என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » விடூ போட்டி இயக்கம்
நீங்கள் தேடியது "விடூ போட்டி இயக்கம்"
மிடூ, விடூ போட்டி இயக்கங்கள் உருவாகியுள்ள நிலையில் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் தொடர்ந்து உறவுக்கு வற்புறுத்தியத்தால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Maharashtraman #womanpesters #illicitaffair
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் தலைநகர் மும்பையில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பர்பானி மாவட்டத்தை சேர்ந்தவர் சச்சின் மிட்காரி(38).பர்பானி நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிவந்த சச்சினுக்கும் உடன் பணியாற்றும் ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் நட்பாக அரும்பிய இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாகவும், கள்ளத் தொடர்பாகவும் உருவெடுத்தது. ஏற்கனவே திருமணமான சச்சினுடன் உடலுறவு கொள்வதில் அதிக ஆர்வம் காண்பித்த அந்தப்பெண் தொடர்ந்து அடிக்கடி அவரை உறவுக்கு அழைத்து நச்சரித்து வந்துள்ளார்.
தனது தணியாத ஆசைக்கு இணங்காவிட்டால் போலீசில் பாலியல் புகார் அளிக்கப் போவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால், மன உளைச்சலுக்குள்ளான சச்சின் நேற்று பர்பானி-வஸ்மத் சாலையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். #Maharashtraman #womanpesters #illicitaffair #SachinMitkari #Parbhani
பாடகி சின்மயி உள்ளிட்டவர்களால் பிரபலமடைந்து வரும் #மிடூ இயக்கம் போல் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்த #விடூ இயக்கம் தொடங்கப்பட்டது. #Metoo #WeToo #WeToomovementformen
சென்னை:
இந்தியாவில் தற்போது பல துறைகளை சேர்ந்த பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீடூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பல ஆண்கள் இந்த “மீடூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
அவ்வகையில், பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்த விடூ இயக்கம் தொடங்கப்பட்டது. டுவிட்டர் மூலம் பிரபலமாகிவரும் இந்த இயக்கத்தில் பெண்களால் ஏமாற்றப்பட்ட பலரும் தங்களது சோக அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
சினிமாத்துறை, கல்வித்துறையில் இதுபோல் பெண்களால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள் உள்பட சுமார் 1600 பேர் இங்கு தங்களது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளனர். இதில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வும் தனது அனுபவத்தை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Metoo #WeToo #WeToomovementformen
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X