search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வானிலை நிலவரம்"

    • மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.
    • மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.

    தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35 முதல் 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஸ்மார்ட்போன்களில் வெப்பநிலை அறிந்து கொள்வதை போன்று வெள்ள பாதிப்புகளையும் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. #smartphone #WeatherForecast



    ஸ்மார்ட்போன்களில் வெப்பநிலை, காற்றழுத்தம் போன்றவற்றை டிராக் செய்யக் கூடிய நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் வெள்ளம் போன்ற பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும் வானிலையை முன்கூட்டியே கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளம் மற்றும் இதர இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே கண்டறிய ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

    "நம் ஸ்மார்ட்போன்களில் உள்ள சென்சார்கள் நம் சுற்றுச்சூழல் மற்றும் ஈர்ப்பு விசை மற்றும் புவியின் காந்த புலம், காற்றழுத்தம், வெப்பநிலைகள், ஒலி அளவுகள் மற்றும் பலவற்றை தொடர்ந்து டிராக் செய்து வருகிறது," என மூத்த ஆராயாச்சியாளரும், டெல் அவிவ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியருமான காலின் பிரைஸ் தெரிவித்தார். 


    கோப்பு படம்

    "உலகம் முழுக்க சுமார் 300 முதல் 400 கோடி ஸ்மார்ட்போன்களில் இந்த தகவல்கள் பரவிக்கிடக்கின்றன. இந்த தகவல் கொண்டு வானிலையை மிக துல்லியமாக டிராக் செய்து மற்ற இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியும்," என அவர் மேலும் தெரிவித்தார்.

    ஆய்வின் ஒரு பகுதியாக நான்கு ஸ்மார்ட்போன்களை கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் வைத்து, அதன் டேட்டாவை கொண்டு சூறாவளி போன்றவற்றை கணிக்க பயன்படுத்தினர், இவை கடலில் ஏற்படும் புயலுக்கு இணையானது. இவற்றுடன் இவர் லண்டனை சேர்ந்த வெதர்சிக்னல் எனும் செயலியையும் பயன்படுத்தினர்.

    ஸ்மார்ட்போன்களால் வானிலை அறிக்கையை உடனுக்குடன் வழங்கக்கூடிய நிலையில், மக்கள் வானிலை விவரங்களை க்ளவுட் மூலம் செயலியில் அதனை தெரிந்து கொள்கின்றனர். இந்த தகவல்களை கொண்டு ஆபத்தான பகுதிகளை கண்டறிந்து அவர்களுக்கு முன்கூட்டியே தகவல்களை வழங்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். #smartphone #WeatherForecast
    ×