என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ரிவர்ஸ் ரெப்போ விகிதம்
நீங்கள் தேடியது "ரிவர்ஸ் ரெப்போ விகிதம்"
ரெப்போ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை. எனவே ரெப்போ விகிதம் 6.50 சதவீதமாக நீடிக்கும். #RBI #RBIPolicy #RBIMonetaryPolicy #RepoRate
புதுடெல்லி:
தற்போதைய சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யக்கூடாது என நிதிக்கொள்கை குழுவின் 4 உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். ஒரு உறுப்பினர் 0.25 சதவீதம் உயர்த்த வேண்டும் என கூறினார். மற்றொரு உறுப்பினர் நடுநிலை வகித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகல் நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது. அதில் ரெப்போ வட்டி விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே ரெப்போ 6.50 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6.25 சதவீதமாகவும் நீடிக்கும்.
மார்ச் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் பணவீக்கம் 4.5 சதவீதமாக அதிகரிக்கும். ஜிடிபி வளர்ச்சியானது 7.4 சதவீதம் என்ற நிலையில் மாற்றம் இருக்காது எனவும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. #RBI #RBIPolicy #RBIMonetaryPolicy #RepoRate
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். கடைசியாக நடந்த இரண்டு கூட்டங்களின் முடிவில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டது. கடைசியாக ஆகஸ்ட் மாதம் நடந்த கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) 0.25 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6.25 சதவீதமாகவும் உயர்ந்தது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் இன்று நிதிக்கொள்கை குழு இன்று மீண்டும் கூடியது. இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதம் தொடர்பாக ஆலோசித்தனர். தற்போதைய சந்தை நிலவரம், பணவீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பொருளாதார நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகல் நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது. அதில் ரெப்போ வட்டி விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே ரெப்போ 6.50 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6.25 சதவீதமாகவும் நீடிக்கும்.
மார்ச் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் பணவீக்கம் 4.5 சதவீதமாக அதிகரிக்கும். ஜிடிபி வளர்ச்சியானது 7.4 சதவீதம் என்ற நிலையில் மாற்றம் இருக்காது எனவும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. #RBI #RBIPolicy #RBIMonetaryPolicy #RepoRate
×

X