search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீர சவர்க்கார்"

    சுதந்திரப் போராட்ட வீரரான வீர சவர்க்காருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    சுதந்திரப் போராட்ட வீரரான வீர சவர்க்காரின் பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது சேவையை நினைவு கூரும் வகையில் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், சுதந்திரப் போராட்ட வீரரான வீர சவர்க்காருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், வீர சவர்க்காரின் மன தைரியம், தேசப்பற்று மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை வலுவான இந்தியாவை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்துள்ளன. நிறைய பேருக்கு அவர் முன்னுதாரணமாக விளங்கி வருகிறார் என பதிவிட்டுள்ளார்.
    புரட்சியையும் கவிதையையும் ஒருசேர சிறப்பாக கையாண்டவர் வீர சவர்க்கார் என பிரதமர் நரேந்திர மோடி இன்று புகழாரம் சூட்டியுள்ளார். #mankibhat #veerSavarkar
    புதுடெல்லி:

    ‘மன் கி பாத்’ என்னும் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி வழியாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

    இன்றைய உரையில் பாரதத்தின் முதல் பிரதமர் மறைந்த ஜவஹர்லால் நேரு மற்றும் வீர் வினாயக் தாமோதர் சவர்க்கார் ஆகியோருக்கு அவர் புகழாஞ்சலி செலுத்தினார்.

    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் முன்னர் சுட்டிக்காட்டியதை இன்று மேற்கோள் காட்டிய மோடி, புரட்சியையும் கவிதையையும் ஒருசேர சிறப்பாக கையாண்டவர் வீர சவர்க்கார் என குறிப்பிட்டார். #mankibhat #veerSavarkar
    மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் உடலில் உண்மையான இந்து ரத்தம் ஓடினால் வீர சவர்க்காருக்கு பாரத ரத்னா பட்டம் தர வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது. #NDA #pureHindublood #BharatRatnatoSavarkar
    மும்பை:

    மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் உடலில் உண்மையான இந்து ரத்தம் ஓடினால் வீர சவர்க்காருக்கு பாரத ரத்னா பட்டம் தர வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாம்னா’ பத்திரிகையின் இன்றைய பதிப்புடன் வெளியாகியுள்ள இணைப்பு பகுதியில் ஒரு சிறப்பு கட்டுரை வெளியாகியுள்ளது. சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ரவத் எழுதியுள்ள அந்த கட்டுரையில் கூறியுள்ளதாவது:-

    பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னாவைப் போல் வீர சவர்க்காரும் ‘பாரிஸ்ட்டர்’ பட்டம் பெற்றவர்தான். ஆனால், ஜின்னா தனது படிப்பை பாகிஸ்தான் பிரிவினைக்கு பயன்படுத்தி கொண்டார்.

    வீர சவர்க்கார் தனது படிப்பை இந்த நாட்டுக்காக தியாகம் செய்தார். இந்து மதத்தில் உள்ள நான்கு வர்ணாசிரம கொள்கையை அவர் கடுமையாக எதிர்த்து வந்தார். அசைவ உணவு சாப்பிடும் பழக்கத்தை அவர் ஆதரித்தார். இந்துத்துவா கொள்கைகளை மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தாலும், மதம்சார்ந்த மூடப்பழக்கங்களை கண்மூடித்தனமாக அவர் ஆதரித்தது கிடையாது.

    அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இருந்து முகமது அலி ஜின்னா புகைப்படத்தை நீக்கியதற்கு பதிலடி தரும் விதமாக சில அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள வீர சவர்க்காரின் புகைப்படம் நீக்க வேண்டும் என்று கூக்குரல் எழுந்துள்ளது. ஜின்னாவை ஆதரிப்பவர்கள் வீர சவர்க்காரை வெறுப்பதை வைத்தே அவர் இந்து மதத்தின் எவ்வளவு பெரிய அடையாளமாக கருதப்படுகிறார்? என்பதை புரிந்து கொள்ளலாம்.

    இப்படிப்பட்ட வீர சவர்க்காருக்கு மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் உடலில் உண்மையான இந்து ரத்தம் ஓடினால் பாரத ரத்னா பட்டம் தர வேண்டும். இல்லாவிட்டால், அரசியலுக்காக மட்டுமே நாங்கள் இந்துத்துவாவை பயன்படுத்துகிறோம் என்று அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #NDA #pureHindublood #BharatRatnatoSavarkar 
    ×