search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழைக்காய் சமையல்"

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கபாப் வகைகளை வீட்டிலேயே தயார் செய்து ருசிக்கலாம். பன்னீர் கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பன்னீர் துருவல் - அரை கப்
    வாழைக்காய் - 1
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி - 1 துண்டு (நறுக்கவும்)
    பொட்டுக்கடலை மாவு - கால் கப்
    உப்பு - தேவைக்கு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை:

    வாழைக்காயை நன்றாக வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.

    இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மசித்த வாழைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பன்னீர், மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி தழை, பொட்டுக்கடலை மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த கலவையை விரும்பிய வடிவங்களில் பிடித்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    ருசியான பன்னீர் கபாப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுரைக்காய், முட்டைகோஸ் போன்றவற்றில் செய்யப்படும் கோப்தாக்களை விட வாழைக்காய் கோப்தா ருசி மிகுந்தது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோப்தாவிற்கு...

    வாழைக்காய் - 3
    உருளைக்கிழங்கு - 2
    இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    கிரேவிக்கு...

    இஞ்சி பேஸ்ட் - 2 டீஸ்பூன்
    தக்காளி சாறு - 1/4 கப்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    பிரியாணி இலை - 1
    சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
    மல்லி தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கடலை மாவு - 1 டீஸ்பூன்
    வெதுவெதுப்பான நீர் - 1 கப்
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது



    செய்முறை :

    வாழைக்காய், உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து கொள்ளவும்.

    ஒரு பௌலில் கோப்தாவிற்கு கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெயைத் தவிர, அனைத்துப் பொருட்களையும் போட்டு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

    பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டையை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பிரியாணி இலை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி சேர்த்து வதக்கி, அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

    பின் அதில் தக்காளி சாற்றினை ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் கடலை மாவை சேர்த்து கிளறி, வாணலியில் ஊற்றி கிளறி, அடுத்து பொரித்து வைத்துள்ள கோப்தாக்களை சேர்த்து 4-5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

    கடைசியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான வாழைக்காய் கோப்தா கிரேவி ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் மாலையில் சாப்பிடுவதற்கு ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? வீட்டில் வாழைக்காய் இருந்தால், அதனைக் கொண்டு சிப்ஸ் செய்து கொடுக்கலாம்
    தேவையான பொருட்கள் :

    வாழைக்காய் - 1
    உப்பு - தேவையான அளவு
    மிளகுத் தூள்/மிளகாய் தூள் - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு



    செய்முறை :

    வாழைக்காயை நீரில் கழுவி, இரு முனைகளையும் வெட்டி தோலுரித்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதனை மெல்லியதாக, வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    பின் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடானதும், அதில் வாழைக்காய் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, ஒரு பௌலில் போட்டு, அதில் மிளகுத் தூள்/மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறினால், வாழைக்காய் சிப்ஸ் ரெடி.

    இதனை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

    சூப்பரான வாழைக்காய் சிப்ஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×