search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷிகர் தவான்"

    விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் வழங்கும் விழா வரும் 13-ம் தேதி டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை மத்திய விளையாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விருது பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

    விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் அர்ஜூனா விருதுக்கு 35 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விருதுடன் ரூ.15 லட்சம் ரொக்கப்பரிசும் கிடைக்கும்.

    அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ளவர்களின் பெயர் விவரம் வருமாறு:-

    அர்பிந்தர்சிங் (தடகளம்), சிம்ரன்ஜித் கவுர் (குத்துச்சண்டை), ஷிகர் தவான் (கிரிக்கெட்), பவானி தேவி (வாள்சண்டை), மோனிகா, வந்தனா கட்டாரியா (இருவரும் ஹாக்கி), சந்தீப் நார்வால் (கபடி), ஹிமானி உத்தம் பராப் (மல்லர்கம்பம்), அபிஷேக் வர்மா (துப்பாக்கி சுடுதல்), அங்கிதா ரெய்னா (டென்னிஸ்), தீபக் பூனியா (மல்யுத்தம்), தில்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், ருபிந்தர்பால் சிங், சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ், பிரேந்திர லக்ரா, சுமித், நீல கண்ட ஷர்மா, ஹர்திக் சிங், விவேக் சாகர், குர்ஜந்த்சிங், மன்தீப்சிங், ஷம்சிர் சிங், லலித்குமார் உபாத்யாய், வருண் குமார், சிம்ரன்ஜித் சிங் (16 பேரும் ஆக்கி), யோகேஷ் கதுனியா, நிசாத் குமார், பிரவீன்குமார், ஷரத் குமார் (4 பேரும் பாரா தடகளம்), சுஹாஸ் யதிராஜ் (பாரா பேட்மிண்டன்), சிங்கராஜ் அதானா (பாராதுப்பாக்கி சுடுதல்), பவினா பட்டேல் (பாரா டேபிள் டென்னிஸ்), ஹர்விந்தர் சிங் (பாரா வில்வித்தை).

    சென்னையைச் சேர்ந்த 28 வயதான பவானி தேவி, ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட முதல் இந்திய வாள்சண்டை வீராங்கனை என்ற சிறப்புக்குரியவர் ஆவார். 

    நட்சத்திர இந்திய பேட்ஸ்மேன்களை கொண்ட டெல்லி அணி இந்த முறை கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். #IPL2019 #DD
    இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி பேட்டிங் செய்து வருபவர் ஷிகர் தவான். டெல்லியைச் சேர்ந்த இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வந்தார். இந்த சீசனில் சொந்த மாநில அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். டெல்லி அணியில் இவருடன் ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், பிரித்வி ஷா போன்ற இந்திய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் முன்னணி இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷிகர் தவான் கூறுகையில் ‘‘மிகவும் சிறந்த பேலன்ஸ் கொண்ட அணி ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும். இந்த வருடம் எங்கள் அணி மிகவும் சிறந்த பேலன்ஸ் அணியாக உள்ளது. நாங்கள் சிறந்த ஆல்-ரவுண்டர்கள், ஸ்பின்னர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளோம்.

    ஐந்து இந்திய பேட்ஸ்மேன்களை பெற்றுள்ள எங்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது முக்கியமான குறிக்கோள். ஆகவே, இந்த தொடர் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.

    ஷிகர் தவான் 2008-ம் ஆண்டு சீசனில் டெல்லி அணிக்காக விளையாடினார். அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். 2013-ல் இருந்து டெக்கான் சார்ஜர்ஸ், அதன்பின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வந்தார். தற்போது மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பியுள்ளார்.
    அமைதியான நிலையில் இருக்கும்போது நன்றாக விளையாடுவதாகவும், மனவேதனை அடையும்போது அதில் இருந்து வேகமாக விடுபட்டு விடுவதாகவும் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கூறினார். #ShikharDhawan #INDvAUS
    மொகாலி:

