என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 150
நீங்கள் தேடியது "பஜாஜ் பல்சர் 150 ஏ.பி.எஸ்."
பஜாஜ் ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது வாகனங்களை முற்றிலும் மாற்றியமைத்து வரும் நிலையில், பல்சர் 150 ஏ.பி.எஸ். மாடலில் ட்வின் டிஸ்க் வேரியன்ட் விவரங்கள் வெளியாகியுள்ளது. #Pulsar #motorcycle
பஜாஜ் ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது வாகனங்களை முற்றிலுமாக மாற்றியமைத்து வருகிறது. ஏற்கனவே அந்நிறுவன வாகனங்களில் ஏ.பி.எஸ். மற்றும் சி.பி.எஸ். போன்ற வசதிகளை வழங்கியிருக்கிறது.
இந்நிலையில், பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் 150 ஏ.பி.எஸ். மாடலின் ட்வின் டிஸ்க் வேரியன்ட் விற்பனையகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய மேம்படுத்தப்பட்ட பல்சர் மோட்டார்சைக்கிள்களை பஜாஜ் விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்சர் 180, பல்சர் 220எஃப், அவெஞ்சர் க்ரூஸ் மாடல்களை போன்று பல்சர் 150 மாடலில் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். சிஸ்டம் வழங்கப்படுகிறது. கூடுதலான ஏ.பி.எஸ். தவிர புதிய மோட்டார்சைக்கிளில் இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது. இதுதவிர புதிய மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
புகைப்படம் நன்றி: Rushlane
பஜாஜ் பல்சர் 150 மாடலில் 149சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 14 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 13.4 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குவதோடு 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
பல்சர் 150 மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது. பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 260 எம்.எம்., பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது. புதிய ஏ.பி.எஸ். வசதி சேர்க்கப்படுவதன் மூலம் பல்சர் 150 விலை ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம்.
இந்தியாவில் அப்ரிலியா எஸ்.ஆர். 150 ஏ.பி.எஸ், எஸ்.ஆர். 125 சி.பி.எஸ்., பியாஜியோ வெஸ்பா 150 ஏ.பி.எஸ்., 125 சி.பி.எஸ். ஸ்கூட்டர்கள் வெளியானது. #aprilia
இந்தியாவில் ஏப்ரல் 1, 2019 முதல் இருசக்கர வாகனங்களில் புதிய பாதுகாப்பு வழிமுறைகள் அமலாக இருக்கிறது. இந்நிலையில், பல்வேறு இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது வாகனங்களில் ஏ.பி.எஸ். வசதியை சேர்ப்பதில் மும்முரமாக இயங்கி வருகின்றன.
அந்த வரிசையில் அப்ரிலியா நிறுவனம் ஏ.பி.எஸ். வசதி கொண்ட எஸ்.ஆர். 150 மற்றும் பியாஜியோ தனது வெஸ்பா 150 ஏ.பி.எஸ். ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் பியாஜியோ நிறுவனம் வெஸ்பா 125 மாடலில் காம்பி பிரேக் சிஸ்டம் எனப்படும் சி.பி.எஸ். வசதியை வழங்கி இருக்கிறது.
எஸ்.ஆர். 150 விலை ரூ.80,850, கார்பன் ஏ.பி.எஸ். வேரியன்ட் விலை ரூ.82,550 என்றும் எஸ்.ஆர்.150 ரேஸ் வேரியன்ட் விலை ரூ.89,550 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பியாஜியோ வெஸ்பா வி.எக்ஸ்.எல். விலை ரூ.98,310, எஸ்.எக்ஸ்.எல். விலை ரூ.1.02 லட்சம், எஸ்.எக்ஸ்.எல். 150 ரெட் எடிஷன் விலை ரூ.1.03 லட்சம், எலிகன்ட் ஏ.பி.எஸ். விலை ரூ.1.08 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அப்ரிலியா மற்றும் பியாஜியோ சி.பி.எஸ். வசதி கொண்ட ஸ்கூட்டர்களையும் இந்தியாவில் வெளியிட்டுள்ளன. அதன்படி அப்ரிலியா 125 சி.பி.எஸ். விலை ரூ.69,250, வெஸ்பா வி.எக்ஸ்.எல்.125 சி.பி.எஸ். விலை ரூ.88,250, வெஸ்பா எஸ்.எக்ஸ்.எல். 125 சி.பி.எஸ். விலை ரூ.91,450, வெஸ்பா எஸ்.எக்ஸ்.எல். 125 ரெட் எடிஷன் விலை ரூ.92,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏ.பி.எஸ். மற்றும் சி.பி.எஸ். அம்சங்கள் தவிர புதிய ஸ்கூட்டர்களில் எவ்வித அம்சங்களும் மாற்றப்படவில்லை. எனினும் புதிய ஸ்கூட்டர்களில் சேர்க்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதி புதிய ஸ்டிக்கர்களின் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பலச்ர் 150 ஏ.பி.எஸ். வேரியன்ட் ஸ்பை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Motorcycle
