search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வோடபோன் ஐடியா"

    இந்திய டெலிகாம் சந்தையின் போக்கு பற்றி சமீபத்தில் வெளியாகி இருக்கும் அறிக்கைகளில் ரிலையன்ஸ் ஜியோ விரைவில் நாட்டின் முன்னணி நிறுவனமாக உருவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #RelianceJio



    முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் நாட்டின் முதல் டெலிகாம் நிறுவனமாக உருவெடுக்கும் என பென்ஸ்டெயின் மற்றும் கிரெடிட் சூசி வெளியிட்டிருக்கும் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய டெலிகாம் சந்தையில் 2016 ஆம் ஆண்டு கால்பதித்த ரிலையன்ஸ் ஜியோ இலவச அழைப்புகள் மற்றும் மலிவு விலை டேட்டா வழங்கி, குறுகிய காலத்தில் பிரபல நிறுவனமாக மாறியிருக்கிறது. இதற்கென ஜியோ செய்த முதலீடுகளை கடந்து, தற்சமயம் லாபம் ஈட்டி வருவதாக பென்ஸ்டெயின் தெரிவித்திருக்கிறது.

    முதலீடுகளின் மீதான லாபத்திற்கு நிலையற்ற நீண்ட கால முதலீடு முறைகள் மற்றும் ஜியோபோன்களில் இருந்து கிடைக்கும் வருவாய் உள்ளிட்டவை காரணமாக கூறப்படுகிறது. ஜியோ நிலையற்ற நீண்ட கால முதலீடு முறைகளை பின்பற்றி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.



    நீண்ட கால முதலீடுகளில் லாபத்தை ஈட்ட ரிலையன்ஸ் ஜியோ ஒரு பயனரிடம் இருந்து பெறும் வருவாயினை அதிகப்படுத்த வேண்டியிருக்கும் என பெயின்ஸ்டெயின் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் 12 மாதங்களில் ஜியோ வாடிக்கையாளர் எண்ணிக்கை மற்றும் சேவைகளுக்கான வருவாய் உள்ளிட்டவற்றில் முதலிடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

    தற்போதைய நிதியாண்டின் படி மூன்றாவது காலாண்டின் இறுதியில் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 38.7 கோடியாகவும், பாரதி ஏர்டெல் 28.4 கோடியாக இருக்கிறது. இதே காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ சுமார் 28 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பரில் மட்டும் சுமார் 85 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்திருப்பதாக டிராய் அறிவித்துள்ளது. #RelianceJio



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து இருப்பதாக மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்திருக்கிறது. மற்ற முன்னணி நிறுவனங்களான வோடபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் இதே காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர்.

    ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் 85.6 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்திருக்கிறது. இதன் மூலம் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 28.01 கோடியாக அதிகரித்து இருக்கிறது. 

    ஜி.எஸ்.எம்., சி.டி.எம்.ஏ. மற்றும் எல்.டி.இ. என மொத்த வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நவம்பர் மாத இறுதியில் 117.17 கோடியில் இருந்து டிசம்பர் மாத இறுதியில் 117.6  கோடியாக அதிகரித்து இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 0.36 சதவிகிதம் வளர்ச்சியடைந்திருக்கிறது என டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    வோடபோன் ஐடியா நிறுவனம் இந்த காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 23.32 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 41.87 கோடியாக இருக்கிறது. ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 34.03 கோடியாக இருக்கிறது. இந்நிறுவனம் சுமார் 15.01 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

    பகுதிவாரியாக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாடு முழுக்க தொடர்ந்து அதிகரித்து இருப்பதாக டிராய் அறிவித்திருக்கிறது. வடகிழக்கு தவிர மற்ற பகுதிகளில் வாடிக்கையாளர் எண்ணிக்கை கணிசமான வளர்ச்சி பெற்றிருந்தது. டிசம்பர் 2018 இல் மட்டும் 47.6 லட்சம் வாடிக்கையாளர்கள் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி சேவையை பயன்படுத்தி இருக்கின்றனர் என டிராய் தெரிவித்துள்ளது.
    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை போன்று வோடபோன் ஐடியாவும் புதிதாக மியூசிக் ஸ்டிரீமிங் செயலியை அறிமுகம் செய்ய இருக்கிறது. #VodafoneIdea #Apps



    பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் சொந்தமாக மியூசிக் ஸ்டிரீமிங் செயலியை வழங்கி வரும் நிலையில், வோடபோன் ஐடியா சொந்தமாக மியூசிக் ஸ்டிரீமிங் செயலியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ சொந்தமாக வின்க் மியூசிக் மற்றும் சாவன் செயலிகளை வழங்கி வரும் நிலையில் வோடபோன் புதிதாக செயலியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஐடியா மியூசிக் செயலியின் சேவையை நிறுத்தப்பட இருப்பதாக தெரிகிறது.

    ஐடியா மியூசிக் செயலியின் சேவை நிறுத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து விரைவில் புதிய மியூசிக் ஸ்டிரீமிங் செயலியை அறிமுகம் செய்வோம். புதிய செயலி ஒப்பந்த அடிப்படையில் அறிமுகமாகும். இதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது என வோடபோன் ஐடியா நிறுவனத்தை சேர்ந்த பலெஷ் சர்மா தெரிவித்தார்.



    வோடபோன் நிறுவனம் சமீபத்தில் ரூ.1,999 விலையில் புதிய சலுகையை அறிவித்தது. இச்சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. 2ஜி/3ஜி/4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு மொத்தம் 547.2 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.

