search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவாசகி வெர்சிஸ் 1000"

    கவாசகி நிறுவனத்தின் வெர்சிஸ் 1000 அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் முன்பதிவு இந்தியாவில் துவங்கியது. #kawasaki #motorcycle



    இந்தியாவில் கவாசகி வெர்சிஸ் 1000 அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் முன்பதிவு துவங்கியது. இந்தியாவில் லிட்டர் கிளாஸ் அட்வென்ச்சர் டூரர் மாடலின் முன்பதிவு கட்டணம் ரூ.1.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டுக்கு முந்தைய முன்பதிவு டிசம்பர் 31ம் தேதி அல்லது ஸ்லாட் இருக்கும் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புது கவாசகி வெர்சிஸ் 1000 மாடல் இம்மாதம் இத்தாலியில் நடைபெற்ற 2018 இ.ஐ.சி.எம்.ஏ. மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. வெர்சிஸ் 1000 மாடலின் விலையை கவாசகி இதுவரை அறிவிக்கவில்லை, எனினும் இதன் விநியோகம் 2019 ஏப்ரல் மாத இறுதியில் துவங்கும் என தெரிவித்துள்ளது.

    வெர்சிஸ் 1000 மாடல் இந்தியாவில் அசம்பிள் செய்யப்படும் என கவாசகி தெரிவித்துள்ளது. இவ்வாறு செய்தன் மூலம் வெர்சிஸ் 1000 விலையை கட்டுப்படுத்தி, போட்டியை ஏற்படுத்தும் வகையில் விலை நிர்ணயம் செய்ய முடியும். 

    2019 கவாசகி வெர்சிஸ் 1000 மாடலில் முந்தைய மாடலை விட பெருமளவு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நின்ஜா மாடல்களை போன்று புதிய மாடலின் முன்பக்கம் கூர்மையாக வடிவமைக்கப்பட்டு இருப்பது மிகமுக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. வெர்சிஸ் 1000 மாடலில் புதுவித எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வின்ட்ஸ்கிரீன் மற்றும் செமி டிஜிட்டல் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.



    இத்துடன் வெர்சிஸ் 1000 மாடலின் அதிக-அம்சங்கள் நிறைந்த வேரியன்ட் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் கூடுதல் உபகரணங்களாக கார்னெரிங் லைட்கள், கார்னெரிங் ஏ.பி.எஸ்., குவிக் ஷிஃப்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. எனினும், இந்த வேரியன்ட் இந்தியாவில் வெளியிடப்பட மாட்டாது.

    இந்திய மாடலின் மற்ற அம்சங்களை பொருத்த வரை ரைடு-பை-வையர், எலெக்ட்ரிக் க்ரூஸ் கன்ட்ரோல், 5-ஆக்சிஸ் போஷ் IMU, ஏ.பி.எஸ்., கவாசகியின் டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் இரண்டு பவர் மோட்கள் வழங்கப்படுகிறது.

    புதிய லிட்டர்-கிளாஸ் அட்வென்ச்சர் டூரர் மாடலில் 1,043 சிசி இன்-லைன் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 120 பி.ஹெச்.பி. பவர், 120 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்ரும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. வெர்சிஸ் 1000 மாடலின் முன்பக்கம் யு.எஸ்.டி. ஃபோர்க்கள், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 310 எம்.எம். டிஸ்க், பின்புறம் 250 எம்.எம். ஒற்றை டிஸ்க் வழங்கப்படுகிறது. 
    ×