search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் சீசன் 2018"

    வங்காள தேசத்திடம் தோல்வியடைந்து இறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான், பயிற்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அப்ரிடி வலியுறுத்தியுள்ளார். #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேற இயலும் என்ற நிலையில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் பேட்டிங் வங்காள தேசம் 239 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. பாகிஸ்தான் அணியால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பாகிஸ்தான் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது.

    வங்காள தேசம் அணியிடம் தோல்வியடைந்து பாகிஸ்தான் அணிக்கு முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஷாகித் அப்ரிடி ‘டுவிட்டர்’ மூலம் அறிவுரை வழங்கியுள்ளார்.

    அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘வங்காள தேச அணிக்கு வாழ்த்துக்கள். அனைத்து துறையிலும் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு ஏமாற்றம் அளித்தது. மைதானத்தில் ஆக்ரோசமான ஆட்டம் அனைத்து துறைகளிலும் மிஸ். கடந்த தொடரில் இளம் வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அணி மீது அதிக அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. திரும்பவும் நல்ல நிலைக்கு திரும்பி பயிற்சி ஆட்டத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்’’  என பதிவிட்டுள்ளார்.
    முஷ்பிகுர் ரஹிம், முகமது மிதுன் அரைசதங்களால் பாகிஸ்தான் வெற்றிக்கு 240 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம். #AsiaCup2018 #BANvPAK
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டியில் பாகிஸ்தான் - வங்காள தேசம் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் முகமது அமிர் நீக்கப்பட்டு ஜுனைத் கான் சேர்க்கப்பட்டிருந்தார். வங்காள தேச அணியில் ஷாகிப் அல் ஹசன் இடம்பெறவில்லை.

    லிட்டோன் தாஸ், சவுமியா சர்கார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சவுமியா சர்கார் ரன்ஏதும் எடுக்காமல் ஜுனைத் கான் பந்தில் ஆட்டமிழந்தார். லிட்டோன் தாஸ் 6 ரன்னில் ஜுனைத் கான் பந்திலும், அடுத்து வந்த மொமினுல் ஹக்யூ 5 ரன்னில் ஷஹீன் அப்ரிடி பந்திலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

    இதனால் வங்காள தேசம் 12 ரன்கள் எடுப்பதற்குள் முதல் மூன்று விக்கெட்டுக்களையும் இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம் உடன் முகமது மிதுன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வங்காள தேசத்தை சரிவில் இருந்து மீட்டது. இவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

    வங்காள தேச அணியின் ஸ்கோர் 156 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. முகமது மிதுன் 60 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் குவித்து அணியை மீட்டனர்.



    அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 9 ரன்னில் வெளியேறினார். 7-வது வீரராக மெஹ்முதுல்லா களம் இறங்கினார். அரைசதம் அடித்த முஷ்பிகுர் ரஹிம் சதத்தை நோக்கி முன்னேறினார். 99 ரன்கள் அடித்த நிலையில் துரதிருஷ்டவசமாக ஷஹீன் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். 7-வது விக்கெட்டுக்கு மெஹ்முதுல்லா உடன் மெஹிதி ஹசன் ஜோடி சேர்ந்தார்.

    இருவரும் அடித்து விளையாடி விரும்பினார்கள். ஆனால் மெஹித் ஹசன் 11 பந்தில் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஜுனைத் கான் பந்தில் ஆட்டமிழந்தார். மெஹ்முதுல்லா 25 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 49-வது ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழக்க வங்காள தேசம் 48.5 ஓவரில் 239 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் பாகிஸ்தானுக்கு 240 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. பாகிஸ்தான் அணியின் ஜூனைத் கான் நான்கு விக்கெட்டுக்களும், ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் ‘டை’ ஆனதால் கண்ணீர் விட்டு கதறிய சிறுவனுக்கு ரஷித் கான், ஷேசாத் ஆறுதல் கூறினார்கள். #INDvAFG #AsiaCup2018
    இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்தியா தோல்வியை நோக்கிச் சென்றது.

    கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ரஷித் கான் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் போட்டி ‘டை’யில் முடிந்தது. கடைசி ஓவரை சந்தித்த ஜடேஜா முதல் பந்தில் ரன்ஏதும் அடிக்கவில்லை. 2-வது பந்தை பவுண்டரிக்கு தூக்கினார். இதனால் கடைசி நான்கு பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது. 3-வது பந்தில் ஜடேஜா ஒரு ரன்னும், 4-வது பந்தில் கலீல் அகமது ஒரு ரன்னும் எடுத்தனர்.

    இதனால் ஸ்கோர் 252 என சமநிலைப் பெற்றது. கடைசி இரண்டு பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தை ஜடேஜா சந்தித்தார். கைவசம் விக்கெட் இல்லாததால் ரசிகர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர். ஜடேஜா ஒரு ரன் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி ‘டை’ ஆனது.



    இந்நிலையில் ஜடேஜா அவுட் ஆனவுடன் மைதானத்தில் இருந்த ஒரு சீக்கிய சிறுவன் மிகவும் கவலையடைந்து அழுதான். இக்காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதையடுத்து அச்சிறுவனை நேரில் சந்தித்து ஆப்கானிஸ்தான் வீரர்களான ரஷித் கான் மற்றும்  முகமது ஷேசாத் ஆகியோர் அறுதல் கூறினார்கள்.

    அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. சிறுவனுக்கு ஆறுதல் கூறிய ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
    ஆசிய கோப்பை ‘சூப்பர் 4’ கடைசி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்காள தேசம் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #AsiaCup2018
    ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றின் கடைசி ஆட்டம் அபு தாபியில் இன்று நடக்கிறது. இதில் பாகிஸ்தான் - வங்காள தேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வங்காள தேச அணி கேப்டன் மோர்தசா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.



    வங்காள தேச அணியில் ஷாகிப் அல் ஹசன் இடம்பெறவில்லை. சர்கார், ருபெல், மொமினுல் ஹக்யூ ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
    ஆசிய கோப்பை தொடரில் அனைத்து போட்டிகளிலும் சவால் விடுத்த ஆப்கானிஸ்தான் அணியை பாராட்டியே ஆக வேண்டும். #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய ஆறு அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. ஹாங் காங் அணி தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று முக்கிய தொடருக்கு வந்தது. மற்ற ஐந்து அணிகளும் நேரடியாக தகுதி பெற்றன.

    ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங் காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பிடித்திருந்தன.

    ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா பாகிஸ்தான் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கும், ‘பி’ பிரிவில் இருந்து இலங்கை, வங்காள தேசம் அணிகளும் முன்னேறும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஆப்கானிஸ்தான் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    குறிப்பாக ஆப்கானிஸ்தான் விளையாடிய போட்டிகள் அனைத்து ‘ஒன் சைடு’ போட்டியாக இல்லை. இழுபறியாகவே சென்றது. லீக் சுற்றில் இலங்கை, வங்காள தேசத்தை துவம்சம் செய்து ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறியது.

    சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் சேர்த்தது. பின்னர் பாகிஸ்தான் 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.

    பாகிஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் சோயிப் மாலிக் நிலைத்து நின்று 43 பந்தில் 51 ரன்கள் அடிக்க 49.3 ஓவரில் இலக்கை எட்டி தப்பித்தோம் பிழைத்தோம் என பாகிஸ்தான் வெற்றி பெற்றது.



    2-வது ஆட்டத்தில் வங்காள தேசத்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 7 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. பின்னர் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களம் இறங்கியது. கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தானுக்கு 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக நான்கு ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் மூன்று ரன்னில் தோல்வியை சந்தித்தது.



    நேற்று இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்தியா தோல்வியை நோக்கிச் சென்றது.

    கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ரஷித் கான் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் போட்டி ‘டை’ ஆனது. மற்ற அணிகள் மோதிய ஆட்டங்கள் பெரும்பாலும் ‘ஒன் சைடு’ ஆட்டமாகவே சென்றது. ஆனால், ஆப்கானிஸ்தான் அனைத்து போட்டிகளிலும் சடும சவால் கொடுத்தது. இதனால் அந்த அணிக்கு ஒரு சபாஷ் போடலாம்.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டர்களை மாற்ற சொன்ன குல்தீப் யாதவுக்கு டோனி எச்சரிக்கை விடுத்துள்ளார். #MSDhoni #KuldeepYadav #INDvAFG
    குல்தீப் யாதவின் பந்துவீச்சு நேற்று சிறப்பாக இருந்தது. அவரது பந்து வீச்சுக்கு ஏற்றார் போல் டோனி பீல்டர்களையும் நிற்க வைத்தார்.

