search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெஜினா கசாண்ட்ரா"

    வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கசட தபற' படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் இணைந்துள்ளனர்.
    பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற'. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. 

    அந்த ஆறு முக்கிய கதாபாத்திரங்களில் சந்தீப் கிஷன், சாந்தணு, ஹரிஷ் கல்யாண், ரெஜினா கசாண்ட்ரா, விஜயலட்சுமி மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி நடித்துள்ளனர்.



    திரைக்கதை 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம்.சி.எஸ்., பிரேம்ஜி, ஷான் ரோல்டன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்களும், மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் உள்ளிட்ட 6 படத்தொகுப்பாளர்களும், பாலசுப்ரமணியம், எம்.எஸ்.பிரபு, விஜய் மில்டன், ஆர்.டி.ராஜசேகர், சக்தி சரவணன், எஸ்.ஆர்.கதிர் உள்ளிட்ட 6 ஒளிப்பதிவாளர்களும் படக்குழுவில் இணைந்துள்ளனர்.


    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவரான ரெஜினா கசாண்ட்ரா இந்தியில் அறிமுகமாகும் படத்தில், அவரது கதாபாத்திரத்திற்கு முதலில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், திரையுலக பிரபலங்கள் அவரை பாராட்டி வருகிறார்கள். #ReginaCassandra
    தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டும் நடித்து வந்த ரெஜினா கசண்ட்ரா, ஏக் லட்கி கோதேக் காதா ஐசா லகா என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகம் ஆகிறார்.

    இந்த படத்தில் ரெஜினா தான் நடிக்கும் கதாபாத்திரத்தை ரகசியமாகவே வைத்து இருந்தார். படத்தின் டிரைலர் வெளியானபோது தான் சோனம் கபூரும், ரெஜினாவும் இதில் ஓரின சேர்க்கையாளராக நடிக்கிறார்கள் என்பது தெரியவந்தது.



    ரெஜினாவின் இந்த துணிச்சலான முயற்சிக்கு விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் அமைதியாக இருந்தார். தற்போது ரெஜினாவுக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க தைரியம் வேண்டும்.

    இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடாது என்ற ரீதியில் திரைத்துறையை சேர்ந்தவர்கள் ரெஜினாவை பாராட்டி வருகிறார்கள். இந்த பாராட்டுகள் ரெஜினாவை உற்சாகப்படுத்தி இருக்கிறது. முதன்மை கதாநாயகியாக நடிப்பதற்கு விருப்பப்பட்டு கதைகள் கேட்டு வருகிறார். #ReginaCassandra

    ராட்சசன் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம் வருகிற வாரத்தில் வெளியாக இருக்கிறது. #SilukkuvarpattiSingam #VishnuVishal
    விஷ்ணு விஷால் ராட்சசன் படம் வெற்றி பெற்ற உற்சாகத்தில் அடுத்து சிலுக்குவார்பட்டி சிங்கமாக களம் இறங்குகிறார். அவர் அளித்த பேட்டி:

    திரும்ப காமெடி பக்கமே வந்து விட்டீர்களா?

    ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படப்பிடிப்பின் போதே, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ கதையை இயக்குனர் செல்லா அய்யாவு சொன்னார். ஜாலியா இருக்கே. நம்ம பேனர்லயே தயாரிக்கலாம் என்று திட்டமிட்டு தொடங்கிய படம். ‘ராட்சசன்’ சீரியஸ் போலீஸ், இது காமெடி போலீஸ். ரெஜினா, ஓவியா, யோகிபாபுன்னு ஒரு பெரிய பட்டாளமே வர்றாங்க. இது என் சொந்த படம். சீரியஸ் போலீஸையும், காமெடி போலீசையும் அடுத்தடுத்து விடவேண்டாம் என்று தான் காத்திருந்தேன்.

    காமெடி படங்களையே தொடர்ந்து தயாரிப்பது ஏன்?

    ஜாலியான படங்களை தயாரிப்பது எளிது. சீரியசான படங்களை தயாரித்தால் நமக்கு பிர‌ஷர் அதிகமாகி விடும். இனி என் தயாரிப்பில் எல்லா விதமான படங்களும் வரும். ராட்சசன், நீர்ப்பறவை போன்ற சீரியஸ் படங்கள் எனக்கு எளிது. காமெடி படங்கள் தான் கஷ்டம். காமெடியை தாண்டி இந்த படத்தில் சின்ன கதையும் இருக்கும்.

