search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்கள்"

    எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் 5 வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்களை அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #LokSabhaElections2019 #SC #EVMs #VVPATcounting
    புதுடெல்லி:

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை  தேர்தல்களில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் சோதனை முயற்சியாக ஒரு வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரம் (VVPAT) அமைக்கப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது. ஆனால், இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

    மின்னணு இயந்திரங்களில் வாக்கு எண்ணும் அதேவேளையில் வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்களில் உள்ள 50 சதவீதம் ஒப்புகை சீட்டையும் எண்ணக்கோரி திமுக, காங்கிரஸ், தி.மு.க., தெலுங்கு தேசம் உள்ளிட்ட 21 கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.



    இந்த வழக்கில் முன்னர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், இது சாத்தியமில்லாதது என்றும், 50 சதவீத வி.வி.பாட் ஒப்புகை சீட்டுகளை எண்ணி பார்த்தால், 6 நாள் கழித்துதான் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியும் என்றும் தெரிவித்தது.

    வி.வி.பாட் இயந்திர ஒப்புகை சீட்டுக்களை எண்ணுவது தொடர்பாக ஊழியர்களுக்கு எந்த பயிற்சியையும் அளிக்கவில்லை. இனி அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் சாத்தியமில்லை என்றும் தெரிவித்தது.

    இந்நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் 5 வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்களை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    நாடு முழுவதும் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அமைந்துள்ள 4 ஆயிரத்து 125 சட்டசபை தொகுதிகளில் உள்ள ஏதாவது ஒரு வாக்குச்சாவடியில் தலா ஒரு வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரத்தை முன்னர் அமைக்க வேண்டிய இடத்தில் தற்போது சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தலா 5 இயந்திரங்களை அமைக்க நேரிட்டுள்ளதால் 20 ஆயிரத்து 625 வி.வி.பாட் இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  #LokSabhaElections2019 #SC #EVMs #VVPATcounting 
    ×