பஜாஜ் பல்சர் 150 ஏ.பி.எஸ். ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புது ஏ.பி.எஸ். வெர்ஷன் தற்போதைய பல்சர் டூயல்-டிஸ்க் வேரியன்ட்டை தழுவி உருவாகி இருக்கிறது. இந்தியாவில் பல்சர் 150 டூயல் டிஸ்க் வேரியன்ட் விலை ரூ.78,000 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புது பல்சர் 150 ஏ.பி.எஸ். வேரியன்ட் விலை இந்தியாவில் 2019 முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் புது பல்சர் 150 ஏ.பி.எஸ். வேரியன்ட் விலை டூயல்-டிஸ்க் மாடலின் விலையை விட ரூ.7000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் புதிய பல்சர் 150 ஏ.பி.எஸ். விலை ரூ.85,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம். ஏப்ரல் 2018 முதல் இந்தியாவில் விற்பனையாகும் 125சிசி மற்றும் அதற்கும் அதிக மோட்டார்சைக்கிள்களில் ஏ.பி.எஸ். வசதி கட்டாயமாகிறது.
புகைப்படம் நன்றி: Rushlane
பஜாஜ் பல்சர் 150 ஏ.பி.எஸ். மாடலில் பி.எஸ்.-VI ரக 149சிசி ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 13.8 பி.ஹெச்.பி. பவர் 13.4 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்த வரை டூயல்-டோன் பெயின்ட், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், டியூப்லெஸ் டையர்கள், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இதுதவிர இந்திய மோட்டார்சைக்கிள் சந்தையில் பல்வேறு புது மாடல்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு 650சிசி ட்வின் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இதேபோன்று ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் மூன்று புது மாடல்கள்: 42, ஜாவா மற்றும் பெராக் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்தது. ஜாவா மோட்டார்சைக்கிள் விலை ரூ.1.64 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #Motorcycle
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பல்சர் 150 கிளாசிக் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. #Bajaj #motorcycle
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பல்சர் 150 கிளாசிக் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய பல்சர் இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.65,500 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்சர் 150 கிளாசிக் எடிஷன் பிளாக், பிளாக் மற்றும் ரெட் ஹைலைட்கள், பிளாக் மற்றும் சில்வர் ஹைலைட்கள் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
புதிய மோட்டார்சைக்கிளின் ஹெட்லேம்ப்பின் மேல், வீல்கள், ஃபாக்ஸ் ஏர் வென்ட்கள் மற்றும் பக்கவாட்டுகளில் ரெட் அல்லது சில்வர் நிற அக்சென்ட்களை கொண்டுள்ளது. இதேபோன்று பல்சர் லோகோ மற்றும் 150 பிரான்டிங் இம்முறை ரெட் அல்லது சில்வர் நிறம் கொண்டிருக்கிறது. சீட்களில் ஸ்டிட்ச் கூட பயனர் தேர்வு செய்யும் மாடலின் நிறத்திற்கு ஏற்றதாக வழங்கப்படுகிறது.
பஜாஜ் பல்சர் 150 கிளாசிக் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் 2018 பல்சர் 150 என கருதப்பட்டது, எனினும் புதிய மாடல்களில் தற்போதைய பல்சர் 150 மாடலில் இல்லாத சில அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது.
ஒற்றை சீட் அமைப்பு, டிரம் பிரேக், டேன்க் எக்ஸ்டென்ஷன்கள் மற்றும் பாடி கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை இடம்பெறவில்லை. பல்சர் 150 கிளாசிக் எடிஷன் 2006ம் ஆண்டு அறிமுகமான இரண்டாம் தலைமுறை பஜாஜ் பல்சர் மாடலை நினைவூட்டும் வகையில் காட்சியளிக்கிறது. இதன் வடிவமைப்பும் முந்தைய மாடலைப் போன்றே காட்சியளிக்கிறது.
