search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் சீசன் 2018"

    ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்ததோடு, கடும் நெருக்கடி வங்காள தேசத்திற்கு பாராட்டும் தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காள தேச அணிகள் மோதின. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் களம் இறங்கிய வங்காள தேசம் 222 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா கஷ்டப்பட்டு கடைசி பந்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

    7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஓய்வில் இருக்கும் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மிகவும் பரப்பாக சென்ற போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு 7-வது முறையாக கோப்பையை கைப்பற்றினார்கள். கடும் சவாலாக விளங்கிய வங்காள தேச அணிக்க பாராட்டுக்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.
    ஆசிய கோப்பை போட்டியில் அடுத்தடுத்து அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 5 ஆட்டங்களில் 342 ரன்கள் குவித்து ஆசிய கோப்பை தொடர் நாயகன் விருதை கைப்பற்றியுள்ளார். #AsiaCup2018 #ShikharDhawan
    துபாய்:

    இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பையில் அதிரடியாகவும், பரபரப்பாகவும் விளையாடிய இந்திய அணி தனது வெற்றியை நிலைநாட்டி கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில், அதிரடியாக விளையாடி தனது திறமையை அனைத்து வீரர்களும் வெளிப்படுத்தினர்.

    இந்த ஆசிய கோப்பை விளையாட்டில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோஹித் சர்மா, 1 சதம், 2 அரை சதத்துடன் 317 ரன்கள் குவித்து 2-வது இடத்தை பிடித்துள்ளார்.



    இந்த போட்டியில் தனது சிறப்பான ஆட்டம் மூலம் தொடக்க ஆட்டக்காரர் தவான் 5 ஆட்டத்தில் விளையாடி 342 ரன் குவித்து முதலிடத்தை பிடித்துள்ளார். அவரது சராசரி 68.40 ஆகும். இரண்டு சதம் அடித்து, அதிகபட்சமாக 127 ரன்கள் குவித்துள்ளார். இந்த சிறப்பான ஆட்டம் மூலம் தவான் முதலிடத்தை பிடித்து, தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றியுள்ளார்.

    வங்காளதேச வீரர் முஷ்பிகுர் ரகீம் 1 சதத்துடன் 302 ரன் எடுத்து 3-வது இடத்திலும், ஆப்கானிஸ் தானை சேர்ந்த முகமது‌ஷசாத் 268 ரன் எடுத்து 4-வது இடத்திலும் உள்ளனர்.

    பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 6 ஆட்டத்தில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 45 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்துவீச்சாகும். இதேபோல, ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத்கானும், முஷ்டாபிசுர் ரகுமானும் தலா 10 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். இருவரும் 5 ஆட்டத்தில் இந்த விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். மற்ற இந்திய வீரர்களில் பும்ரா 8 விக்கெட்டுகளும், ஜடேஜா 7 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். #AsiaCup2018 #ShikharDhawan
    துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றது, உழைப்புக்கு கிடைத்த பரிசு என்று ரோகித்சர்மா கூறியுள்ளார்.#AsiaCup2018 #INDvBAN

    துபாய்

    துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

    ஆசிய கோப்பையை கைப்பற்றியது குறித்து இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    ஆசிய கோப்பை போட்டித் தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாக இருந்தது. இந்தப் போட்டித் தொடரில் ஆதிக்கம் செலுத்தியதற்கு நல்ல வெகுமதி கிடைத்தது. வீரர்களின் கூட்டு முயற்சியில் வெற்றி பெற்றோம். அனைத்து வீரர்களின் பங்களிப்பு இல்லாமல் கோப்பையை வென்று இருக்க முடியாது. எல்லா பெருமையும் அவர்களை சேரும்.


    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கள் (நடுவரிசை வீரர்) நெருக்கடியான சூழ்நிலையில் சிறப்பாக விளையாடியது முக்கியமானது. அவர்கள் ஆட்டத்தை முடித்த விதம் அருமையானது.

    அதோடு வங்காளதேச அணியையும் பாராட்டியே ஆக வேண்டும். அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினார்கள். முதல் 10 ஓவரில் கடுமையான நெருக்கடி கொடுத்தார்கள். பந்து பழசாகிவிட்டால் எல்லாம் மாறும் என்று தெரியும். ரசிகர்களும் திரளாக வந்து தங்களது சிறப்பான ஆதரவை அளித்தார்கள். இதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.. #AsiaCup2018 #INDvBAN
    துபாய் :

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

    வங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெஹிதி ஹசன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த லிட்டோஸ் தாஸ் அதிரடியா விளையாடி ரன் குவித்தார்.

