search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவியன் ரிச்சர்ட்ஸ்"

    இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி எனக்கு பிடித்தமான வீரர்களில் ஒருவர் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் விவியன் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார். #AUSvIND #ViratKohli #VivianRichards
    சென்னை:

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் விவியன் ரிச்சர்ட்ஸ் சென்னையில் நடந்த ஆன்டிகுவா அமெரிக்கா பல்கலைக்கழக மருத்துவ பள்ளி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது சிறந்ததாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்டில் தோற்றாலும் மேலும் 2 டெஸ்ட்டுகள் உள்ளன.

    சிறப்பான யூக்திகளை வகுத்து ஆடினால் இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் தொடரை கைப்பற்ற இன்னும் வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்.

    முந்தையை இந்திய அணியை விட தற்போதுள்ள இந்திய அணி வலுவாக இருக்கிறது. இந்த முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாவிட்டால் இனிமேல் எப்போதும் வெல்ல இயலாது.

    விராட் கோலி எனக்கு பிடித்தமான வீரர்களில் ஒருவர் ஆவார். அவர் தனக்காகவும், அணிக்காகவும் ஆக்ரோ‌ஷமான போக்கை கையாள்வது தவறில்லை. மைதானத்தில் போட்டி மனப்பான்மையோடு மோதுவது நல்லது தான்.

    ஆனால் தனிப்பட்ட முறையில் வார்த்தைகளை பயன்படுத்துவது இனவெறி ரீதியில் சீண்டுவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். எதிர் அணியினர் சீண்டினால் கோலி தனது ஆட்டம் மூலம் மீண்டும் திருப்பி தருகிறார்.

    ஒரு காலத்தில் கிரிக்கெட் என்றால் வெஸ்ட்இண்டீஸ் தான் என்ற நிலை இருந்தது தற்போது பல்வேறு பிரச்சினைகளால் நிலைகுலைந்துள்ளது.

    20 ஓவர் ‘லீக்’ போட்டிகளில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளும் பாதிப்பு ஏற்படக்கூடாது. இதன் மூலம் அதிகமான வருவாய் கிடைத்தாலும் நாட்டுக்கு விளையாடுவதில் தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    சர்வதேச போட்டிகளில் நாட்டுக்காக விளையாடும் போது ‘லீக்’ போட்டிக்கு முன்னுரிமை தரக்கூடாது.

    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சுமித், வார்னர் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேட்ச் பிக்சிங், சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் கிரிக்கெட் புத்துணர்வுடன் இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #AUSvIND #ViratKohli #VivianRichards
    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை மோதியுள்ள டெஸ்ட் ஆட்டங்கள் குறித்து சில விவரங்களை காண்போம். #INDvWI
    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே இதுவரை 22 டெஸ்ட் தொடர் நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா 8 டெஸ்ட் தொடரையும், வெஸ்ட்இண்டீஸ் 12 தொடரையும் வென்றுள்ளன. 2 டெஸ்ட் தொடர் சம நிலையில் முடிந்தது.

    வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 6 டெஸ்ட் தொடரையும் (2002-2016) இந்திய அணியே கைப்பற்றி வலுவானதாக இருக்கிறது. இதில் 3 தொடர் சொந்த மண்ணிலும், 3 தொடர் வெஸ்ட்இண்டீசிலும் நடந்தவையாகும். வெஸ்ட்இண்டீஸ் அணி இந்தியாவில் 11 டெஸ்ட் தொடரில் விளையாடி உள்ளது. இதில் இந்தியா 4-ல், வெஸ்ட்இண்டீஸ் 5-ல் வெற்றி பெற்றன. 1983-ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது.

    இரு அணிகளும் 94 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் இந்தியா 18-ல், வெஸ்ட்இண்டீஸ் 30-ல் வெற்றி பெற்றுள்ளன. 46 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

    இந்திய அணி 1979-ம் ஆண்டு கான்பூர் மைதானத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 644 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருக்கிறது. வெஸ்ட்இண்டீஸ் டெல்லியில் 8 விக்கெட் இழப்புக்கு 644 ரன் (1959) குவித்து இருந்தது.

    இந்திய அணி 1987-ம் ஆண்டு டெல்லியில் 75 ரன்னில் சுருண்டதே குறைந்தபட்ச ஸ்கோராகும். வெஸ்ட்இண்டீஸ் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் 103 ரன் ஆகும்.

    கவாஸ்கர் 27 டெஸ்டில் விளையாடி 2749 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அதிகபட்சமாக 236 ரன் குவித்துள்ளார். கிளைவ் லாயிட் 2344 ரன்னும், சந்தர்பால் 2171 ரன்னும், டிராவிட் 1978 ரன்னும், விவியன் ரிச்சர்ட்ஸ் 1927 ரன்னும் எடுத்துள்ளனர்.

    ரோகன் கசாய் (வெஸ்ட்இண்டீஸ்) 1958-ம் ஆண்டு கொல்கத்தாவில் 256 ரன் குவித்ததே ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன் ஆகும். கவாஸ்கர் அதிகபட்சமாக 13 சதம் எடுத்துள்ளார். சோபர்ஸ், ரிச்சர்ட்ஸ் தலா 8 செஞ்சூரி அடித்துள்ளனர்.

    கபில்தேவ் 89 விக்கெட் (25 டெஸ்ட்) கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். மால்கம் மார்‌ஷல் 76 விக்கெட்டும், கும்ப்ளே 74 விக்கெட்டும், வெங்கட்ராகவன் 68 விக்கெட்டும், ஆன்டி ராபர்ட்ஸ் 67 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

    கபில்தேவ் 83 ரன் கொடுத்து 9 விக்கெட் கைப்பற்றியது ஒரு இன்னிங்சின் (அகமதாபாத், 1983) சிறந்த பந்துவீச்சு ஆகும். ஒரு டெஸ்ட்டில் அதிகபட்சமாக நரேந்திர ஹர்வானி 16 விக்கெட் (சென்னை, 1988) கைப்பற்றினார். #INDvWI
    ×