    ஓவியா கவுரவ வேடத்தில் நடித்தது எப்படி?

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே அவர் நடித்த படம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் அவர் பிக்பாசில் கலந்துகொள்ள போவதாக கூறினார். இதில் கனகா என்னும் வேடத்தில் வருகிறார். கதையை நகர்த்தும் முக்கிய வேடம்.



    காடன் எந்த மாதிரியான படம்?

    பிரபு சாலமன் படம். தமிழ், தெலுங்குன்னு ரெண்டு மொழிகளில் வளரும் படம். முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டோம். இதில் யானைப் பாகனாக நடிக்கிறேன். மூணாறு உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்துறோம். உடனே ‘கும்கி 2’ என்ற முடிவுக்கு வரவேண்டாம். அதில் இருந்து முற்றிலும் வித்தியாசமா இருக்கும். இதில் ராணா 50 வயது நபரா நடிக்கிறார்.

    ஒரு தயாரிப்பாளராக கதாநாயகன் தோல்வியில் இருந்து மீண்டு விட்டீர்களா?

    அதுக்கு பின்னாடி பெரிய கதை இருக்கு. முதலில் ‘வீர தீர சூரன்’ என்று ஒரு படம் ஒப்பந்தமாகி நடிக்க ஆரம்பிச்சேன். சில பிரச்சினைகளால் நடுவிலயே அது நின்றுவிட்டது. அந்த படத்தின் கதையை மாற்றி எடுக்கப்பட்ட படம்தான் ‘கதாநாயகன்’. படம் சரியாக போகவில்லை. ஆனால் எனக்கு நடிப்பு, அனுபவம்னு சில வி‌ஷயங்களை அந்த படம் கற்றுத் தந்தது.

    ராட்சசன் வெற்றி பொறுப்பை அதிகமாக்கி விட்டதா?

    ஆமாம். ‘ராட்சசன்’ படத்துக்கு பிறகு நிறைய கதை கேட்டிருக்கிறேன். இன்னும் எதையும் ஓ.கே. பண்ணல. என்னுடைய பலம் என்ன என்று இப்போதுதான் புரிந்து இருக்கிறது. வித்தியாசமான படங்கள் தான் என் கேரியரில் என்னை தூக்கி விட்டிருக்கின்றன. எனவே இனி 4 படங்கள் சீரியஸ் படங்கள் என்றால் ஒரு படமாவது காமெடி படம் என்று திட்டமிட்டு இருக்கிறேன். இப்போ கிடைத்திருக்கிற இந்த இடத்துக்கு வர 6 வரு‌ஷங்களுக்கு மேல போராடியிருக்கேன். அதே வேகத்தில் அப்படியே ஏறுமுகமா இருக்கணும். #SilukkuvarpattiSingam #VishnuVishal

    வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகி இருக்கும் `பார்ட்டி' படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழை படக்குழு வெளியிட்டுள்ளது. #PARTY #VenkatPrabhu
    அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் `பார்ட்டி'.

    வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.


    முன்னதான வெளியான `பார்ட்டி' படத்தின் டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. 

    வெங்கட் பிரபு விரைவில் சிம்புவை வைத்து `மாநாடு' என்ற படத்தை இயக்கவிருக்கிறார். #PARTY #VenkatPrabhu

    வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் பார்ட்டி படத்தில் நடித்துள்ள சஞ்சிதா ஷெட்டி, படப்பிடிப்பின் போது ரெஜினா உட்கார்ந்தபடியே தூங்குவார் என்று கூறியுள்ளார். #Party #SanchitaShetty #ReginaCassandra
    பார்ட்டி படத்தில் ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என 3 கதாநாயகிகள் இணைந்து நடிக்கிறார்கள். ரெஜினாவுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் சஞ்சிதா ஷெட்டி. நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கும் பழக்கம் ரெஜினாவுக்கு இருக்கு.

    இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது அவரால் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. நானும் அப்படித் தூங்க முயற்சி பண்ணேன். முடியவில்லை. சூதுகவ்வும் வெளிவந்த சமயத்துல ஒரு சேனலுக்கு பேட்டி கொடுக்க சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதிக்குப் போய் இருந்தேன். அங்கே `பிரியாணி’ படப்பிடிப்பு நடந்துவந்தது.



