search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரி பாக்கி"

    வரி பாக்கியை செலுத்திவிட்டால் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபம் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. #VedaNilayam #HighCourt
    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த, போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஜெயலலிதா செலுத்த வேண்டிய  வருமான வரி ஏதும் நிலுவையில் உள்ளதா? போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவில்லமாக மாற்ற வருமான வரித்துறைக்கு ஆட்சேபனை ஏதும் உள்ளதா? என்பது குறித்து, ஜனவரி 24ம் தேதிக்குள் வருமான வரித்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


    இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2007ம் ஆண்டு முதலே ஜெயலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை முடக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

    ‘ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.10.13 கோடி சொத்து வரி, 6.62 கோடி வருமான வரி என மொத்தம் ரூ.16.75 கோடி வரி பாக்கிக்காக 2007ம் ஆண்டு முதலே ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் இல்லம், ஐதராபாத் வீடு, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள கடை உள்ளிட்ட 4 சொத்துக்களை முடக்கி வைத்துள்ளோம். இந்த வரி பாக்கியை செலுத்திவிட்டால் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபம் எதுவும் இல்லை’ என வருமான வரித்துறை  தனது மனுவில் கூறியுள்ளது. #VedaNilayam #HighCourt
    ×