் மூன் ஆகியோர் இன்று பார்வையிட உள்ளனர்.
தற்போது 60 லட்சம் செல்போன்களை தயாரிக்கும் இந்த தொயிற்சாலையில் இருந்து, 2020-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 1 கோடி செல்போன்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது’ எனக் கூறினார்.

×

X