search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஸ் டெய்லர்"

    நேப்பியரில் நடைபெற்ற வங்காளதேச அணிக்கெதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #NZvBAN
    நேப்பியர்:

    வங்காளதேச கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணி 48.5 ஓவர்களில் 232 ரன்கள் அடித்து ‘ஆல்அவுட்’ ஆனது. முகமது மிதுன் அதிகபட்சமாக 62 ரன்னும், முகமது சாய்புதீன் 41 ரன்னும் எடுத்தனர். போல்ட், சான்ட்னெர் தலா 3 விக்கெட்டும் பெர்குசன், ஹென்ரி தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் 233 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், நிக்கோல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரைசதம் அடித்த நிக்கோல்ஸ் அணியின் ஸ்கோர் 103-ஆக இருக்கும்போது 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.



    அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 11 ரன்னில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு மார்ட்டின் கப்தில் உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். மார்ட்டின் கப்தில் 116 பந்தில் 117 ரன்களும், ராஸ் டெய்லர் 49 பந்தில் 45 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க நியூசிலாந்து 44.3 ஓவரில் 2 விக்கெட் இழபபிற்கு 233 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    சதமடித்த மார்ட்டின் கப்தில் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஆட்டம் கிறிஸ்ட்சர்ச்சில் வருகிற 16-ந்தேதி நடக்கிறது.
    ஆக்லாந்தில் நடைபெற்று வரும் 2-வது டி20 போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து. #NZvIND
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். இரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

    செய்பெர்ட், கொலின் முன்ரோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தலா 12 ரன்னில் ஆட்டமிழந்தனர். சுழற்பந்து வீச்சாளர் குருணால் பாண்டியா துள்ளியமாக பந்து வீச கேன் வில்லியம்சன் 20 ரன்னிலும், மிட்செல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனால் நியூசிலாந்து அணி 50 ரன்னுக்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது தத்தளித்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் கிராண்ட்ஹோம் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கிராண்ட்ஹோம் 28 பந்தில் 4 சிக்சர், 1 பவுண்டரியுடன் 50 ரன்கள் சேர்த்தார். ராஸ் டெய்லர் 42 ரன்கள் சேர்த்தார். சான்ட்னெர் 7 ரன்னிலும், சவுத்தி 3 ரன்னிலும ஆட்டமிழக்க நியூசிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது.

    இதனால் இந்தியாவிற்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. குருணால் பாண்டியா 3 விக்கெட்டும், கலீல் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து, 3-0 என ஒயிட்வாஷும் செய்தது. #NZvSL
    நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நெல்சனில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து ராஸ் டெய்லர் (137), ஹென்ரி நிக்கோல்ஸ் (124 அவுட்இல்லை) ஆகியோரின் சதத்தால் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் குவித்தது.


    ராஸ் டெய்லர்

    பின்னர் 365 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் நிரோஷன் டிக்வெல்லா (46), தனஞ்ஜயா டி சில்வா 36 ரன்களும், குசால் பேரேரா 43 ரன்களும் சேர்த்தனர். இதனால் இலங்கை அணி 15.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் சேர்த்தது.


    சதம் அடித்த நிக்கோல்ஸ்

    ஆனால் குசால் மெண்டிஸ் ரன்ஏதும் எடுக்காமலும், தசுன் ஷனகா 2 ரன்னிலும் ஆட்டமிழக்க இலங்கை தடுமாற ஆரம்பித்தது. திசாரா பேரேரா 63 பந்தில் 80 ரன்களும், தனுஷ்கா குணதிலகா 31 ரன்களும் எடுக்க இலங்கை 41.4 ஓவரில் 249 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.


    திசாரா பெரேரா

    இதனால் நியூசிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான தொடரை 3-0 என வென்று ஒயிட்வாஷ் செய்தது. ராஸ் டெய்லர் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதைப் பெற்றார்.
    அபு தாபியில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு 267 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து. #PAKvNZ
    பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அபு தாபியில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஜார்க் வொர்க்கர், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வொர்க்கர் 1 ரன்னிலும், கொலின் முன்றோ 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 27 ரன்கள் எடுத்த நிலையில் சதாப் கான் பந்தில் வெளியேறினார். இதனால் நியூசிலாந்து 78 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு ராஸ் டெய்லர் உடன் விக்கெட் கீப்பர் டாம் லாதம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நியூசிலாந்தை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அரைசதம் கடந்தனர்.

    நியூசிலாந்து அணி 41.2 ஓவரில் 208 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. டாம் லாதம் 64 பந்தில் 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதே ஓவரில் நிக்கோல்ஸ் (0), கொலின் டி கிராண்ட்ஹோம் (0) ஆகியோரை சதாப் கான் வீழ்த்தினார். அடுத்த ஒவரில் ராஸ் டெய்லர் 80 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    இதனால் 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்திருந்த நியூசிலாந்து 210 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் வந்த டிம் சவுத்தி (20), இஷ் சோதி (24) ரன்கள் அடிக்க நியூசிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் குவித்தது. ஷஹீன் அப்ரிடீ, சதாப் கான் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 267 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.
    ×