search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லட்சுமி ஸ்லோகம்"

    மகாலட்சுமிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் மங்களம் உண்டாகும்.
    புனிதமே கமல மாதே! புள்ளூர்ந்தான் போற்றும் தேவி!
    இனிய பத்மாசனத்தில் இருப்பவள் நீயே அன்றோ!
    துணிவுடை வைணவீ உன்றன் திருவடி தொழுவதற்கே
    அணுகினோம் நோக்கு தாயே! அவதியை நீக்கு தாயே!
    செல்வமென்று சொன்னால் செல்வி நீதான் ஈவாய்!
    வெல்வது நீயே என்றும்! வேறென அனைத்தும் நீயே!
    பல்குணப் பரந்தாமன்பால் பற்றுடை திருவே உன்னை
    பல்கிய மலர்கொண்டேத்திப் பணிந்தனம் காக்க தாயே!
    கண்ணன் மார்பில் வாழும் கமலை நீ அன்னை நீயே!
    கண்ணனின் சாயல் பெற்ற காரிகை நீயே தாயே!

    பொதுப் பொருள்:

    புனிதமான தாமரையில் அமர்ந்தவளே! கருடவாகனன் போற்றும் தேவி! பத்மாசனத்தில் அமர்பவளே! வைஷ்ணவியாய் விளங்கி எம் அல்லல்கள் அகற்று தாயே செல்வம் அருள்பவள், அனைத்தும் நீயாய் விளங்குபவள். பரந்தாமன் மேல் பற்று கொண்டவளே! கண்ணைன் திரு மார்பில் உறைபவளே! தங்களை வணங்குகிறேன். மகாலக்ஷ்மியைப் போற்றும் துதி இது.
    ×