search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஷிய அதிபர் புதின்"

    வரலாற்றில் முதல்முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #NorthKorea #Russia #VladimirPutin #KimJongUn
    சியோல்:

    அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வந்தது. இதனால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேசிய பிறகு, இந்த சூழல் மாறியது. வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன.

    இதற்கிடையில், டிரம்ப்-கிம் ஜாங் அன்னின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு திரும்பிவிடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. இது குறித்து பேசி தீர்வுகாண 3-வது உச்சி மாநாட்டுக்கு இருநாட்டு தலைவர்களும் பரஸ்பர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில், வரலாற்றில் முதல்முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகிற 24-ந் தேதி புதின் வடகொரியா செல்கிறார் என்றும், அந்த பயணத்தின் போது இருநாட்டு தலைவர்கள் இடையிலான சந்திப்பு நடைபெறும் என்றும் தென்கொரியா அரசு ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

    எனினும் இந்த தகவலை ரஷியாவோ, வடகொரியாவோ உறுதிப்படுத்தவில்லை.   #NorthKorea #Russia #VladimirPutin #KimJongUn

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பலமுறை ரகசியமாக சந்தித்து பேசியதாக வெளியான செய்தி குறித்து டிரம்ப் தனது விளக்கத்தை தெரிவித்துள்ளார். #DonaldTrump #VladimirPutin
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த 2 ஆண்டுகளில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பலமுறை ரகசியமாக சந்தித்து பேசியதாகவும், இந்த சந்திப்பு தொடர்பான தகவல்களை தனது நிர்வாகத்திடம் மூடி மறைத்துவிட்டதாகவும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் செய்தி வெளியானது.

    இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு டிரம்ப் பேட்டி அளித்த போது அவரிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்து பேசியதாவது:-

    அது ஒரு சிறப்பான பேச்சுவார்த்தை நான் எதையும் உள்ளே வைத்து மூடி மறைக்கவில்லை. நான் அனைத்து நாடுகளின் தலைவர்களிடமும் தனியாக தான் பேச்சுவார்த்தை நடத்துவேன். பிரதிநிதிகள் யாரும் உடன் இருக்கமாட்டார்கள். அது பற்றி யாரும், எதுவும் கூறியது கிடையாது. ரஷியாவுடன் எந்த வித கூட்டணியும் இல்லை என்பதை அனைவரும் அறிவர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  #DonaldTrump #VladimirPutin
    இங்கிலாந்துக்கு நான் உளவு பார்ப்பதாக கருதி என்னை ரஷிய அதிபர் புதின் கொல்ல முயற்சி செய்கிறார் என்று மாடல் அழகி அன்னசபிரோ புகார் கூறி உள்ளார். #AnnaShapiro #Putin
    லண்டன்:

    இங்கிலாந்தில் சில மாதங்களுக்கு முன்பு ரஷியாவை சேர்ந்த உளவாளி செர்ஜி கிரிபால், அவரது மகள் ஆகியோரை நரம்பு மண்டலத்தை தாக்கும் வி‌ஷம் மூலம் கொல்ல முயற்சி நடந்தது.

    இவர்கள் இங்கிலாந்துக்கு சாதகமாக செயல்பட்டதால் ரஷியாவே இந்த முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த நிலையில் ரஷியாவை சேர்ந்த மாடல் அழகி அன்னசபிரோ, அவரது கணவர் ஆகியோர் இங்கிலாந்தில் உள்ள சலீஸ்பரி நகரில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் மயங்கி விழுந்தனர்.

    அவர்கள் உணவில் எலி மருந்து கலந்திருப்பது தெரிய வந்தது. சிகிச்சைக்கு பின் இருவரும் குணமடைந்தனர்.

    இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் தன்னை கொல்ல முயற்சித்து இருப்பதாக அன்னசபிரோ புகார் கூறி இருக்கிறார். அவருடைய ஆட்கள் தான் உணவில் வி‌ஷத்தை கலந்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

    மேலும் அவர் கூறும் போது, எனக்கு இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நபர்கள், பணக்காரர்கள் பலரை தெரியும். இதனால் இங்கிலாந்துக்கு நான் உளவு பார்ப்பதாக கருதி என்னை ரஷிய அதிபர் புதின் கொல்ல உத்தரவிட்டு இருக்கிறார் என்று கூறினார்.