எனினும் இதன் என்ஜின் அம்சங்கள் பி.எஸ். IVரக 2018 பஜாஜ் பல்சர் 150 மாடலில் உள்ளதைப் போன்றே வழங்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய மோட்டார்சைக்கிளிலும் 149சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சம் 14 பி.ஹெச்.பி. பவர், 13.4 என்.எம். டார்கியூ மற்ரும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
மோட்டார்சைக்கிளின் பின்புறம் ட்வின் கேஸ்-சார்ஜ் செய்யப்பட்ட ஷாக் அப்சார்பர்களும், முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்களை கொண்டுள்ளது. இத்துடன் முன்பக்கம் 240எம்.எம். டிஸ்க் பிரேக், பின்புறம் 130எம்.எம். டிரம் பிரேக் கொண்டிருக்கிறது. பஜாஜ் பல்சர் 150 கிளாசிக் எடிஷன் புதிய நிறங்கள் அந்நிறுவன வலைதளத்தில் அப்டேட் செய்யப்படவில்லை, என்றாலும் இவை விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு தூய்மையே உண்மையான சேவை இயக்கத்தின் பிரசாரத்தை கலெக்டர் பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்தார்.
தேனி:
மத்திய அரசு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக செப்டம்பர் 15-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை ‘தூய்மையே உண்மையான சேவை இயக்கம்’ நடத்த உத்தரவிட்டது. இதுதொடர்பாக விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தூய்மையே உண்மையான சேவை இயக்கத்தின் பிரசாரம் தொடக்க விழா, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் 4-ம் ஆண்டு தொடக்க விழா தேனி அருகே அரண்மனைப்புதூர் ஊராட்சியில் அம்மா பூங்காவில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர், தூய்மையே உண்மையான சேவை இயக்கம் குறித்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் தலைமையில் அரசுத்துறை அதிகாரிகளும், பொதுமக்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறியதாவது:-
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவினை கொண்டாடும் விதமாக தூய்மையே உண்மையான சேவை இயக்க(2018) பிரசாரம் அக்டோபர் 2-ந்தேதி வரை நடக்கிறது. அதனடிப்படையில், மாவட்டத்தில் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நெகிழி (பிளாஸ்டிக்) ஒழிப்பு, குடிநீர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, வடிகால் வாய்க்கால் சுத்தப்படுத்துதல், பொது இடங்களில் தூய்மை பணி மேற்கொள்ளுதல், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே பல்வேறு போட்டிகள் மற்றும் பேரணி, சுகாதார களப்பணியாளர்கள் மூலம் சுகாதார நிலைத்தன்மை நிலைநிறுத்திட விழிப்புணர்வு கூட்டம், வட்டார அளவிலான சுகாதார மருத்துவ முகாம் நடத்துதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
கழிப்பிடம் பயன்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு அளித்தல், நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்கள், தெருக்களில் உள்ள சிறுபாலங்களை தூய்மைபடுத்துதல், தேவையின் அடிப்படையில் புதிய பெண்கள், ஆண்கள் சுகாதார வளாகங்கள் அனைத்து ஊராட்சிகளிலும் கட்டுமான பணிகள் தொடங்குதல், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சுகாதார பணிகளில் ஈடுபட்ட சிறந்த ஊக்குனர்களை கவுரவித்தல் மற்றும் சுகாதார போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்குதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், தூய்மையே உண்மையான சேவை இயக்க பிரசாரத்தின் ஒரு பகுதியாக வருகிற 25-ந்தேதி ‘மாஸ் கிளனிங்’ என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் தூய்மை பணிகள் நடத்தப்பட உள்ளன. அதன்படி, அனைத்து ஊராட்சிகள், அரசு கட்டிடங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி, பள்ளி வளாகங்கள், ஆரம்ப சுகாதார மையங்களில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரசாரத்துக்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) தினேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் கவிதா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அபிதாஹனீப், வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு புதிய தூய்மை திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். #PMModi #MahatmaGandhi #SwachhataHiSeva
புதுடெல்லி:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக புதிய தூய்மை திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. ‘தூய்மையே உண்மையான சேவை’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், மகாத்மா காந்தி பிறந்த 150-வது ஆண்டை அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ம் தேதி நாம் தொடங்குகிறோம். பாபுவின் (காந்தியடிகள்) கனவை நிறைவேற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும், வரலாற்று சிறப்புமிக்க தூய்மை இந்தியா திட்டமும் அன்றைய தினத்தில் 4-வது ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அனைவரையும் வணங்குகிறேன்.
இதன் தொடர்ச்சியாக 15-ம் தேதி காலை 9.30 மணியளவில் தூய்மையே உண்மையான சேவை என்ற திட்டத்தை தொடங்கவுள்ளேன். அன்றைய தினம், தூய்மை இந்தியா திட்டத்தில் அயராது உழைத்து வரும் தொண்டர்களுடன் கலந்துரையாடுவதை நான் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன்.
இந்த திட்டத்தில் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தை வலுப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இதுவே மகாத்மா காந்திக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை ஆகும் என தெரிவித்துள்ளார். #PMModi #MahatmaGandhi #SwachhataHiSeva
×

X