    அங்கேதான் வெங்கட் பிரபுவை முதன்முதலாக சந்தித்தேன். `சூதுகவ்வும்‘ படத்தைப் பாராட்டியவர், கொஞ்ச நாளைக்கு அப்புறம் `பார்ட்டி’ படத்துல நடிக்கிறீங்களானு கேட்டார். கதை பிடிச்சிருந்தது, ஓகே சொல்லிட்டேன்’ என்று கூறியுள்ளார். #Party #SanchitaShetty #ReginaCassandra

    வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகி இருக்கும் `பார்ட்டி' படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #PARTY #VenkatPrabhu
    அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் `பார்ட்டி'. 

    வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    முன்னதான வெளியான `பார்ட்டி' படத்தின் டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. 

    வெங்கட் பிரபு விரைவில் சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #PARTY #VenkatPrabhu

    தமிழ், தெலுங்கு என மாறி மாறி பிசியாக நடித்து வரும் நடிகை ரெஜினா கசாண்ட்ராவின் கிக்கி சேலஞ்ச் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #KiKiChallange #ReginaCassandra
    ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அமைதியான பெண்ணாக நடித்தவர் ரெஜினா. அதனைத் தொடர்ந்து தெலுங்குப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அங்கு சமீபத்தில் கவுதம் கார்த்திக்கு அவர் ஜோடியாக நடித்த மிஸ்டர் சந்திரமவுலி படம் ரிலீசானது. இப்படத்தில் பிகினி உடையில் அவர் கலக்கியிருந்தார். இந்நிலையில் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரெஜினா.

    அதில் ஓடும் காரில் இருந்து இறங்கி ஒரு பாப் பாடலுக்கு நடனம் ஆடுகிறார். சிறிது நேரம் ஓடும் காருக்கு இணையாக சாலையில் நடனம் ஆடும் அவர், பின்னர் அதே வேகத்தில் ஓடும் காரில் ஏறிக் கொள்கிறார். இந்த வீடியோ படப்பிடிப்பின் இடைவேளையில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் பாவாடை தாவணி கட்டி, கிராமத்துப் பெண் போன்ற தோற்றத்தில் ரெஜினா தோற்றமளிக்கிறார்.

    கூடவே இந்தப் பதிவில் அவர், ‘கிக்கி சாலஞ்ச் முடித்து விட்டேன். உங்களுடைய டியூனுக்கு தென்னிந்தியப் பெண்களாலும் டான்ஸ் ஆட முடியும்‘ என தெரிவித்துள்ளார். பிரபல ஆலிவுட் பாப் பாடகர் டிரேக்சின் ஸ்கார்பியன் எனும் ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ‘இன் மை பீலிங்ஸ்’.


    கடந்த மாதம் இந்த ஆல்பம் ரிலீசாகி இணையத்தில் வைரலானது. இந்த ஆல்பத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதுபோல டான்ஸ் ஆடும் சவால் ‘இன் மை பீலிங்ஸ்’ சவால் அல்லது கிக்கி சவால் என்ற பெயரில் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. #KiKiChallange #ReginaCassandra

    தமிழில் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவரான ரெஜினா கசாண்ட்ரா, அடுத்ததாக பாலிவுட் படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளதால் உற்சாகத்தில் இருக்கிறாராம். #ReginaCassandra
    ‘கண்ட நாள் முதல்’ என்ற தமிழ் படத்தில் தான் முதலில் அறிமுகம் ஆனார் ரெஜினா. ஆனால் இங்கே சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் ரெஜினாவை தெலுங்கு சினிமா கைகொடுத்து தூக்கியது. தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக விளங்கும் ரெஜினாவை இப்போது தமிழ் சினிமா பயன்படுத்திக் கொள்கிறது.

    இது பற்றி கேட்டால் ‘சென்னையிலேயே பிறந்து வளர்ந்த பெண் நான். தமிழ் சினிமாவைவிட தெலுங்கில் நிறைய படங்கள் நடித்ததால் என்னை ஆந்திரா பெண் என்று நினைக்கிறார்கள். இப்போது தொடர்ந்து தமிழ் படங்களில் வாய்ப்பு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னையில் வளர்ந்த எனக்கு நல்ல தமிழ்ப் படங்கள் ஆரம்பத்தில் கிடைக்கவில்லை.



    இப்போது நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. முக்கியமாக தமிழில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் நிறைய உருவாகின்றன. எனவே அதுபோன்ற பலமான வேடங்கள் வரும் என்று காத்திருக்கிறேன்’ என்றார். ரெஜினா அடுத்து இந்திக்கு செல்கிறார். இந்தியில் சோனம் கபூருடன் இவர் குகூ என்ற படத்தில் நடிக்கிறார். #ReginaCassandra

    ×