search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெஸ்ட் இண்டீஸ் ஏ"

    இங்கிலாந்தில் நடைபெற்று வந்த வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDA
    இந்தியா ‘ஏ’ - வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட 2-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள டவுன்டனில் நடைபெற்று வந்தது.

    கடந்த 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ பேட்டிங் தேர்வு செய்தது. கேம்ப்பெல் 41 ரன்னிலும், தாமஸ் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ப்ரூக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 90.5 ஓவரில் 302 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ப்ரூக்ஸ் 122 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுக்களும், நதீம் 3 விக்கெட்களும் வீழ்த்தினார்.

    இதையடுத்து இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா ‘ஏ’ 192 ரன்னில் சுருண்டது. கேப்டன் கருண் நாயர் 42 ரன்களும், கடைசி ஆட்டக்காரராக களம் இறங்கிய விஜய் சங்கர் 30 ரன்களும் சேர்த்தனர். அங்கிட் பாவ்னே 43 ரன்கள் எடுத்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி சார்பில் ரேமன் ரெய்பர் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டும், ஒஷானே தாமஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி முதலில் சிறப்பாக ஆடியது. அதன்பின் இந்திய பந்து  வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசினர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜான் கேம்ப்பெல் 61 ரன்களும், ஜெமன் பிளாக்வுட் 67 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இதனால் அந்த அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா ‘ஏ’ சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், குர்பானி 3 விக்கெட்டும், ஜெயந்த் யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

    ஒட்டுமொத்தமாக வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 320 ரன்கள் அதிகம் பெற்றிருந்தது. இதனால் இந்தியா ‘ஏ’ அணிக்கு 321 வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. ஹனுமா விஹாரி மற்றும் கேப்டன் கருண் நாயர் அரைசதமடித்து சேஸிங் செய்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள்.



    நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா ‘ஏ’ அணி 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்திருந்தது. ஹனுமா விஹாரி 66 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

    இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. விஹாரி மேலும் இரண்டு ரன்கள் எடுத்து 68 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த பாவ்னே 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் விக்கெட் கீப்பர் ரிஷ் பந்த் சிறப்பான ஆட்டத்தை ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 71 பந்தில் 67 ரன்கள் அடிக்க இந்தியா ‘ஏ’ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி வெற்றி பெற இன்னும் 107 ரன்கள் தேவைப்படுகிறது. #INDA #WIA
    இந்தியா ‘ஏ’ - வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட 2வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள டவுன்டனில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ பேட்டிங் தேர்வு செய்தது. கேம்ப்பெல் 41 ரன்னிலும், தாமஸ் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ப்ரூக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 90.5 ஓவரில் 302 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ப்ரூக்ஸ் 122 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுக்களும், நதீம் 3 விக்கெட்களும் வீழ்த்தினார்.



    இதையடுத்து இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியா ஏ அணியில் கேப்டன் கருண் நாயர் 42 ரன்களும், கடைசி ஆட்டக்காரராக ஆடிய விஜய் சங்கர் 30 ரன்களும் எடுத்தனர். இறுதியில், இந்தியா ஏ அணி 48 ஓவர்களில் 192 ரன்களுக்கு சுருண்டது. அங்கிட் பாவ்னே இறுதி வரை 43 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி சார்பில் ரேமன் ரீபர் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டும், ஒஷானே தாமஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி முதலில் சிறப்பாக ஆடியது. அதன்பின் இந்திய பந்து  வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசினர்.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜான் மேம்ப்பெல் 61 ரன்னுடனும், ஜெமன் பிளாக்வுட் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இதனால் அந்த அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா ஏ சார்பில் மொகமது சிராஜ் 4 விக்கெட்டுக், ரஜ்னீஷ் குர்பானி 3 விக்கெட்டும், ஜெயந்த் யாத்வ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

    தொடர்ந்து, 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது.
    ஹனுமா விஹாரி மற்றும் கேப்டன் கருண் நாயர் அரை சதமடித்தனர்.

    மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா ஏ அணி 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்துள்ளது. ஹனுமா விஹாரி 66 ர்ன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

    இன்னும் ஒரு நாள் மீதமிருக்க, 107 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் இந்தியா ஏ வெற்றி பெறும் என்றே தெரிகிறது.
    வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 192 ரன்களில் சுருண்டது. #INDA #WIA
    இந்தியா ‘ஏ’ - வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட 2-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் இங்கிலாந்தில் உள்ள டவுன்டனில் தொடங்கியது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி கேம்ப்பெல், தாமஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கேம்ப்பெல் 41 ரன்னிலும், தாமஸ் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ப்ரூக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார்.

    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 90.5 ஓவரில் 302 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ப்ரூக்ஸ் 122 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுக்களும், நதீம் 3 விக்கெட்களும் வீழ்த்தினார்.

    இதைத்தொடர்ந்து இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியா ஏ அணியில் கருண் நாயர், அங்கிட் பாவ்னே மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து ஆடினர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. கேப்டன் கருண் நாயர் 42 ரன்களும், கடைசி ஆட்டக்காரராக ஆடிய விஜய் சங்கர் 30 ரன்களும் எடுத்தனர். 