    ஆனால், இதை இங்கிலாந்து போலீசார் உறுதிப்படுத்தவில்லை. தொடர்ந்து விசாரித்து வருவதாக அவர்கள் கூறினார்கள்.  #AnnaShapiro #Putin



    மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வரும்படி ரஷிய அதிபர் புதினுக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். #Trump #Putin #Meeting
    வாஷிங்டன்:

    பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் சந்தித்து பேசினர். அதன் பின்னர் இருநாட்டு தலைவர்களும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

    அப்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு இல்லை என்று பொருள் தரும் வகையில் டிரம்ப் பதில் அளித்தார். இது அமெரிக்காவில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

    இதை தொடர்ந்து அவர் தனது கருத்தை மாற்றிக் கொண்டு “ஒரு வார்த்தை மாறிவிட்டது” என்றார். அமெரிக்க தேர்தலில் தலையிட்டது வேறு யாராவது கூட இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

    இந்த நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வரும்படி புதினுக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

    அதில், ரஷியாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. மக்களின் உண்மையான எதிரிகளை தவிர, போலி செய்தி வெளியிடும் பத்திரிகைகளை தவிர, மற்றவர்களுக்கு அந்த பேச்சுவார்த்தை பெரும் வெற்றி என குறிப்பிடப்பட்டுள்ளது.

    2-வது பேச்சு வார்த்தையில் பயங்கரவாதத்தை நிறுத்துவது, இஸ்ரேலுக்கு பாதுகாப்பு, அணுஆயுதம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



    இதற்கிடையே டிரம்பின் இந்த அறிவிப்புக்கு எதிர் கட்சியான ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர் சக் ஷூம்மர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    ஹெல்சின்கியில் நடந்த 2 மணி நேர சந்திப்பில் என்ன நடந்தது என்பதை பற்றி நாம் அறியும் முன்பாக புதினும், டிரம்பும் சந்தித்து பேசக்கூடாது என்றார். டிரம்புக்கு அமெரிக்காவின் தேசிய உளவுப்பிரிவு இயக்குனர் பான் கோட்சு ஆதரவு தெரிவித்துள்ளார். #Trump #Putin #Meeting
    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பின்லாந்தில் உள்ள ஹெல்சின்கி நகரை வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். #TrumpPutinmeeting #Helsinkimeeting
    அஸ்டோரியா:

    அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின் இதுவரை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியது இல்லை. ஜெர்மனி மற்றும் வியட்நாமில் நடந்த பொருளாதார மாநாடுகளில் இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்தது மட்டுமின்றி, தொலைபேசி வாயிலாகவும் பேசி இருக்கின்றனர்.

    இதற்கிடையே, இரு வல்லரசுகளின் தலைவர்களும் சந்தித்து பேசுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும், ரஷியாவின் கிரம்ளின் மாளிகையும் மேற்கொண்டு வந்தன. இதன் விளைவாக 3-வது நாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான பின்லாந்து நாட்டின் தலைநகரான ஹெல்சின்கி நகரில் ஜூலை 16-ம் தேதி இந்த பேச்சுவார்த்தையை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. முதலில் இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும், பின்னர் தங்கள் நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பின்லாந்து தலைநகரான ஹெல்சின்கி நகரை வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனான சந்திப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
    உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு எனது வாழ்த்துக்கள். மேலும், உலக கோப்பை கால்பந்து தொடரை சிறப்பாக நடத்திய ரஷியாவுக்கும், அதிபர் புதினுக்கும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். #TrumpPutinmeeting #Helsinkimeeting 
    ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தை, இருநாட்டு உறவை வலுப்படுத்தும் என்று மோடி நம்பிக்கை தெரிவித்தார்.#Modi #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி, ரஷியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். ரஷியாவின் சோச்சி நகரில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை இன்று அவர் சந்தித்து பேசுகிறார்.

    இந்த சந்திப்பின்போது, இருதரப்பு பிரச்சினைகள், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள். ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால், இந்தியா மற்றும் ரஷியாவுக்கு ஏற்படும் பொருளாதார பாதிப்புகள், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நிலவரம், பயங்கரவாத அச்சுறுத்தல், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு, பிரிக்ஸ் மாநாடு விவகாரங்கள் ஆகியவை பற்றியும் அவர்கள் விவாதிக்கிறார்கள்.

    மேலும், ரஷியா மீது அமெரிக்கா விதிக்கும் பொருளாதார தடையால், இந்தியா-ரஷியா பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஏற்படும் பாதிப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இந்தியா-ரஷியா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பை மூன்றாம் நாடுகளுக்கு விரிவுபடுத்துவது, கொரிய தீபகற்ப நிலவரம் ஆகியவை பற்றியும் பேசுகிறார்கள்.

    இந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடி நேற்று தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    நட்புரீதியான ரஷிய மக்களுக்கு வணக்கம். ரஷியாவின் சோச்சி நகருக்கு செல்வதற்கும், ரஷிய அதிபர் புதினை சந்திப்பதற்கும் ஆவலாக இருக்கிறேன். அவரை சந்திப்பது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதுதான்.

    புதினுடனான பேச்சுவார்த்தை, இந்தியா-ரஷியா இடையிலான விசேஷ, வியூகம் சார்ந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு மோடி கூறியுள்ளார். #Modi #PMModi
    ×