என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » லீமா பாபு
நீங்கள் தேடியது "லீமா பாபு"
பி.ஐயப்பன் இயக்கத்தில் பி.அபிலாஷ் - லீமா பாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் `தோனி கபடிகுழு' படத்தின் விமர்சனம். #DhoniKabbadiKuzhuReview #Abhilash #LeemaBabu
நாயகன் அபிலாஷ் தனது நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவதையே பொழுதுபோக்காக வைத்துள்ளார். கிரிக்கெட் என்றால் போதும் அனைவரும் ஒன்றுகூடும் அளவுக்கு விளையாட்டு மீது பற்றாக இருக்கிறார்கள். அதே ஊரில் டீ கடை வைத்திருக்கும் ஒருவர், கபடி விளையாட்டின் பெருமையை சொல்லி கபடி விளையாட சொல்கிறார். ஆனால் அவரது பேச்சை அவர்கள் கேட்பதாக இல்லை.
இந்த நிலையில், அவர்கள் கிரிக்கெட் விளையாடும் இடத்திற்கு சொந்தக்காரர், தான் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல், அந்த இடத்தை கடன் வாங்கியவரிடமே கொடுத்து விடுகிறார்.
இதையடுத்து கிரிக்கெட் விளையாட இடமில்லாமல் தவிக்கும் அந்த ஊர் இளைஞர்கள், அந்த இடத்தை வாங்கியவரிடம் சென்று அந்த இடத்தை தரும்படி கேட்கின்றனர். தனக்கு வர வேண்டிய கடன் தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் கொடுத்துவிட்டு அந்த இடத்தை வாங்கி செல்லும்படி அவர் சொல்ல, அதற்காக பணம் சேர்க்க ஆரம்பிக்கின்றனர். இதற்கிடையே தனது ஊருக்கு வரும் நாயகி லீமா பாபு மீது அபிலாஷுக்கு காதல் வருகிறது.
நாயகன் அபிலாஷின் தந்தை சொந்த வீட்டை அடமானம் வைத்து பணம் கொடுக்கிறார். அதேபோல் ஊர் மக்களிடமும் பணம் வசூலிக்க, அவர்களுக்கு தேவையான காசு ஓரளவுக்கு சேர்த்து விடுகிறது. மீதி காசை சேர்க்க வழி தெரியாமல் தவிக்க, டீ கடைக்காரர் அவர்களை கபடி விளையாடி வென்றால் பரிசுத் தொகை கிடைக்கும் என்று சொல்கிறார்.
அவர்களுக்கும் அது சரியாக பட கபடி விளையாடுவதற்கு தயாராகிறார்கள். அந்த டீக்கடைகாரர் அவர்களுக்கு கபடி பயிற்சி அளிக்கிறார்.
கடைசியில், கபடி போட்டியில் வென்று பரிசை வென்றார்களா? கிரிக்கெட் விளையாடும் இடத்தை திரும்பப் பெற்றார்களா? கபடி விளையாட்டின் அருமை புரிந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
அபிலாஷ் கல்லூரி இளைஞராக, கிரிக்கெட், கபடி விளையாட்டு வீரராக போதுமான நடிப்பை கொடுத்திருக்கிறார். எனினும் நடிப்பில் இன்னமும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். லீமா பாபுவுக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் வரும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
முதலாவதாக கபடியின் மகத்துவத்தை சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் பி.ஐயப்பனுக்கு பாராட்டுக்கள். கிரிக்கெட்டையே பெரிதாக நினைக்கும் இளைஞர்களுக்கு தமிழனின் விளையாட்டான கபடியின் முக்கியத்துவத்தை புரிய வைக்கிறார். எனினும் படத்தின் திரைக்கதையும், கதாபாத்திரங்களும் ஒன்றவில்லையோ என்றும் யோசிக்க வைக்கிறார்.
சி.ஜே.ரோஷன் ஜோசப்பின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். வெங்கடேஷின் ஒளிப்பதிவு சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `தோனி கபடிகுழு' வளர வேண்டும். #DhoniKabbadiKuzhuReview #Abhilash #LeemaBabu
பி.ஐயப்பன் இயக்கத்தில் பி.அபிலாஷ் - லீமா பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் `தோனி கபடி குழு' படத்தின் முன்னோட்டம். #DhoniKabbadiKuzhu
மனிதம் திரைக்களம் எஸ்.நந்நகுமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `தோனி கபடி குழு'.
`மைடியர் பூதம்' தொடரில் நடித்த அபிலாஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே `நாகேஷ் திரையரங்கம்' படத்தில் வில்லனாக நடித்துள்ளார். லீமா பாபு நாயகியாக நடித்துள்ளார். தெனாலி, சரண்யா, செந்தில், புகழ், விஜித், சி.என்.பிரபாகரன், ரிஷி, நவீன் சங்கர், சுஜின், பீட்டர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - வெங்கடேஷ், இசை - சி.ஜே.ரோஷன் ஜோசப், பாடல்கள் - என்.ராசா, கலை - ஏ.சி,சேகர், படத்தொகுப்பு - யு.கார்த்திகேயன், தயாரிப்பு நிர்வாகம் - கே.மனோகரன், எஸ்.நந்நகுமார், தயாரிப்பு - மனிதம் திரைக்களம், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - பி.ஐயப்பன்
படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது,
இந்த கதை முழுவதும் கற்பனையானது. அதில் என்னுடைய வாழ்க்கையையும் நான் சேர்த்துள்ளேன். நான் சிறு வயதிலிருந்து கபடி விளையாடி தான் வளர்ந்தேன். பள்ளியில் கபடி சாம்பியன். அப்போது என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட் விளையாடும் போது எனக்கு பிடிக்காது. அதன்பிறகு கிரிக்கெட் என்னை மிகவும் ஈர்த்தது. தோனி கபடி குழுவில் சமூக கருத்தும் உள்ளது என்றார். நடிகர்களை தாண்டி படத்தில் நிஜ வாழ்கையில் கபடி விளையாட்டு வீரர்களாக வரும் சிலரும் நடிக்கிறார்கள்.
இந்த படம் வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி திரைக்கு வருகிறது. #DhoniKabbadiKuzhu
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X