search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷான் ரோல்டன்"

    வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கசட தபற' படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருக்கின்றனர்.
    பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற'. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம்.சி.எஸ்., பிரேம்ஜி, ஷான் ரோல்டன் உள்ளிட்ட 6 பேரும் படக்குழுவில் இணைந்துள்ளனர்.


    முன்னதாக மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் உள்ளிட்ட 6 படத்தொகுப்பாளர்கள் படத்தில் பணியாற்றியிருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி, விஜயலட்சுமி, அஜய் மாஸ்டர் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இளையராஜா இசை தான் ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் இசைக்கான தாக்கம் என்று சொல்லலாம். அதை படம் பார்க்கும் போது உணர்வீர்கள் என்று படவிழாவில் ஷான் ரோல்டன் பேசினார். #MehandiCircus #Ilayaraja
    இயக்குநர் ராஜூமுருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள படம் ‘மெஹந்தி சர்க்கஸ்’. அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் ரங்கராஜ், சுவாதி திரிபாதி, விக்னேஷ்காந்த், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் விழா நடைபெற்றது.

    இதில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது: ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் இசைக்கு இன்ஸ்பிரே‌ஷன் இளையராஜா சார் தான். குறிப்பாக அவரது இசையில் 80-களில் வெளியான படங்களை தனியாகச் சொல்லலாம். பாடலின் வரிகள், இசைக்கோர்வைகள் அனைத்துமே ஒரு மேஜிக்கலாக இருக்கும். அதே போல் செய்து பார்த்தால் சரியாக வராது.



    அவருடைய இசை தான் ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் இசைக்கான தாக்கம் என்று சொல்லலாம். அதை படம் பார்க்கும் போது உணர்வீர்கள். பழைய இசை, புதிய இசை என்று பலர் விவாதம் செய்வதாக கேள்விப்பட்டேன்.

    என்னைப் பொறுத்தவரை எப்போதுமே நல்லாயிருக்கிற இசை தான் நல்ல இசை. பழைய இசை என்று ஒன்று கிடையாது. இளையராஜா சாருடைய இசையை பழையது என்று சொல்வதை ஒப்புக்கொள்ள முடியாது. கிணற்றில் எப்போதுமே தண்ணீர் வந்தால் எப்படியிருக்குமோ, அப்படித்தான் இளையராஜாவின் இசையும். இன்னுமொரு 50 ஆண்டுகள் கழித்து அவரது இசையைக் கேட்டால் அதிலிருந்து ஒரு இன்ஸ்பிரே‌ஷன் கிடைக்கும். அவரது இசையை மேலோட்டமாகப் பார்த்தால் சிம்பிளாகத் தெரியும். இசையையே டெக்னாலஜியாக உபயோகித்தவர் இளையராஜா.

    இவ்வாறு அவர் கூறினார். #MehandiCircus #Ilayaraja

    ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ராஜு முருகன் கதை எழுத, சரவணன் ராஜேந்திரன் இயக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #MehandiCircus #RajuMurugan
    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் படம் `மெஹந்தி சர்க்கஸ்'. `குக்கு', `ஜோக்கர்' படத்தை இயக்கிய ராஜு முருகன் இந்த படத்திற்கு கதை, வசனம் எழுதுகிறார். ராஜு முருகனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சரவணன் ராஜேந்திரன் இந்த படத்தை இயக்குகிறார். 

    மாதம்பட்டி ரங்கராஜ் இந்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மாநகரம் பட பிரபலம் செல்வகுமார்.எஸ்.கே. ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். 



    கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உருவாக இருப்பதாகவும், நாயகனுக்கும், சர்க்கஸ் செய்பவருக்கும் இடையேயான காதலை மையப்படுத்தி படம் உருவாகுவதாகவும் கூறப்படுகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தில் யானைக்கும் ஒரு முக்கிய பங்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MehandiCircus #RajuMurugan

    ×