search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வான்வழி தாக்குதல்"

    ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 28 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistan #ISMilitantskilled
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் பதுங்கியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து ராணுவத்தினர் இன்று வான்வழி தாக்குதல் நடத்தினர்.
     
    இந்த தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் உளவுப்பிரிவின் பொறுப்பாளரான செதிக் யர் உள்பட 28 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistan #ISMilitantskilled
    சிரியா நாட்டின் கிழக்குப்பகுதியில் ஈராக் எல்லையோரம் அமெரிக்க படைகள் ஐ.எஸ் பயங்கவாதிகளை குறிவைத்து நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 54 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Syria
    பெய்ரூட்:

    சிரியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கமும் உள்நாட்டு போராளிகளுக்கு உதவுவதாக களம் இறங்கியது. ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை அழிப்பதாக கூறி அமெரிக்கக்கூட்டு படைகளும் ஈராக்கில் நுழைந்து போர் நடத்தி வருகின்றன.

    இந்நிலையில், ஈராக் சிரியா எல்லைப்பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலர் பதுங்கி இருக்கின்றனர். இவர்கள் மீது போர் விமானங்கள் மூலம் அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 28 பொதுமக்கள் உட்பட 54 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியா போரை கண்காணித்து வரும் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

    ஆனால் இந்த தாக்குதல் குறித்து இதுவரை அமெரிக்கப்படை தரப்பில் இருந்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. #Syria
    சிரியாவின் ஹசாகே மாகாணத்தில் அமெரிக்க கூட்டுப்படையினர் நேற்று நடத்திய வான்வழி தாக்குதல்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர். #Syria USledairstrike

    பெய்ரூட்:

    சிரியா நாட்டின் பல பகுதிகளை ஐ.எஸ். அமைப்பினர் கைப்பற்றி வருகின்றனர். பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக சிரியா நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா தலைமையிலான ஜிகாதி ஒழிப்பு படையினர் தொடர்ந்து வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் பலியாகின்றனர்.

    இந்நிலையில், சிரியா நாட்டின் ஹசாகே மாகாணத்தில் உள்ள ஹிடாஜ் கிராமத்தில் பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்க கூட்டுப்படையினர் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக அங்கு இயங்கிவரும் பிரிட்டனை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 



    இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் மற்றும் தாக்குதல்கள் காரணமாக 3.5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Syria USledairstrike
    ×