என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ரிக் உரிமையாளர்கள்
நீங்கள் தேடியது "ரிக் உரிமையாளர்கள்"
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ரிக் உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தருமபுரி மாவட்ட ரிக் உரிமையாளர்கள் சங்கத்தினர் 3 நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
ரிக் உரிமையாளர் சங்கத்தினர் 2-வது நாளாக இன்றும் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்வை நிர்ணயிக்கும் முறை மத்திய அரசு தனியாருக்கு முதலில் வழங்கியது. அந்த நடைமுறை மாற்றி தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை வழங்கியது. இந்த நடைமுறையால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்து வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்டரிக் வண்டி உரிமையாளர்கள் உள்ளனர். அவர்கள் ரிக் வண்டிகளை வடமாநிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும்பணியை செய்து வந்தனர். தற்போது உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து 3 அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை தருமபுரி மாவட்ட ரிக் உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் நேற்று முதல் தொடங்கியுள்ளோம்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் வட மாநிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள், மற்றும் போர்வெல் போடும் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
நாள்தோறும் டீசல் விலை உயர்ந்து வருவதால் நாங்கள் போர்வெல் போடுவதற்கும் மற்றும் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கும் சரியான விலையை நிர்ணயிக்க முடியாமல் திணறி வருகிறோம். எனவே மீனவர்களுக்கு மோட்டார் படகிற்கு பெட் ரோல் மற்றும் டீசலுக்காக மானியம் வழங்குவதுபோல் ரிக் வண்டி களுக்கென்று டீசலுக்காக மானியம் வழங் கினால் நாங்கள் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு மற்றும் போர்வெல் போடுவது போன்ற பணிகளை செய்து கொடுப்போம். எனவே, மத்திய, மாநில அரசுகள் ரிக் வண்டிகளுக்கான டீசலுக்கு மானியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
×

X