search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யமஹா மோட்டார்ஸ்"

    யமஹா இந்தியா நிறுவனத்தின் ஆர்15 வெர்ஷன் 3.0 மோட்டோ ஜிபி லிமிட்டெட் எடிஷன் இந்திய விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #YAMAHA


    யமஹா இந்தியா நிறுவனம் ஆர்15 வெர்ஷன் 3.0 மோட்டோ ஜிபி மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய மோட்டோ ஜிபி எடிஷன் யமஹா ரேசிங் புளு நிறத்தில் மோட்டோ ஜிபி பிரான்டிங் கொண்டிருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிளில் மூவிஸ்டார் லோகோ முன்பக்கமும், பக்கவாட்டுகளிலும் இடம்பெற்றிருக்கிறது. 

    மேலும் ENEOS லோகோ வழங்கப்பட்டு, வேலென்டினோ ரோசி மற்றும் மேவரிக் வினேல்ஸ் ரேசிங் நம்பர்கள் மட்டும் வழங்கப்படவில்லை. சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் யமஹா YZF-R15 வெர்ஷன் 3.0 மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகிறது. 

    புதிய மோட்டோ ஜிபி எடிஷனில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. யமஹா R15 வெர்ஷன் 3.0 மாடலில் 155சிசி, 4-ஸ்டிரோக் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 19 பிஹெச்பி பவர் மற்றும் 15 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.



    இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் சர்வதேச மாடலில் யுஎஸ்டி முன்பக்க ஃபோர்க்-கள் வழங்கப்படுகிறது, எனினும் இந்திய மாடலில் வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க்கள் வழங்கப்பட்டுள்ளது.

    யமஹா R15 வெர்ஷன் 3.0 மாடல்: தன்டர் கிரே மற்றும் ரேசிங் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. புதிய மோட்டோ ஜிபி எடிஷன் கூடுதலாக இரண்டு புதிய பெயின்ட் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஆர்15 வெர்ஷன் 3.0 மோட்டோ ஜிபி எடிஷன் விலை ரூ.1.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    யமஹா ரே ZR ஸ்போர்ட் ஸ்கூட்டர் டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதிய ஸ்கூட்டர் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி என அழைக்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. #YAMAHA



    யமஹா ரே ZR ஸ்போர்ட் 110சிசி ஸ்கூட்டர் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்நிலையில், வெளியீட்டுக்கு முன் புதிய ஸ்கூட்டரின் டீசரை யமஹா வெளியிட்டிருக்கிறது. இதில் புதிய வேரியன்ட் யமஹா ரே ZR ஸ்ட்ரீட் ரேலி என அழைக்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

    ஏற்கனவே ரே ZR 100 ஸ்ட்ரீட் ரேலி எடிஷன் ஸ்கூட்டரை யமஹா நிறுவனம் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்திருந்தது. அதன்படி புதிய ஸ்கூட்டரில் புதிய ஸ்போர்ட் கிராஃபிக்ஸ் மற்றும் தங்க நிற அலாய் வீல்கள் கொண்டிருக்கின்றன. 

    யமஹா வெளியிட்டிருக்கும் புதிய டீசர் வீடியோவில் ஸ்கூட்டர் பார்க்க ரே ZR போன்றே காட்சியளிக்கிறது, எனினும் கூடுதலாக வடிவமைப்பு கொண்டிருக்கிறது. புதிய ஸ்ட்ரீட் ரேலி எடிஷனில் காஸ்மெடிக் மாற்றங்கள், புதிய டீக்கல்கள், கருப்பு நிற அலாய் வீல்கள் கொண்டிருக்கின்றன.



    ஒட்டுமொத்தமாக யமஹா ரே ZR ஸ்ட்ரீட் ரேல்லி பார்க்க ஸ்டான்டர்டு ரே ZR மாடல் போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் இருக்காது என கூறப்படுகிறது.

    யமஹா ரே ZR ஸ்ட்ரீட் ரேலி மாடலில் 113சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த இன்ஜின் 7.1 பி.ஹெச்.பி. பவர், 8.1 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் சி.வி.டி. கியர்பாக்ஸ் கொணடிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இத்துடன் புதிய யமஹா ஸ்கூட்டரின் முன்புறம் 170மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்படுகிறது. இத்துடன் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் சிங்கிள் ஷாக் அப்சார்பர் வழங்கப்படுகிறது. #YAMAHA #scooter

    யமஹா ரே ZR ஸ்ட்ரீட் ரேலி டீசர் வீடியோவை கீழே காணலாம்..,

    ×