    முன்னதாக ரூ.1699 சலுகையில் இதேபோன்ற பலன்களை வழங்கும் சலுகையை வோடபோன் அறிவித்தது. எனினும், ரூ.1,699 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. 2ஜி/3ஜி/4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 1.05 கோடி வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். #RelianceJio



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 1.05 கோடி வாடிக்கயைாளர்கள் இணைந்துள்ளதாக மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதைத் தொடர்ந்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. அவ்வாறு ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் கூட்டாக 2018 அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 1.08 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளன.

    அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். தவிர மற்ற டெலிகாம் நிறுவனங்கள் எதுவும் கூடுதலாக வாடிக்கையாளர்களை சேர்க்கவில்லை. 



    அக்டோபர் 2018 இல் மட்டும் வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ், எம்.டி.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சுமார் 1.01 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.

    இதில் வோடபோன் ஐடியா நிறுவனம் 73.61 லட்சம், ஏர்டெல் நிறுவனம் 18.64 லட்சம், டாடா டெலிசர்வீசஸ் 9.25 லட்சம், எம்.டி.என்.எல். நிறுவனம் 8,068 மற்றும் ஆர்.காம் நிறுவனம் 3,831 வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.

    செப்டம்பர் முதல் அக்டோபர் மாத இறுதி வரை இந்திய டெலிபோன் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 119.14 கோடியில் இருந்து 119.20 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஒரு மாதத்தில் 0.05 சதவிகிதம் வளர்ச்சியாகும்.
    வோடபோன் ஐடியா சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரீசார்ஜ் செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. #Vodafone #offers



    வோடபோன் ஐடியா நிறுவன பயனர்களுக்கு அந்நிறுவனம் புத்தாண்டு சலுகையை அறிவித்துள்ளது. புதிய சலுகையின் கீழ் தேர்வு செய்யப்பட்ட சலுகைகளில் ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.30 மதிப்புடைய அமேசான் பே வவுச்சர்கள் வழங்கப்படுகிறது. இந்த வவுச்சர்களை பயன்படுத்தி மொபைல் பில், டி.டி.ஹெச். ரீசார்ஜ், அமேசான் தளத்தில் வாங்கும் பொருட்களுக்கு செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.

    புதிய சலுகையை பெற வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.95 சலுகையை தேர்வு செய்ய வேண்டும், எனினும் அமேசான் பே வவுச்சர் பெறும் போது, ரீசார்ஜ் கட்டணம் ரூ.65 விலையில் கிடைக்கும். 

    புத்தாண்டு சலுகையின் கீழ் வோடபோன் ஐடியா ரூ.95 ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.30 அமேசான் பே வவுச்சர் வழங்குவதாக டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வவுச்சர் கொண்டு வாடிக்கையாளர்கள் மொபைல் பில், டி.டி.ஹெச். ரீசார்ஜ் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.



    வோடபோன் மற்றும் ஐடியா பிரீபெயிட் சேவையை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் ரூ.95 விலை சலுகையை தேர்வு செய்து அதற்கான பலன்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த சலுகை ஜனவரி 10 ஆம் தேதி வரை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் புதிய புத்தாண்டு சலுகை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    முன்னதாக வோடபோன் மற்றும் அமேசான் இணைந்து பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் சேவைக்கான சந்தாவில் 50 சதவிகித தள்ளுபடியை வழங்கின. தற்சமயம் வோடபோன் ரெட் போஸ்ட்பெயிட் சலுகைகளை பயன்படுத்துவோருக்கு அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.
    ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு புதிய மாதாந்திர தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பயனர்கள் அதிகபட்சம் ரூ.300 பெற முடியும். #Airtel



    வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களின் இணைப்பு கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டு இந்திய டெலிகாம் சந்தையில் புதிதாக வோடபோன் ஐடியா லிமிட்டெட் துவங்கப்பட்டது. புதிய நிறுவனம் இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பாரதி ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளியது.

    டெலிகாம் சந்தையில் புதிய போட்டியாளரை எதிர்கொள்ள ஏர்டெல் தயாராகிவிட்டது. அதன்படி ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு மாதம் ரூ.50 தள்ளுபடி அறிவித்துள்ளது. ரூ.399 மைபிளான் இன்ஃபினிட்டி சேவையை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.50 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.349 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும் இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் ரூ.300 தள்ளுபடி பெற முடியும். புதிய சலுகையின் மூலம் ஏர்டெல் போஸ்ட்பெயிட் துவக்க சலுகை வோடபோனின் ரெட் போஸ்ட்பெயிட் சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. வோடபோனின் போஸ்ட்பெயிட் சலுகைகள் ரூ.299 விலையில் துவங்கும் நிலையில் ஏர்டெல் சலுகை வரிகளுடன் சேர்த்து ரூ.385 விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    ஏர்டெல் ரூ.399 போஸ்ட்பெயிட் சலுகையில் பயனர்களுக்கு 20 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த மாதத்திற்கு கொண்டு செல்லும் வசதி வழங்கப்படுகிறது. எனினும், 12 மாதங்களுக்கு ஏர்டெல் நிறுவனம் மாதம் 20 ஜிபி டேட்டா வழங்குகிறது. 

    இதன் மூலம் மாதம் 40 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் ஏர்டெல் டிவி சந்தா மற்றும் வின்க் மியூசிக் சேவை உள்ளிட்டவற்றுக்கு இலவச சந்தா வழங்கப்படுகிறது.
    ×