    கடந்த 6 மாதமாக சதம் அடிக்காத இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த 4-வது ஒரு நாள் போட்டியில் 143 ரன்கள் எடுத்து தன் மீதான விமர்சனத்துக்கு விடை அளித்தார். போட்டிக்கு பிறகு ஷிகர் தவான் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    விமர்சனத்தை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள். முதலில் நான் பத்திரிகைகள் படிப்பதில்லை. எனக்கு தேவையில்லாத விஷயங்களை எடுத்து கொள்ளமாட்டேன். என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியாது. எனது சொந்த உலகில் நான் வாழ்கிறேன். எனது எண்ணங்கள் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை நான் முடிவு செய்கிறேன்.

    அமைதியான நிலையில் இருக்கும்போது நான் நன்றாக விளையாடுவேன். மன வேதனை அடையும்போது அதில் இருந்து வேகமாக விடுபட்டு விடுவேன். என்னை பற்றி என்ன எழுதுகிறார்கள் என்பது எனக்கு தெரியாது. நல்ல மனநிலையில் இருந்து எனது செயல்களை செய்ய வேண்டும் என்று விரும்புவேன்.

    ரிஷப் பந்தை, டோனியுடன் ஒப்பிடக்கூடாது. ஆஷ்டன் டர்னரை ஸ்டம்பிங் செய்து ஆட்டம் இழக்க வைத்து இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கலாம். பனியின் தாக்கம் காரணமாக பந்து கையை விட்டு நழுவியது. எனவே கேட்ச் செய்வது கடினமாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார். #ShikharDhawan #INDvAUS
    ரிஷப் பந்த் ஆக்ரோஷமாக விளையாடி எதிரணியிடம் இருந்து போட்டியை நொடிப்பொழுதில் பறிக்கும் வல்லமை படைத்தவர் என்று ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். #NZvIND
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 4-1 எனக்கைப்பற்றியது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை வெலிங்டனில் தொடங்குகிறது. ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறாத விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் டி20 தொடரில் விளையாடுகிறார்.

    ரிஷப் பந்த் ஆக்ரோஷமான வீரர், எதிரணியிடம் இருந்து நொடிப்பொழுதில் போட்டியை இந்தியா பக்கம் திருப்பும் வல்லமை படைத்தவர் என்று ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷிகர் தவான் கூறுகையில் ‘‘ரிஷப் பந்த் ஆக்ரோஷமான பேட்ஸ்மேன். அவர் இந்திய அணியின் சொத்து. எதிரணியிடம் இருந்து ஆட்டத்தை இமைக்கும் பொழுதில் இந்தியா பக்கம் திருப்பும் வல்லமை படைத்தவர். டி20 வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன்.

    ரவி சாஸ்திரி சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, நான் உள்பட சிலருக்கு ஓய்வு தேவை என்று தெரிவித்துள்ளார். நாங்களும் மனிதர்கள்தான். எங்களுடைய உடலுக்கும் சற்று ஓய்வு தேவை. ஆஸ்திரேலியா தொடரை எப்படி வெற்றிகரமாக முடித்தோமோ, அதைபோல் நியூசிலாந்து தொடரை வெற்றிகரமாக முடித்து சொந்த நாடு திரும்ப விரும்புகிறோம்.



    பவர்பிளே ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புவேன். என்றாலும் ஆடுகளத்தின் தன்மையை பொறுத்துதான் அது அமையும். தொடக்கத்தில் ஏராளமான ஷாட் சரியாக அமைந்தால், அதன்பின் என்னுடைய வழக்கமான ஆட்டம் தானாகவே வெளிப்படும். பவுன்சர் பந்தில் அடிக்கடி ஆட்டமிழந்ததால், டென்னிஸ் பந்தில் பயிற்சி மேற்கொண்டேன்.