    வங்காள தேசம் முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் குவித்தது. 17.5 ஓவரில் வங்காள தேசம் 100 ரன்னைத் தொட்டது. 21-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் மெஹிதி ஹசன் ஆட்டமிழந்தார். அவர் 59 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசம் முதல் விக்கெட்டுக்கு 20.5 ஓவரில் 120 ரன்கள் குவித்தது.

    அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 2 ரன்கள், முஷ்பிகுர் ரஹிம் 5 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து வெளியேறினார்கள். 4-வது விக்கெட்டாக களம் இறங்கிய முகமது மிதுரை மின்னல் வேகத்தில் ஜடேஜா ரன்அவுட் ஆக்கினார்.

    இதனால் 39 ரன்னுக்குள் வங்காள தேசம் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் லிட்டோன் தாஸ் சதம் அடித்தார். சதம் அடித்த லிட்டோன் தாஸ், கேப்டன் மோர்தசா ஆகியோர் அசுர வேகத்தில் எம்எஸ் டோனி ஸ்டம்பிங் செய்து வேளியேற்றினார். மெஹ்முதுல்லா 4 ரன்னிலும், சதம் அடித்த லிட்டோன் தாஸ் 121 ரன்னிலும் வெளியேறினார்கள்.

    சவுமியா சர்கர் கடைசி வரை போராடி 33 ரன்கள் அடிக்க வங்காள தேசம் 48.3 ஓவரில் 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 223 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    இதைத்தொடர்ந்து, இந்திய அணி சேசிங் செய்ய தொடங்கியது, ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள்.

    இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 15 ரன்கள் அடித்திருந்த தவான், நஸ்முல் இஸ்லாம் பந்துவீச்சில் சவுமியா சர்காரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராயுடு 2 ரன்களில் மோர்டாசா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா ரூபல் ஹூசைன் பந்தில் நஸ்முல் இஸ்லாமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 53 பந்துகளில் 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 48 ரன்கள் எடுத்தார்.

    பின்னர் களமிறங்கிய தோனி, 4-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்தார். வங்காளதேச வீரர்களின் பந்துகளை பொறுப்பான முறையில் எதிர்கொண்ட இவர்கள் அணியின் எண்ணிக்கையை சீரான வேகத்தில் உயர்த்தினர். ஆனால், மகமதுல்லா வீசிய பந்தில் தினேஷ் கார்த்திக் 37 ரன்கள் அடித்திருந்த போது எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    தோனி - தினேஷ் கார்த்திக் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் குவித்தது. கார்த்திக் ஆட்டமிழந்த சில நிமிடங்களிலேயே 36 ரன்களில் முஸ்தாபிசூர் ரஹ்மான் பந்தில் தோனி அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவுக்கு ஆரம்பத்திலேயே தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில்  பாதி ஆட்டத்திலேயே வெளியேறிவிட்டார்.

    இதனால், 169 ரன்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்ததால் இந்திய அணியின் ரன் ரேட் விகிதம் குறைந்து ஆட்டத்தில் வங்காளதேச அணியின் கை ஓங்கியது.

     

    இருந்தாலும் அடுத்து ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் புவனேஷ்வர் குமார் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையையும் உயர்த்தினர். இதனால் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்த பதட்டம் தனிந்து வெற்றியை நோக்கி இந்தியா பயணித்தது.

    ஆனால் வெற்றிக்கு 11 ரன்களே தேவை என்ற நிலையில் 23 ரன்களில் ஜடேஜா ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளில் 21 ரன்கள் அடித்திருந்த புவனேஷ்வர் குமாரும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். தசைப்பிடிப்பினால் வெளியேறிய ஜாதவ் மீண்டும் களமிறங்கினார்.

    இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 223 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. கேதர் ஜாதவ் 23 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 5 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 48 ரன்கள், தினேஷ் கார்த்திக் 37 ரன்கள், தோனி 36 ரன்கள் குவித்தனர். வங்காளதேச அணியில் முஸ்தாபிசூர் மற்றும் மோர்டாசா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். #AsiaCup2018 #INDvBAN
    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 223 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம். #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை 5 மணிக்கு துபாயில் தொடங்கியது. இதில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

    வங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெஹிதி ஹசன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த லிட்டோஸ் தாஸ் அதிரடியா விளையாடி ரன் குவித்தார்.

