search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காள தேசம் கிரிக்கெட்"

    ஆசிய கோப்பையின்போது மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டு வெளியேறிய தமிம் இக்பால் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தயாராகிறார். #BANvWI
    வங்காள தேச அணியின் முன்னணி தொடக்க பேட்ஸ்மேன் தமிம் இக்பால். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின்போது மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டது. அதனால் தொடரில் இருந்து விலகினார்.

    அதன்பின் வங்காள தேசம் ஜிம்பாப்வேயிற்கு எதிராக விளையாடியது. தற்போது வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விளையாடி வருகிறது. ஜிம்பாப்வேயிற்கு எதிராக தொடர் முழுவதும் விளையாடாத தமிம் இக்பால், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவில்லை.

    வருகிற 9-ந்தேதி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதில் களம் இறங்க தீவிரம் காட்டுகிறார். இதற்கு முன்னோட்டமாக வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக வங்காள தேச லெவன் அணி விளையாடும் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளார். இந்த போட்டியின்போது அவரது கையில் வலி ஏற்படாவிடில், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம பிடிப்பார்.
    ×