    இறுதியில், இந்தியா ஏ அணி 48 ஓவர்களில் 192 ரன்களுக்கு சுருண்டது. அங்கிட் பாவ்னே இறுதி வரை 43 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி சார்பில் ரேமன் ரீபர் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டும், ஒஷானே தாமஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. இது இந்திய ஏ அணியை விட 206 ரன்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி 133 ரன்னில் ஆல்அவுட் ஆனது. #INDA #WIA
    இங்கிலாந்தில் இந்தியா ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா ‘ஏ’ அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ - இந்தியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் இந்தியா ‘ஏ’ அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா (0), மயாங்க் அகர்வால் (0), ஆர் சம்ர்த் (2) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து இந்தியா ‘ஏ’ அணியால் மீள முடியவில்லை.



    விஹாரி 37 ரன்களும், விஜய் ஷங்கர் 34 ரன்களும் சேர்க்க 42.1 ஓவர்கள் மட்டுமே விளையாடி 133 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியின் ஹோல்டர் மற்றும் லெவிஸ் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்களும், ரெய்பெர் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்துள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் பிரத்வி ஷா, ஹனுமா விஹாரி சதத்தால் இந்தியா ‘ஏ’ அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDAvWIA #WIAvINDA

    லண்டன்:

    இந்தியா ‘ஏ’, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்றைய லீக் போட்டியில் இந்தியா ‘ஏ’ - வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இந்திய ‘ஏ’ பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் பிரித்வி ஷா, ரஷப் பந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரிஷப் பந்த் 5 ரன்னிலும், அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டக்அவுட்டிலும் வெளியேறினார்கள்.

    அதன்பின் பிரி்த்வி ஷா உடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரித்வி ஷா 60 பந்தில் 16 பவுண்டரியுடன் 102 ரன்கள் சேர்த்தார். விஹாரி 131 பந்தில் 13 பவுண்டரி, 5 சிக்சருடன் 147 ரன்கள் விளாசினார். இருவரின் அபார சதத்தால் இந்தியா ‘ஏ’ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் குவித்தது.



    பின்னர் 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜெர்மெய்னி பிளக்வுட் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார். அதன்பின் களமிறங்கிய ஆண்ட்ரே மெக்கேர்தி 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

    அதைத்தொடர்ந்து சந்தர்பால் ஹேம்ராஜ் - சுனில் அம்ப்ரிஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்ந்தனர். சந்தர்பால் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டெவான் தாமஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சுனில் 32 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரெய்மான் ரீபர் 26 ரன்னிலும், ராக்கீம் கார்ன்வால் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 37.4 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா ‘ஏ’ பந்துவீச்சில் அக்ஸார் பட்டேல் 4 விக்கெட்களும், தீபக் சஹார் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். 

    இதன்மூலம் இந்தியா ‘ஏ’ அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியை வீழ்த்தியது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்ற இந்தியா ‘ஏ’ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதிப்போட்டி வருகிற ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ளது. #INDAvWIA #WIAvINDA
    வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் பிரத்வி ஷா, ஹனுமா விஹாரி சதத்தால் இந்தியா ‘ஏ’ அணி 354 ரன்கள் குவித்துள்ளது. #INDA
    இந்தியா ‘ஏ’, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    இன்றைய இந்தியா ‘ஏ’ - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய ‘ஏ’ பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் பிரித்வி ஷா, ரஷப் பந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரிஷப் பந்த் 5 ரன்னிலும், அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டக்அவுட்டிலும் வெளியேறினார்கள்.


    147 ரன்கள் குவித்த விஹாரி

    அதன்பின் பிரி்த்வி ஷா உடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரித்வி ஷா 60 பந்தில் 16 பவுண்டரியுடன் 102 ரன்கள் சேர்த்தார். விஹாரி 131 பந்தில் 13 பவுண்டரி, 5 சிக்சருடன் 147 ரன்கள் விளாசினார். இருவரின் அபார சதத்தால் இந்தியா ‘ஏ’ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் குவித்தது.


    102 ரன்கள் அடித்த பிரித்வி ஷா

    பின்னர் 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ஏ பேட்டிங் செய்து வருகிறது.
    இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணி மயாங்க் அகர்வால் சதத்தால் 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDA
    இங்கிலாந்தில் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தயா ‘ஏ’, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதின. இந்தியா ‘ஏ’ அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் மயாங்க் அகர்வால், ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிராக கடந்த போட்டியில் சதம் அடித்த மயாங்க் அகர்வால் இந்த போட்டியிலும் சதம் அடித்தார். அவர் 104 பந்தில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 112 ரன்கள் குவித்தார். மறுமுனையில் விளையாடிய ஷுப்மான் கில் 72 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 28.2 ஓவரில் 165 ரன்கள் சேர்த்தது.


    ஹனுமா விஹாரி

    அடுத்து களம் இறங்கிய ஹனுமா விஹாரி 69 ரன்களும், தீபக் ஹூடா 33 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் குவித்தது.

    பின்னர் 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து லயன்ஸ் அணி களம் இறங்கிறது. சர்துல் தாகூர் (3), கலீல் அஹமது (2) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து லயன்ஸ் 207 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா ஏ அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக இந்தியா ஏ அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
    ×