என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரெயில் பயணம்"
சென்னை மண்டல ரெயில்வே கூடுதல் மேலாளர் கே.மனோஜ் தலைமையில் டிக்கெட் பரிசோதகர்கள் 25 பேர் தனித்தனி குழுக்களாக பிரிந்து கடந்த 24 மற்றும் 25-ந் தேதிகளில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் உதவியுடன் திடீர் சோதனையில் இறங்கினார்கள்.
சென்னை சென்டிரல்-அரக்கோணம், எழும்பூர்-விழுப்புரம் மார்க்கம் வரை இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் 5 மின்சார ரெயில்கள், 3 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நடத்தப்பட்ட சோதனையில், டிக்கெட் எடுக்காமல் ஓ.சி.யில் பயணம் செய்த 120 பேர் சிக்கினர். இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்து முதல் வகுப்பில் பயணித்தல் உள்பட முறைதவறிய பயணம் செய்த 64 பேரும் பிடிபட்டனர். இதுதொடர்பாக மொத்தம் 195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.73 ஆயிரத்து 80 அபராதம் வசூலிக்கப்பட்டது.
எழும்பூர்-விழுப்புரம் மார்க்கத்தில் 4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள், ஒரு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு மின்சார ரெயிலில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில் டிக்கெட் இல்லாமல் ஓ.சி.யில் பயணம் செய்த 269 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.79 ஆயிரத்து 870 அபராதம் பெறப்பட்டது.
மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சென்னை கோட்டத்தில் கடந்த மே மாதத்தில் மட்டும் 4¼ கோடி பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் தெற்கு ரெயில்வேக்கு ரூ.289½ கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் ரெயிலில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை கோட்டத்தில் கடந்த மே மாதம் செய்யப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டு தெற்கு ரெயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* சென்னை கோட்டத்தில் மட்டும் 4.32 கோடி பேர் பயணித்து உள்ளனர். இது முந்தைய ஆண்டை காட்டிலும் 2.13 சதவீதம் அதிகமாகும். அதேபோல ரூ.289½ கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 12.82 சதவீதம் அதிகமாகும்.
* 261 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு உள்ளன.
* டிக்கெட் எடுக்காதது போன்ற ஒழுங்கீன செயல்களில் அபராதமாக ரூ.1.21 கோடி வசூலிக்கப்பட்டது.
* தண்டவாள பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, தேவையான இடங்களில் கான்கிரீட் பூச்சு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
* அரக்கோணம்-ரேணிகுண்டா இடையேயான ஆளில்லா ரெயில்வே கேட்கள் மூடப்பட்டு உள்ளன.
* ரெயில் நிலையங்களில் புகைபிடித்தல், ரெயில் ‘சீட்’ விற்பனை ரெயில்வே பாதுகாப்பு படையினரால் 4,002 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அபராதமாக ரூ.10 லட்சத்து 89 ஆயிரத்து 260 வசூலிக்கப்பட்டு உள்ளது. ரெயில்வே தடவாள பொருட்கள் திருடியதாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
* 20 கொள்ளையர்கள் உள்பட 31 குற்றவாளிகள் பிடிபட்டு உள்ளனர். பணம், தங்க நகைகள், லேப்டாப், செல்போன் என 108 சம்பவங்களில் திருடு போன பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
* பேசின்பிரிட்ஜ் மற்றும் கோபால்சாமி நீர் மறுசுழற்சி நிலையங்களில் 11 ஆயிரத்து 60 லிட்டர் மறுசுழற்சி செய்யப்பட்டு உள்ளன.
மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
கொழிஞ்சம்பாறை:
ஆந்திர மாநிலம் ஐதராபாத் ரெயில் நிலையத்தில் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்த நாய்க்கும் திடீரென்று அப்படி ஒரு ஆசை வந்திருக்கிறது.
மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் ரெயில்களில் ஏறி சொகுசாக செல்கிறார்கள். அவர்களுடன் ரெயிலுக்குள் ஏறினால் அடித்து விரட்டி விடுவார்கள் என்று நினைத்து இருக்கிறது.
ஐதராபாத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்பட்ட சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் மீது ஏறி மேற் கூரையில் நின்று கொண்டது. ரெயில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது ஹாயாக அங்கும் இங்குமாக உற்சாகமாக ஓடி விளையாடியது.
ரெயிலின் ஒரு பெட்டியில் கேரள மாநிலம் பள்ளிபுரம் பகுதியை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுராஜ், வினோஸ் ஆகியோர் பயணம் செய்தனர். ரெயிலின் மேற்கூரையில் ஏதோ நடமாடுவதுபோல் உணர்ந்தனர்.
அடுத்த ரெயில் நிலையம் வந்தபோது இருவரும் இறங்கி ரெயிலின் மேற்கூரையை பார்த்தனர். அப்போது ரெயிலின் மேற்கூரையில் நாய் நின்றதை பார்த்ததும் விரட்ட முயன்றனர். ஆனால் நாய் செல்லாமல் வீரர்களை கடிக்க முயன்றது. அதற்குள் ரெயிலும் புறப்பட்டு விட்டது. இதையடுத்து அடுத்த ரெயில் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அடுத்த ரெயில் நிலையம் வந்தபோது ரெயில்வே ஊழியர்கள் நாயை விரட்ட முயன்றனர். ஆனால் நாய் கடிக்க பாய்ந்ததே தவிர அங்கிருந்து செல்லவில்லை. இதனையடுத்து அங்கிருந்து மீண்டும் ரெயில் புறப்பட்டது. ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் இப்படியே நாயை விரட்ட சிறிது நேரம் ரெயிலை நிறுத்தியும் நாயை விரட்ட முடிய வில்லை.
ரெயில் வேகமாக வரும்போது இரு பெட்டிகளுக்கு இடையே நாய் லாவகமாக பதுங்கிக்கொண்டது. மெதுவாக செல்லும்போது மேற்கூரையின் மீது ஏறியது.
ஒருநாள் முழுவதும் பயணம் செய்தது. மறுநாள் காலை 10.30 மணிக்கு பாலக்காடு ஒலவக்கோடு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. மொத்தம் 1100 கிலோ மீட்டர் தூரத்தை 20 மணி நேரமாக ரெயில் பெட்டியின் மீது பயணம் செய்துவிட்டது.
அங்கிருந்து கேரளா செல்லும் பாதையில் மிக உயரழுத்த மின் கம்பிகள் இருப்பதால் இனிமேல் பயணம் செய்தால் நாய்க்கு ஆபத்து ஏற்பட்டு பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதனையடுத்து ஒலவக்கோடு ரெயில் நிலையத்தில் சி.ஆர்.பி.எப். வீரர் வினோஸ் லாவகமாக மேற்கூரையில் இருந்த நாயின் காலை பிடித்து கீழே போட்டார். இதில் நாய்க்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு காட்டுப்பகுதிக்குள் ஓடிச்சென்று மறைந்தது.
இதனால் ஒலவக்கோடு ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு 10.30 மணிக்கு புறப்படவேண்டிய ரெயில் 11.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.
20 மணிநேரம் ரெயிலின் மேற்கூரையில் நாய் ஒன்று மின் கம்பியின் நடுவே பயணம் செய்து உயிருடன் மீண்ட சம்பவம் பயணிகளிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்