search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹசின் ஜஹான்"

    இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜஹானை போலீசார் கைது செய்தனர். #MohammadShami #HasinJahan
    அம்ரோஹா:

    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவருடைய மனைவி ஹசின் ஜஹான் கடந்த ஆண்டு பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், முகமது ஷமியும் அவரது குடும்பத்தினரும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் போலீசில் புகார் செய்தார். முகமது ஷமி தரப்பிலும் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. முகமது ஷமி மீது அவரது மனைவி தெரிவித்த சூதாட்ட புகாரில் உண்மை இல்லை என்பது தெரியவந்ததால் அவர் இந்திய அணியில் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் ஐ.பி.எல். போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். முகமது ஷமியின் குடும்பத்தினர் உத்தரபிரதேசத்தில் உள்ள அம்ரோஹாவை அடுத்துள்ள அலிபுர் கிராமத்தில் வசித்து வருகிறார்கள். அந்த வீட்டுக்கு நேற்று முன்தினம் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் சென்றார். முகமது ஷமியின் குடும்பத்தினர் அவரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து முகமது ஷமியின் தாயார் போலீசில் புகார் செய்தார். இதனை அடுத்து ஹசின் ஜஹானை கைது செய்த போலீசார் அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் அவரை கோர்ட்டு ஜாமீனில் விடுவித்தது. அதன் பிறகு ஹசின் ஜஹான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘முகமது ஷமி எனது கணவர். அந்த வீட்டுக்குள் நுழைய எனக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் நான் எப்பொழுது அந்த வீட்டில் தங்க முயற்சித்தாலும், எனது மாமனாரும், மாமியாரும், என்னையும் என் குழந்தையையும் வெளியே தள்ள முயற்சிக்கின்றனர்’ என்று தெரிவித்தார். 
    முகமது சமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள அவரது மனைவி, ஜீவனாம்சமாக மாதம் 10 லட்ச ரூபாய் கோரிய மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. #MohammadShami #HasinJahan
    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது சமி. இவர் மாடல் அழகியும், கொல்கத்தா அணியின் உற்சாகமளிக்கும் நடனகலைஞரான ஹசின் ஜஹான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

    சில மாதங்களுக்கு முன்பு, ஹசின் ஜஹான், தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், தன்னை கொடுமை செய்து கொலை செய்ய முயற்சிப்பதாகவும் புகார் அளித்து இருந்தார். அதோடு, முகமது சமி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    இதையடுத்து, முகமது சமி, வருடத்துக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் பெருவதாகவும், அதனால் தனக்கும் தன் மகளுக்கும் மாதம் 10 லட்ச ரூபாய் ஜீவனாம்சம் அளிக்க வேண்டும் எனவும் ஹசின் ஜஹான் கோரியிருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த அலிபோர் மாவட்ட நீதிமன்றம், ஹசின் ஜஹானின் மனுவை தள்ளுபடி செய்தது.

    மேலும், மாதந்தோறும் அவர்களது மகளின் பராமரிப்புக்காக மட்டும் 80 ஆயிரம் ரூபாய் பணம் அளிக்க வேண்டும் என முகமது சமிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #MohammadShami #HasinJahan
    ×