    உலகக்கோப்பைக்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டி போதுமானது. இருந்தாலும் நாங்கள் டி20 தொடரோடு ஆட்டத்தை முடிக்கிறோம். இதுவரை நாங்கள் ஆடிய விதம் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது’’ என்றார்.
    நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. #NZvIND #TeamIndia
    நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி, அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான், ரோகித் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். அரை சதம் கடந்த இருவரும், நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்து, ரன் குவித்தனர். ஷிகர் தவான் 66  ரன்களும், ரோகித் சர்மா 87 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலி 43 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தாலும், அம்பதி ராயுடு மற்றும் டோனி இருவரும் அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர். ராயுடு 47 ரன்களில் ஆட்டமிழந்தார். டோனி அரை சதத்தை நெருங்கினார். 

    50 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் குவித்தது. கடைசி நேரத்தில் பந்துகளை பறக்கவிட்ட கேதர் ஜாதவ், 3 பவுண்டரி ஒரு சிக்சருடன், 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டோனி 48 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இதையடுத்து 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. துவக்கம் முதலே நியூசிலாந்து அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். அடித்து ஆட முற்பட்ட டாப் ஆர்டர் வீரர்கள், குறைந்த ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் அணியின் ரன் ரேட் சரியத் தொடங்கியது. அதன்பின்னர், குல்தீப் யாதவ் சீரான இடைவெளியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 166 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து.

    கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் அதிரடியாக ஆடிய பிரேஸ்வெல், பந்துகளை சிக்சரும் பவுண்டரிகளுமாக பறக்க விட்டு அரை சதம் கடந்தார். 46 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 57 ரன்கள் விளாசிய அவர், புவனேஸ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டான பெர்குசனை (12) சாகல் வீழ்த்த, நியூசிலாந்து அணி 40.2 ஓவர்களில் 234 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால், 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ரோகித் சர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

    இந்த வெற்றியின் மூலம், 5 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. 3வது போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.  #NZvIND #TeamIndia
    இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 324 ரன்கள் குவித்த இந்திய அணி, நியூசிலாந்தின் வெற்றிக்கு 325 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. #NZvIND
    நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது ஒரு நாள் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான், ரோகித் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். அரை சதம் கடந்த இருவரும், நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்து, ரன் குவித்தனர். ஷிகர் தவான் 66  ரன்களும், ரோகித் சர்மா 87 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அப்போது, அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்பிற்கு 172 ரன் என்ற வலுவான நிலையில் இருந்தது.

    அதன்பின்னர் களமிறங்கிய விராட் கோலி 43 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தாலும், அம்பதி ராயுடு மற்றும் டோனி இருவரும் அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர். ராயுடு 47 ரன்களில் ஆட்டமிழந்ததார். டோனி அரை சதத்தை நெருங்கினார். 

    50 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் குவித்தது. கடைசி நேரத்தில் பந்துகளை பறக்கவிட்ட கேதர் ஜாதவ், 3 பவுண்டரி ஒரு சிக்சருடன், 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டோனி 48 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இதையடுத்து 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது. #NZvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டி20 போட்டியில் மோசமான பீல்டிங்கால் தோல்வி அடைந்ததாக இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் கூறினார். #AUSvIND #ShikharDhawan
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    தோல்விக்கு பிறகு இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் நிருபர்களிடம் கூறுகையில், ‘பீல்டிங்கில் செய்த தவறுகளே தோல்விக்கு முக்கிய காரணமாகும். ஒரு சில கேட்ச்களை கோட்டை விட்டோம். இதே போல் ரன்-அவுட் வாய்ப்பையும் (மேக்ஸ்வெல்லுக்கு) நழுவ விட்டோம். ஆனால் இதுவெல்லாம் விளையாட்டில் சகஜம். தோல்வி அடைந்தாலும் இந்த ஆட்டத்தில் கிடைத்த நம்பிக்கையை அடுத்த ஆட்டத்திற்கு கொண்டு செல்வோம்’ என்றார்.

    ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கொடுத்த கேட்ச் வாய்ப்பை இந்திய கேப்டன் விராட் கோலியும், ஸ்டோனிஸ் வழங்கிய கேட்ச் வாய்ப்பை கலீல் அகமதுவும் வீணடித்தது குறிப்பிடத்தக்கது. #AUSvIND #ShikharDhawan
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் ஷிகர் தவான் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு மாற உள்ளார். அவருக்கு மூன்று வீரர்களை விடுவிக்கிறது. #IPL2019
    ஐபிஎல் 2019 சீசனுக்கான ஆயத்த பணிகளை அணிகள் மேற்கொண்டு வருகிறது. வீரர்களை டிரான்ஸ்பர் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பிடித்திருந்த விக்கெட் கீப்பர் குயிண்டான் டி காக் மும்பை அணிக்கு செல்ல இருக்கிறார். மந்தீப் சிங் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு செல்ல இருக்கிறார்.

    இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக 2013-ல் இருந்து விளையாடி வந்த ஷிகர் தவான் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு செல்கிறார். இதற்காக டெல்லி டேர்டெவில்ஸ் அணி விஜய் ஷங்கர், அபிஷேக் ஷர்மா, ஷபாஸ் நதீம் ஆகியோரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கொடுக்கிறது.



    தவானை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5.2 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது. அதேவேளையில் டெல்லி டேர்டெவில்ஸ் விஜய் ஷங்கர், நதீம் ஆகியோரை தலா 3.2 கோடி ரூபாய்க்கும், அபிஷேக்கை 50 லட்சம் ரூபாய்க்கும் வாங்கியிருந்தது.
    ஒருநாள் போட்டியில் அசத்தும் ஷிகர் தவான், டெஸ்ட் போட்டியில் ஜொலிக்காதது ஆச்சர்யம் அளிக்கிறது என்று தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். #dhawan
    இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ஷிகர் தவான் தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடரில் 162 ரன்கள் மட்டுமே அடித்தார். சராசரி 20.25 ஆகும். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதேவேளையில் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஐந்து போட்டிகளில் இரண்டு சதங்கள் உள்பட அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

    ஒயிட் பால் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஷிகர் தவான், ரெட் பால் போட்டியில் சொதப்புவது ஆச்சர்யம் அளிக்கிறது என்று இந்திய தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.



    ஷிகர் தவான் குறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘ஒயிட் பால் பேட்டியில் அசத்தும் பேட்ஸ்மேன்கள், ரெட் பால் போட்டியில் திணறுவது எனக்கு உண்மையிலேயே ஆச்சர்யம் அளிக்கிறது. தவான் எல்லா வகை கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது.

    அதிகமான வாய்ப்புகள் கொடுத்த பிறகு துரதிருஷ்டவசமாக இந்த கடின முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் கடினமான பயிற்சி மேற்கொண்டு ஆட்டத்திறனை சிறப்பான வகையில் மேம்படுத்தினால், அவருக்காக கதவு திறந்தே இருக்கும்’’ என்றார்.
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 317 ரன்கள் குவித்ததன் மூலம் ரோகித் சர்மா ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். #ICCRankings #RohitSharma
    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்றது. இந்தியா இரண்டு லீக், மூன்று ‘சூப்பர் 4’ மற்றும் இறுதிப் போட்டி என 6 போட்டிகளில் விளையாடியது. இதில் இந்திய அணி கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா 5 போட்டிகளில் விளையாடினார்.

    ஐந்து இன்னிங்சில் ஒரு சதம் இரண்டு அரைசதத்துடன் 317 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி முதல் இடத்தில் நீடிக்கிறார். 342 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷிகர் தவான் நான்கு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.



    பந்து வீச்சாளர்களில் பும்ரா முதல் இடத்தில் நீடிக்கிறார். குல்தீப் யாதவ் மூன்று இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இதுதான் ஒருநாள் தரவரிசையில் இவரது சிறந்த தரவரிசையாகும்.

    ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் பந்து வீச்சாளர்களில் 2-வது இடத்தையும், ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.
    ஆசிய கோப்பை போட்டியில் அடுத்தடுத்து அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 5 ஆட்டங்களில் 342 ரன்கள் குவித்து ஆசிய கோப்பை தொடர் நாயகன் விருதை கைப்பற்றியுள்ளார். #AsiaCup2018 #ShikharDhawan
    துபாய்:

    இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பையில் அதிரடியாகவும், பரபரப்பாகவும் விளையாடிய இந்திய அணி தனது வெற்றியை நிலைநாட்டி கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில், அதிரடியாக விளையாடி தனது திறமையை அனைத்து வீரர்களும் வெளிப்படுத்தினர்.

    இந்த ஆசிய கோப்பை விளையாட்டில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோஹித் சர்மா, 1 சதம், 2 அரை சதத்துடன் 317 ரன்கள் குவித்து 2-வது இடத்தை பிடித்துள்ளார்.



    இந்த போட்டியில் தனது சிறப்பான ஆட்டம் மூலம் தொடக்க ஆட்டக்காரர் தவான் 5 ஆட்டத்தில் விளையாடி 342 ரன் குவித்து முதலிடத்தை பிடித்துள்ளார். அவரது சராசரி 68.40 ஆகும். இரண்டு சதம் அடித்து, அதிகபட்சமாக 127 ரன்கள் குவித்துள்ளார். இந்த சிறப்பான ஆட்டம் மூலம் தவான் முதலிடத்தை பிடித்து, தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றியுள்ளார்.

    வங்காளதேச வீரர் முஷ்பிகுர் ரகீம் 1 சதத்துடன் 302 ரன் எடுத்து 3-வது இடத்திலும், ஆப்கானிஸ் தானை சேர்ந்த முகமது‌ஷசாத் 268 ரன் எடுத்து 4-வது இடத்திலும் உள்ளனர்.

    பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 6 ஆட்டத்தில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 45 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்துவீச்சாகும். இதேபோல, ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத்கானும், முஷ்டாபிசுர் ரகுமானும் தலா 10 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். இருவரும் 5 ஆட்டத்தில் இந்த விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். மற்ற இந்திய வீரர்களில் பும்ரா 8 விக்கெட்டுகளும், ஜடேஜா 7 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். #AsiaCup2018 #ShikharDhawan
    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்காள தேசத்தை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம் என்று தவான் தெரிவித்துள்ளார். #AsiaCup2018 #INDvBAN
    இந்தியா, பாகிஸ்தான் உள்பட ஆறு அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அபு தாபி மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதுவரை லீக் மற்றும் சூப்பர் 4 சுற்று முடிந்து நாளை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்திய அணி தோல்வியை சந்திக்காமலும், வங்காள தேசம் இரண்டு தோல்வியுடனும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளன.

    சூப்பர் 4 சுற்றில் இந்தியா வங்காள தேசத்தை வீழ்த்தியிருந்தாலும். என்றாலும் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் வங்காள தேசத்தை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோன் என்று துணைக் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷிகர் தவான் கூறுகையில் ‘‘வங்காள தேசம் அணி மிகவும் பேலன்ஸ் ஆன அணி. அவர்களுடைய பலம் அவர்களுக்குத் தெரியும். கடந்த சில வருடங்களாக அவர்கள் நின்றாக முன்னேற்றம் அடைந்து, தரமான அணியாக மாறியுள்ளனர். பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்படுகின்றன. அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டா், முடிவுகள் இயற்கையாகவே வந்து சேரும்.



    வங்காள தேசம் அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். வங்காள தேசத்தை தவிர ஐக்கிய அரபு எமிரேட்சிலும் அந்த அணியை வீழ்த்துவது கடினம். அனுபவமான வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். அவர்களுக்கு நெருக்கடியான நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பது தெரியும். பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடும்போது கூட நெருக்கடிக்கு உள்ளாவது கிடையாது. இது சிறந்த விஷயமாகும். சூப்பர் 4 சுற்றில் அவர்களை தோற்கடித்திருந்தாலும், நாளைய போட்டியை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம்’’ என்றார்.
    ×