என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வில் யங்
நீங்கள் தேடியது "வில் யங்"
நியூசிலாந்து தொடக்க பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய பந்து வீச்சாளர்களை சோர்வடையச் செய்தனர்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. ஷ்ரேயாஸ் அய்யர் அறிமுக போட்டியிலேயே சதம் அடிக்க ஷுப்மான் கில் (52) மற்றும் ஜடேஜா (50) அரைசதம் அடிக்க இந்தியா 111.1 ஓவரில் 345 ரன்கள் குவித்தது.
நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி 69 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜேமிசன் 3 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. டாம் லாதம், வில் யங்க் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணியின் பந்து வீச்சாளர்களால் இந்த ஜோடியை பிரிக்க எடுத்த முயற்சிகள் அனைத்திற்கும் பலன் கிடைக்கவில்லை.
இதனால் இருவரும் அரைசதம் அடித்தனர். ஐந்து பந்து வீசு்சாளர்களையும் சோர்வடையச் செய்த நியூசிலாந்து தொடக்க ஜோடி விக்கெட்டை இழக்காமல் 57 ஓவரில் 129 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
டாம் லாதம் 165 பந்தில் 50 ரன்களும், வில் யங் 180 பந்தில் 75 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
×

X