search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாஜ்பாய் கவலைக்கிடம்"

    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #VajpayeeHealth
    புதுடெல்லி:

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தவண்ணம் உள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இன்று மருத்துவமனைக்கு  சென்று வாஜ்பாய் உடல்நிலை குறித்து விசாரித்தார்.



    மேலும் வாஜ்பாயின் உடல்நிலை பற்றி கேட்டு வேதனை அடைந்ததாகவும், அவர் விரைவில் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் ரத்து செய்துள்ளார்.

    இதுதொடர்பாக கெஜ்ரிவாலின் ஊடக ஆலோசகர் நாகேந்தர் ஷர்மா கூறுகையில், “முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை மோசமடைந்துள்ள இந்த சூழலில், தனது பிறந்தநாளை தொண்டர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக வீட்டிற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் தொண்டர்களை கேட்டுக்கொண்டார்”. #AtalBihariVajpayee #AIIMS #VajpayeeHealth

    ×