என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 110
நீங்கள் தேடியது "டி.வி.எஸ். விக்டர் 110 எஸ்.பி.டி."
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் 2019 டி.வி.எஸ். விக்டர் 110 எஸ்.பி.டி. மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #TVSVictor
இந்திய மோட்டார்சைக்கிள் நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார்ஸ் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட 2019 விக்டர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய மோட்டார்சைக்கிளில் டி.வி.எஸ். நிறுவனம் சின்க்ரோனைஸ்டு பிரேக்கிங் தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது.
இந்தியாவில் 2019 விக்டர் எஸ்.பி.டி. மோட்டார்சைக்கிள் விலை ரூ.54,682 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய வகை பிரேக்கிங் சிஸ்டம் வாகனத்தை சிறப்பாக கண்ட்ரோல் செய்ய வழிவகுக்கும் என டி.வி.எஸ். தெரிவித்துள்ளது. புதிய எஸ்.பி.டி. தொழில்நுட்பம் வாகனத்தின் பின்புற பிரேக் பிடிக்கும் போது தானாக முன்புற பிரேக்கையும் பயன்படுத்தும்.
புதிய எஸ்.பி.டி. தொழில்நுட்பத்தை தவிர புதிய மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் புதிய விக்டர் மோட்டார்சைக்கிளிலும் 3-வால்வ் ஆயில் கூல்டு 110சிசி திறன் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 9.37 பி.ஹெச்.பி. பவர் @7500 ஆர்.பி.எம். மற்றும் 9.4 என்.எம். டார்க் @6000 ஆர்.பி.எம். செயல்தின் மற்றும் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
டி.வி.எஸ். விக்டர் 110 மோட்டார்சைக்கிள் லிட்டருக்கு 72 கிலோமீட்டர் வரை செல்கிறது. புதிய விக்டர் 110 மோட்டார்சைக்கிளின் பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்களும் முன்பக்கம் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இவை வாகனம் ஓட்டுவோர் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோருக்கு சவுகரியத்தை வழங்குகிறது.
அலாய் வீல் மற்றும் டியூப்லெஸ் டையர்களை கொண்டிருக்கும் டி.வி.எஸ். விக்டர் 110 டிரம் பிரேக் அல்லது முன்புறம் டிஸ்க் பிரேக் செட்டப் வசதியுடன் கிடைக்கிறது. புதிய விக்டர் மோட்டார்சைக்கிள் பிரீமியம் எடிஷனாக கிடைக்கிறது. இதில் க்ரோம் சைடு கவர்கள், கிராஷ் கார்டு அழகிய கிராஃபிக்ஸ் மற்றும் டூயல்டோன் சீட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் சிடி 110 டிரீம் மோட்டார்சைக்கிளை சி.பி.எஸ். வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது. #Honda
ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் சிடி110 டிரீம் மோட்டார்சைக்கிளை சி.பி.எஸ். வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது. ஹோன்டா சி.டி. 110 டிரீம் சி.பி.எஸ். விலை ரூ.50,028 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சி.பி.எஸ். இல்லாத மோட்டார்சைக்கிள் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. எனினும், இதன் விற்பனை ஏப்ரல் 1, 2019 முதல் நிறுத்தப்பட்டு விடும். சி.பி.எஸ். வசதி தவிர புதிய மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
புதிய சிடி டிரீம் 110 மாடலில் 109சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.31 பி.ஹெச்.பி. மற்றும் 9.09 என்.எம். டார்க் செயல்திறன், 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. சிடி 110 டிரீம் சி.பி.எஸ். மாடலில் இரண்டு சக்கரங்களிலும் 130 எம்.எம். டிரம் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளன.
சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ஹைட்ராலிக் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த மோட்டார்சைக்கிள் 18-இன்ச் வீல்களில் 80/100 டையர்களை கொண்டிருக்கிறது. புதிய சிடி 110 டிரீம் சி.பி.எஸ். தவிர ஹோன்டா நிறுவனம் 2019 கிரேசியா ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.
புதிய ஹோன்டா கிரேசியா ஸ்கூட்டர் விலை ரூ.64,668 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹோன்டா கிரேசியா அப்டேட் DX வேரியண்ட்டில் மட்டுமே் வழங்கப்பட்டிருக்கிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X