என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » விற்பனை தடை
நீங்கள் தேடியது "விற்பனை தடை"
இந்தியாவில் ‘இ சிகரெட்’ விற்பனைக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. #ECigaratte
புதுடெல்லி:
சிகரெட்டை போன்றே ‘இ சிகரெட்’டும் புற்று நோயை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளதால் அதற்கு தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்ய 3 துணைக்குழுக்களை அமைத்துள்ளதாக சமீபத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்தியாவில் ‘இ சிகரெட்’ விற்பனைக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. டெல்லியில் நடைபெற்ற மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. ‘இ சிகரெட்’ தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
‘இ சிகரெட்’ என்பது சிகரெட்டை போலவே இருக்கும் ஒரு மின்னணு கருவி. சிகரெட் புகைக்க நினைக்கும் போது இதை வாயில் வைத்து உறிஞ்சினால் உள்ளே இருக்கும் நிக்கோடின் புகை கிளம்பும். அந்த புகையை உள்ளிழுத்தால் சிகரெட் புகைப்பது போன்ற திருப்தியை ஏற்படுத்தும். #ECigaratte

×

X