    வங்காள தேசம் முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் குவித்தது. லிட்டோன் தாஸ் 12-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதே ஓவரின் 3-வது பந்தில் லிட்டோன் தாஸ் கொடுத்த கேட்சை சாஹல் பிடிக்க தவறினார்.

    17.5 ஓவரில் வங்காள தேசம் 100 ரன்னைத் தொட்டது. 21-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் மெஹிதி ஹசன் ஆட்டமிழந்தார். அவர் 59 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசம் முதல் விக்கெட்டுக்கு 20.5 ஓவரில் 120 ரன்கள் குவித்தது.



    அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 2 ரன்கள் எடுத்த நிலையிலும், முஷ்பிகுர் ரஹிம் 5 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து வெளியேறினார்கள். 4-வது விக்கெட்டாக களம் இறங்கிய முகமது மிதுரை மின்னல் வேகத்தில் ஜடேஜா ரன்அவுட் ஆக்கினார்கள்.

    இதனால் 39 ரன்னுக்குள் வங்காள தேசம் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. இதில் இருந்து பின்னர் வங்காள தேசத்தால் மீள இயலவில்லை. ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் லிட்டோன் தாஸ் சதம் அடித்தார். சதம் அடித்த லிட்டோன் தாஸ், கேப்டன் மோர்தசா ஆகியோர் அசுர வேகத்தில் எம்எஸ் டோனி ஸ்டம்பிங் செய்து வேளியேற்றினார்.



    மெஹ்முதுல்லா 4 ரன்னிலும், சதம் அடித்த லிட்டோன் தாஸ் 121 ரன்னிலும் வெளியேறினார்கள். 20.5 ஓவரில் 120 ரன்கள் குவித்த வங்காள தேசம் 44 ஓவரில்தான் 200 ரன்னைத் தொட்டது. சவுமியா சர்கர் கடைசி வரை போராடி 33 ரன்கள் அடிக்க வங்காள தேசம் 48.3 ஓவரில் 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 223 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

    இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்காள தேசம் 24 ஓவரில் 2 விக்கெட்டு இழப்பிற்கு 128 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை 5 மணிக்கு துபாயில் தொடங்கியது. இதில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

    ‘சூப்பர் 4’ சுற்றில் வங்காள தேசம், பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா ஐந்து மாற்றங்களை செய்தது. ரோகித் சர்மா, மணிஷ் பாண்டே, சாஹல், பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே, சித்தார்த் கவுல், கலீல் அகமது, தீபக் சாஹர் ஆகியோர் களம் இறக்கப்பட்டனர்.

    இதில் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கிய அரைசதம் அடித்தார். பரபரப்பான ஆட்டத்தில் போட்டி ‘டை’ ஆனது. இன்று நடைபெற்றும் வரும் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ஐந்து பேரும் நீக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கிய ஐந்து பேரும் சேர்க்கப்பட்டனர்.

    வங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெஹிதி ஹசன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த லிட்டோஸ் தாஸ் அதிரடியா விளையாடி ரன் குவித்தார்.



    வங்காள தேசம் முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் குவித்தது. லிட்டோன் தாஸ் 12-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதே ஓவரின் 3-வது பந்தில் லிட்டோன் தாஸ் கொடுத்த கேட்சை சாஹல் பிடிக்க தவறினார்.

    17.5 ஓவரில் வங்காள தேசம் 100 ரன்னைத் தொட்டது. 21-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் மெஹிதி ஹசன் ஆட்டமிழந்தார். அவர் 59 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசம் முதல் விக்கெட்டுக்கு 20.5 ஓவரில் 120 ரன்கள் குவித்தது.

    2-வது விக்கெட்டுக்கு லிட்டோன் தாஸ் உடன் இம்ருல் கெய்ஸ் ஜோடி சேர்ந்தார். கெய்ஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். வங்காள தேசம் 24 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் குவித்துள்ளது. லிட்டோஸ் 92 ரன்னுடனும் விளையாடி வருகிறார்.
    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். #AsiaCup2018 #INDvBAN
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை 5 மணிக்கு துபாயில் தொடங்குகிறது. இதில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சரியாக மாலை 4.30 மணிக்கு சுண்டப்பட்டது. வங்காள தேச அணி கேப்டன் மோர்தசா ‘ஹெட்’ என அழைத்தார். ஆனால் ‘டெய்ல்’ விழ ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.
    இந்தியாவிற்கு எதிராக இறுதிப் போட்டியில் 260 முதல் 270 வரை அடித்தால் இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்க முடியும் என வங்காள தேசம் கேப்டன் தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை 5 மணிக்கு துபாயில் தொடங்குகிறது. இதில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. துபாய் மைதானத்தில் இந்தியா ஒரேயொரு முறைதான் முதலில் பேட்டிங் செய்தது. அந்த போட்டியில் இந்தியா நிர்ணயித்த ஸ்கோரை ஹாங் காங் விரட்டியது. மற்ற போட்டிகளில் இந்தியா 2-வது பேட்டிங் செய்து வெற்றிகளை பெற்றது. கடைசி போட்டி ‘டை’யில் முடிந்தது.

    இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராக 260 முதல் 270 ரன்கள் அடித்தால் சிறந்த முறையில் நெருக்கடி அளிக்க முடியும் என வங்காள தேச அணி கேப்டன் மோர்தசா தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து மோர்தசா கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிராக நாங்கள் 260 முதல் 270 ர ன்கள் அடித்தால், அது நெருக்கடி கொடுக்கும் அளவிற்கான ஸ்கோராக இருக்கும். எனினும், அது வெற்றிக்கான ரன்கள் என்னால் உறுதியாக கூற இயலாது. நாங்கள் முதலில் பந்து வீசினால், அவரைகள் குறைந்த ரன்னில் கட்டுப்படுத்த வேண்டும். அப்படி என்றால்தான் அது சிறப்பானதாக இருக்கும்.

    இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்தான் வங்காள தேசத்தின் அழகான போட்டியை கண்டேன். முஷ்பிகுர் ரஹிம், மிதுன் பேட்டிங்கிலும், மிராஜ் மற்றும் முஷ்டாபிஜுர் ரஹ்மான் பந்து வீச்சிலும் அசத்தினார்கள்’’ என்றார்.
    ஐந்தாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி நாளை கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #ISL2018 #ATKvKBFC
    கொல்கத்தா:

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி 2014-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நாளை கொல்கத்தாவில் தொடங்குகிறது.

    இதில் சென்னையின் எப்.சி., அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், பெங்களூரு எப்.சி., கோவா எப்.சி., புனே சிட்டி, ஜாம்ஷெட்பூர், மும்பை சிட்டி எப்.சி., டெல்லி டைனமொஸ், நார்த்ஈஸ்ட் யுனைடெட் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். உள்ளூர், வெளியூர் என்ற அடிப்படையில் போட்டி நடைபெறும். இதன்படி ஒவ்வொரு அணியும் தலா 18 ஆட்டங்களில் விளையாடும். அதன்படி மொத்த லீக் ஆட்டங்கள் 90 ஆகும்.

    லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே- ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்தியாவில் 10 நகரங்களில் போட்டி நடக்கிறது.


    கொல்கத்தாவில் நாளை நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியான அட்லெடிகோ டி கொல்கத்தா- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    தற்போது டிசம்பர் 16-ந்தேதி வரை லீக் ஆட்டங்களான அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் சுமார் 2½ மாதம் காலம் 59 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் சர்வதேச போட்டி காரணமாக 3 முறை சிறிது இடைவெளி விடப்பட்டு போட்டிகள் நடக்கிறது.

    மீதமுள்ள லீக் ஆட்டங்கள், பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி, தேதி, இடம் விவரம் பின்னர் அறிவிக்கப்படுகிறது.

    சென்னையை தலைமையிடமாக கொண்டுள்ள சென்னையின் எப்.சி. அணி 3-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. பிரேசிலைச் சேர்ந்த மெயில்சன் ஆல்வஸ் தலைமையிலான சென்னையின் எப்.சி. நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களம் இறங்குகிறது.


    மலேசியாவில் முதல்கட்ட பயிற்சி முகாமை முடிந்து சென்னையின் எப்.சி. பின்னர் கோவாவில் பயிற்சியை முடித்துள்ளது. தனது முதல் ஆட்டத்தில் வருகிற 30-ந்தேதி பெங்களூரு எப்.சி.யுடன் மோதுகிறது.

    இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் கிரிகோரி பயிற்சியாளராக உள்ளார். அவர் கூறும்போது, இந்த முறையும் கோப்பையை வசப்படுத்துவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    சென்னையின் எப்.சி. அணியில் இந்தியாவைச் சேர்ந்த ஜெ.ஜெ. லால் பெகுக்லா, முகமது ரபி, தனபால் கணேஷ், ஜெர்மன் பிரீத்சிங், அனிருத் தபா மற்றும் பிரேசில், ஸ்பெயின், நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கொல்கத்தா (2014, 2016), சென்னை (2015, 2017) தலா 2 முறை கைப்பற்றி உள்ளன.  #ISL2018 #ATKvKBFC
    பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்டுள்ளார். #PAKvAUS #MohammadAmir
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் பாகிஸ்தானுடன் 2 போட்டி டெஸ்ட் தொடரில் மோதுகிறது. இப்போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இதற்கான 17 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

    தற்போது நடந்து வரும் ஆசிய கோப்பையில் முகமது அமீர் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. மேலும் கடந்த 10 ஒருநாள் போட்டியில் முகமது அமீர் 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தி உள்ளார்.

    அவர் பார்மில் இல்லாததால் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ் அணியில் சேசர்க்கப்பட்டுள்ளார். புதுமுக வீரராக வேகப்பந்து வீச்சாளர் மிர் அம்சா தேர்வு செய்யப்பட்டுள்ளார். #PAKvAUS #MohammadAmir
    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்காள தேசத்தை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம் என்று தவான் தெரிவித்துள்ளார். #AsiaCup2018 #INDvBAN
    இந்தியா, பாகிஸ்தான் உள்பட ஆறு அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அபு தாபி மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதுவரை லீக் மற்றும் சூப்பர் 4 சுற்று முடிந்து நாளை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்திய அணி தோல்வியை சந்திக்காமலும், வங்காள தேசம் இரண்டு தோல்வியுடனும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளன.

    சூப்பர் 4 சுற்றில் இந்தியா வங்காள தேசத்தை வீழ்த்தியிருந்தாலும். என்றாலும் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் வங்காள தேசத்தை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோன் என்று துணைக் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷிகர் தவான் கூறுகையில் ‘‘வங்காள தேசம் அணி மிகவும் பேலன்ஸ் ஆன அணி. அவர்களுடைய பலம் அவர்களுக்குத் தெரியும். கடந்த சில வருடங்களாக அவர்கள் நின்றாக முன்னேற்றம் அடைந்து, தரமான அணியாக மாறியுள்ளனர். பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்படுகின்றன. அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டா், முடிவுகள் இயற்கையாகவே வந்து சேரும்.



    வங்காள தேசம் அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். வங்காள தேசத்தை தவிர ஐக்கிய அரபு எமிரேட்சிலும் அந்த அணியை வீழ்த்துவது கடினம். அனுபவமான வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். அவர்களுக்கு நெருக்கடியான நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பது தெரியும். பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடும்போது கூட நெருக்கடிக்கு உள்ளாவது கிடையாது. இது சிறந்த விஷயமாகும். சூப்பர் 4 சுற்றில் அவர்களை தோற்கடித்திருந்தாலும், நாளைய போட்டியை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம்’’ என்றார்.
    வங்காள தேசத்திற்கு எதிராக பாகிஸ்தான் அணி 2014-ம் ஆண்டிற்கு முன் 32 போட்டிகளில் 31 வெற்றிகளை ருசித்த நிலையில், தற்போது தடுமாறி வருகிறது. #AsiaCup2018 #BANvPAK
    பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய 6 அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை அணிகள் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் வளர்ந்து வரும் அணிகள் என்பதால் அவ்வப்போது பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும்.

    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை வங்காள தேசம் 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    இந்தியா - பாகிஸ்தான், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆட்டம் எவ்வளவு முக்கியமானதாக கருதப்படுகிறதோ, அதேபோல் பாகிஸ்தான் - வங்காள தேச அணிகள் இடையிலான ஆட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    ஆரம்ப கால கட்டத்தில் வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் எளிதில் வெற்றி பெற்று விடும். தற்போது பாகிஸ்தான் கடும் சவாலை சந்திக்க வேண்டியுள்ளது.



    1986-ம் ஆண்டு முதல் 2014 வரை பாகிஸ்தான் - வங்காள தேசம் இடையில் 32 போட்டிகள் நடைபெற்றன. இதில் 25 போட்டிகளில்  தொடர்ச்சியாக வெற்றி பெற்ற பாகிஸ்தான் 31 வெற்றிகளை ருசித்தது. ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை சந்திதது.

    ஆனால் 2015-க்குப் பிறகு பாகிஸ்தான் நிலைமைய தலைகீழாக மாறியுள்ளது. 2015 முதல் நேற்று வரை நான்கு போட்டிகளில் மோதியுள்ளன. இந்த நான்கிலும் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது.
    ×