search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெர்சிடிஸ் பென்ஸ் சி.எல்.எஸ்."

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் மூன்றாம் தலைமுறை சி.எல்.எஸ். 4-டோர் கூப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #MercedesBenz


     
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய சி.எல்.எஸ். 4-டோர் கூப் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆடம்பர கார் மாடலின் துவக்க விலை ரூ.84.7 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்குகிறது.

    புதிய பென்ஸ் சி.எல்.எஸ். கார் விரைவில் அறிமுகமாக இருக்கும் ஆடியோ ஏ7, பி.எம்.டபுள்யூ. 6 சீரிஸ் கிரான் கூப் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெல்லிய வடிவமைப்பில் கவர்ச்சிகர நான்கு கதவுகள் கொண்ட கூப் மாடலில் ஸ்லோப்பிங் ரூஃப்லைன், ஃபிரேம்லெஸ் கதவுகள் வழங்கப்பட்டுள்ளது.

    மெர்சிடிஸ் பென்ஸ் சி.எல்.எஸ். மாடலில் புதுவித ஹெட்லேம்ப்கள் மற்றும் முற்றிலும் புதிய கிரில் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. பின்புறம் டெயில் லேம்ப் கிளஸ்டர், கிடைமட்டமாக வைக்கப்பட்ட டெயில் லேம்ப்கள் மற்றும் சிறிய ஸ்டபி பூட் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 5-ஸ்போக் 18 இன்ச் வீல்கள் சில்வர் நிற ஷேட் கொண்டிருக்கிறது.



    காரின் உள்புற கேபினில் அழகிய வடிவமைப்பு மற்றும் உயர் ரக மரத்தாலான டேஷ்போர்டு, நான்கு ஜெட் டர்பைன் ஏ.சி. வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பெரிய ஸ்கிரீன்களில் ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றொன்று டிஜிட்டல் டேஷ்போர்டு போன்று செயல்படுகிறது.

    புதிய சி.எல்.எஸ். ஐந்து பேர் அமரக்கூடிய வாகனம் என்றாலும், நான்கு பேர் வரை பயணிக்கக்கூடியதாக இருக்கிறது. பொனெட்டில் புதிய சி.எல்.எஸ். மாடலில் பி.எஸ். VI ரக 2.0 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 242 பி.ஹெச்.பி. பவர், 500 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 9-ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. 

    இந்த கார் 6.2 நொடிகளில் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும், அதிகபட்சம் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
    ×