என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வர்த்தகப் போர்
நீங்கள் தேடியது "வர்த்தகப் போர்"
அமெரிக்காவின் வர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம் என சீனா தெரிவித்துள்ளது. #TradeWar
பெய்ஜிங் :
அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப்போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளால் சீனாவின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளை ஒன்றாக எதிர்கொள்வோம் என இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங் அளித்துள்ள பேட்டியில், ’தற்போது காணப்படும் வர்த்தக நெருக்கடிகளை எதிர்கொள்ள சீனாவும், இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். இரு நாடுகளும் பெரும் பொருளாதார சக்தியை கொண்டிருக்கின்றன. அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு வர்த்தக நடவடிக்கையும் சீனாவை மட்டும் பாதிக்காது.
இந்தியாவுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதார சக்தி மிக்க நாடாக இந்தியா மாறுவதை அமெரிக்காவின் நடவடிக்கைகள் தடுக்கும்.
சீனா மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார விஷயங்களில் அமெரிக்கா அதிகளவு தலையிடுகிறது. சர்வதேச அளவில் பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் இருநாட்டு வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.
சர்வதேச அளவில் இப்போது நிலவி வரும் சூழலை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விரும்புகிறது. அப்போதுதான் அமெரிக்கா போன்ற நாடுகளின் வர்த்தக போரை எதிர்கொள்ள முடியும்’ என்றார். #TradeWar

அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததை அடுத்து தவறை உடனடியாக சரிசெய்து கொள்ளுங்கள், என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. #TradeWar
பெய்ஜிங் :
ரஷியாவிடம் இருந்து போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை வாங்கியதன் காரணமாக சீனாவின் ராணுவ அமைப்பிற்கு நிதி பொருளாதார தடையை அமெரிக்கா விதித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே வர்த்தகப்போர் பெரும் மோதலை எட்டியுள்ளது.
அமெரிக்காவின் அதிரடி வரிஉயர்வு காரணமாக சீனாவும், இந்தியாவும் பாதிக்கப்பட்டு வருகிறது. சீனா பதிலடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்போது பாதுகாப்பு அமைப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்து இருப்பது சீனாவிற்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், அமெரிக்காவின் நடவடிக்கையானது, சர்வதேச உறவுகளின் அடிப்படை கொள்கையை மீறுவதாகும். இருநாடுகள் மற்றும் ராணுவங்கள் இடையே உள்ள உறவுகளை கடுமையாக பாதிக்கசெய்யும் நடவடிக்கையாகும்.
எங்கள் மீதான தடையை விலக்கிக்கொள்ளுங்கள், இல்லையெனில் கடுமையான விளைவுகளை எதிர்க்கொள்ள நேரிடும் என்று அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், ரஷியாவின் எஸ்-400 ரக ஏவுகணையை இந்தியா வாங்க முடிவு செய்துள்ளது, இதுதொடர்பான பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டது. இதனால், அமெரிக்காவிடம் இருந்து இந்தியாவிற்கும் பொருளாதார தடை எச்சரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #TradeWar

ஆப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு மாற்ற வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். #USChinaTradeWar #DonaldTrump #Apple
வாஷிங்டன்:
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் சீனப் பொருட்கள் குவிந்ததுடன் விலையும் மலிவாக கிடைப்பதால் அமெரிக்க பொருட்களின் வர்த்தகம் சரிந்தது. இது அமெரிக்க அதிபர் டிரம்பின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே, அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைப்பிடித்து வரும் டிரம்ப், சீனப் பொருட்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வரை வரி விதித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கு சீனா கூடுதல் வரி விதித்தது. ஏற்கனவே இருக்கும் 25 சதவீத வரியுடன் தற்போது கூடுதல் வரியை விதித்ததால் அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்தது.
இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் முதல் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரியை அமெரிக்கா விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்த வர்த்தக போரில் அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் கடுமையான பாதிப்புக்களை சந்தித்து வருகிறது. பெரும்பாலான ஆப்பிள் போன்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் போது ஆப்பிள் போன்கள் கூடுதல் வரிவிதிப்புக்கு உள்ளாகிறது. இதனால் ஆப்பிள் போன்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆப்பிள் போன்களின் மீதான கூடுதல் வரிவிதிப்பை தவிற்க வேண்டுமானால் அதன் உற்பத்தியை சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு மாற்ற வேண்டும் என அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-
சினாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது நாங்கள் கூடுதல் வரியை விதிப்பதால் ஆப்பிள் செல்போன்களின் விலை உயரலாம். ஆனால், ஆப்பிள் போன்கள் மீது பூஜ்ஜிய வரி விதிப்பதற்கும், வரி ஊக்கத்தொகை பெருவதற்கும் ஒரு சுலபமான தீர்வு உள்ளது.
அதன் உற்பத்தியை சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு மாற்ற வேண்டும் இது தான் அந்த தீர்வு. எனவே, போன் உற்பத்தி தொழிற்சாலைகளை அமெரிக்காவில் உருவாக்குங்கள். வரிவிதிப்பை தவிற்பதன் மூலம் கிடைக்கும் சலுகைகளால் அமெரிக்க தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுவதை ஆப்பிள் நிறுவனத்தால் சரிகட்ட முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #USChinaTradeWar #DonaldTrump #Apple
×

X