search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேட்பாளர்கள் பட்டியல்"

    பா.ஜனதா சார்பில் வெளியிடப்பட்ட 7 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலில் பிரபல போஜ்புரி மொழி சினிமா நடிகர் ரவிகிஷன், கோரக்பூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். #BJP #BhojpuriFilm #RaviKishan
    புதுடெல்லி:

    பா.ஜனதா சார்பில் மேலும் 7 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 7 பேரும் உத்தரபிரதேச மாநிலத்துக்கான வேட்பாளர்கள் ஆவர்.

    இவர்களில், பிரபல போஜ்புரி மொழி சினிமா நடிகர் ரவிகிஷன், கோரக்பூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இது, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கைவசம் இருந்த தொகுதியாகும். பிரவீன் நிஷாத், சாந்த் கபீர் நகரில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியின் பா.ஜனதா எம்.பி.யாக இருந்த சரத் திரிபாதி, அதே கட்சி எம்.எல்.ஏ.வை ஷூவால் அடித்து சர்ச்சையில் சிக்கியதால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச மந்திரி முகுத் பிகாரி, அம்பேத்கர் நகர் தொகுதியில் களம் இறங்குகிறார். இத்துடன் சேர்த்து இதுவரை மொத்தம் 420 வேட்பாளர்களை பா.ஜனதா அறிவித்துள்ளது.   #BJP #BhojpuriFilm #RaviKishan 
    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு இருக்கிறது. ‘சீட்’ கேட்டு தமிழக நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். #LSPolls #Congress
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    ஏற்கனவே, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் தயாரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களை தொடர்பு கொண்டு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ‘சீட்’ கேட்டு வருவதால், வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

    கன்னியாகுமரி தொகுதியை பெற போட்டா போட்டி நிலவுகிறது. வசந்தகுமார், ரூபி மனோகரன், ஊர்வசி அமிர்தராஜ், ராபர்ட் புரூஸ், அசோக் சாலமோன் என்று அந்தப் பட்டியல் நீள்கிறது. இதேபோல், திருவள்ளூர் (தனி) தொகுதிக்கு செல்வபெருந்தகை, விஸ்வநாதன், விக்டரி ஜெயக்குமார், ஜெயக்குமார் (நாமக்கல்), ராணி ஆகியோர் ‘சீட்’ கேட்டு வருகின்றனர்.

    ஆரணி தொகுதியில் போட்டியிட விஷ்ணுபிரசாத், நாசே ராமச்சந்திரன், சுமதி அன்பரசு ஆகியோர் வாய்ப்பு கேட்டு வருகின்றனர். திருச்சி தொகுதியில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது குஷ்புவும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருவதால் இழுபறி நீடிக்கிறது. ஈரோடு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படாத நிலையில், விருதுநகர், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாய்ப்பு கேட்டு வருகிறார்.

    கரூர் தொகுதியில் ஜோதிமணி போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பேங்க் சுப்பிரமணியன் பெயரும் அடிபடத் தொடங்கியுள்ளது. சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தில் மகன் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் மீதான வழக்குகளை காரணம் காட்டி கட்சித் தலைமை யோசிப்பதாக தெரிகிறது.



    இவ்வாறு காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் பல்வேறு குழப்பங்கள் இருந்து வரும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாகவே ‘சீட்’ கேட்டு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.  #LSPolls #Congress

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்ட மம்தா பானர்ஜி, 41 சதவீதம் இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். #Mamatareleases #TMClist #WBLSpolls
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, இங்குள்ள 42 தொகுதிகளில் போட்டியிடும் தனது வேட்பாளர் பட்டியலை இன்று கொல்கத்தாவில் வெளியிட்டார்.

    இதில் 41 சதவீதம் தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். தற்போது எம்.பி.களாக இருக்கும் 10 பேர் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் அவர்கள் கட்சிப்பணிகளை கவனிப்பார்கள் என தெரிவித்த மம்தா, வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜார்கண்ட் மாநிலத்தில் 5 தொகுதிகளிலும், அசாம் மாநிலத்தில் 6 தொகுதிகளிலும், பீகார் மாநிலத்தில் 2 தொகுதிகளிலும், அந்தமானில் உள்ள ஒரு தொகுதியிலும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். மேலும், ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பில் 10 தொகுதிகளில் போட்டியிடுவோம் எனவும் தெரிவித்தார்.



    உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாபில் மாநில கட்சிகளுக்கு ஆதரவு தருவோம்.

    மக்கள் மீது மோடி அரசு திணித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியாவில் நடைபெற்ற மோசடிகளில் மிகப்பெரிய மோசடியாகும். மத்தியில் ஆளும் பாஜக மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டி பிளவுப்படுத்த பார்க்கிறது. இந்த தேர்தலில் விவிஐபிக்கள் வரும் ஹெலிகாப்டர் மூலம் ஏராளமான பணத்தை கொண்டுவந்து வாக்களர்களுக்கு வினியோகிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். #Mamatareleases #TMClist #WBLSpolls
    ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் 152 வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டது. #RajasthanAssemblyElections2018 #Congresslist
    புதுடெல்லி:

    200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த தேர்தலில் போட்டியிடும் 152 வேட்பாளர்களின் பெயர்களை  கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டது.



    இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதல் மந்திரி அசோக் கேலாட், சர்தார்பூர் தொகுதியிலும், அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், டோங்க் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
          
    தேசிய மகளின் ஆணையத்தின் முன்னாள் தலைவர் கிரிஜா வியாஸ், உதய்பூர் தொகுதியிலும், தற்போது சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக பதவி வகிக்கும் ராமேஷ்வர் லால் டுடி, நோக்ஹா தொகுதியிலும் காங்கிரஸ் மூத்த தலைவர் சி.பி. ஜோஷி, நத்ட்வாரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    இந்த தேர்தலில் 162 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இருகட்டங்களாக  பா.ஜ.க. ஏற்கனவே வெளியிட்டுள்ளது.  #RajasthanAssemblyElections2018 #Congresslist
    ×