search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரு‌ஷநாடு வனப்பகுதியில் தீ . கும்பல்"

    வரு‌ஷநாடு வனப் பகுதியில் சமூக விரோதிகள் தீ வைப்பது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே வரு‌ஷநாடு வனச்சரகத்துக்கு உட்பட்ட எருமைச் சுனை, கண்டமனூர் வனச் சரகத்துக்கு உட்பட்ட காமராஜர்புரம் மலைப் பகுதியில் நேற்று திடீரென காட்டுத் தீ பற்றி எரிந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வனச்சரகர்கள் இக்பால் (வரு‌ஷநாடு), குமரேசன் (கண்டமனூர்) தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். காற்று பலமாக வீசுவதால் காட்டுத் தீ மளமளவென பரவி அரிய வகை மூலிகைகள், மரங்கள் எரிந்து நாசமானது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், நாளை ஆடி-18 கொண்டாடப்படுகிறது. இதற்காக தங்கள் குல தெய்வ கோவில் வழிபாட்டுக்கு சிலர் பலி கொடுப்பதுண்டு. இதற்காக வனப்பகுதியில் தீ வைத்து வன விலங்குகளை வேட்டையாடி வருகின்றனர்.

    மேலும் அடுப்பு கரிக்காகவும் சிலர் இவ்வாறு தீ வைக்கின்றனர். இப்பகுதியில் வேட்டை கும்பல் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதனால் வனப்பகுதி மற்றும் விலங்குகள் அழியும் சூழல் உள்ளது. எனவே வனத்துறையினர் சமூக விரோத கும்பலை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×