    ஆனாலும் குல்தீப் மீண்டும் மீண்டும் பீல்டர்களை மாற்ற சொல்லிக் கொண்டே இருந்தார். இதனால் டோனி சற்று கடுப்பாகி அவரை எச்சரித்தார்.



    “பவுலிங் போடப்பா. இல்லையென்றால் பவுலரை மாற்றி விடுவேன்” என்றார். டோனி இந்தியில் கூறியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதற்கு முன்பு இதே மாதிரி ஒருமுறை குல்தீப் யாதவை டோனி எச்சரித்து இருந்தார். #MSDhoni #KuldeepYadav #INDvAFG
    இந்திய ஒருநாள் அணிக்காக 200 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை டோனி படைத்துள்ளார். #AsiaCup2018 #MSDhoni #Dhonicaptain
    ஆசிய கோப்பை ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தியா ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, துணைக் கேப்டன் ஷிகர் தவான், பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    கேப்டன் மற்றும் துணைக் கேப்டனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் எம்எஸ் டோனி கேப்டனாக பொறுப்பேற்றார். டோனி ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக பொறுப்பேற்கும் 200-வது போட்டி இதுவாகும். இதன்மூலம் 200 போட்டிகளில் கேப்டனாக இருந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.



    டோனி கடைசியாக 2016-ம் ஆண்டு அக்டோபர் 29-ந்தேதி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கேப்டனாக பணியாற்றினார். அதன்பின் தற்போது 696 நாட்கள் கழித்து கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

    எம்எஸ் டோனி தலைமையில் இந்தியா 199 போட்டிகளில் விளையாடி 110-ல் வெற்றியை ருசித்துள்ளது. 74 போட்டியில் தோல்வியும் சந்தித்துள்ளது. 4 போட்டிகள் ‘டை’யில் முடிந்துள்ளன. 11 போட்டிகள் எந்தவித முடிவையும் சந்திக்கவில்லை.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் வலைப் பயிற்சியைப் பார்த்து அசந்து விட்டேன் என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். #INDvPAK
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் குரூப் பிரிவிலும், சூப்பர் 4 சுற்றிலும் மோதியுள்ளன. இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் அணியால் இந்தியாவிற்கு எந்த அளவிலும் நெருக்கடி கொடுக்க முடியவில்லை. இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா நேற்று முன்தினம் நடைபெற்ற ‘சூப்பர் 4’ சுற்றில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். குறிப்பாக ‘டெத்’ ஓவரில் அசத்தினார்.

    இந்தியா - பாகிஸ்தான் அணிகள் துபாய் ஐசிசி அகாடமியில் வலைப்பயிற்சி மேற்கொண்டனர். அப்போது பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பும்ராவின் பந்து வீச்சை பார்த்து சிலிர்த்து போய்விட்டார். பும்ராவின் பந்து வீச்சு வீடியோவை காண்பித்து பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பேன் என்றார்.



    இதுகுறித்து பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறுகையில் ‘‘பயிற்சியின் போது நாங்கள் 20 நிமிடம் அமர்ந்து, பும்ராவின் வலைப் பயிற்சியை பார்த்தோம். யார்க்கர், யார்க்கர் என அடுத்தடுத்து யார்க்கராக வீசி அசத்தினார். அவரது பந்து வீச்சு என்னை மிகவும் ஈர்த்தது. அதை எங்களுக்கு எதிராக செய்தும் காட்டினார்.

    நாங்கள் பும்ராவின் பந்து வீச்சை வீடியோவை காண்பித்து, ‘டெத்’ ஓவரில் எப்படி பந்து வீச வேண்டும் என்பதை எங்களது வீரர்களுக்கு கற்றுக் கொடுப்போம்’’ என்றார்.

    நாளை நடைபெறும் வங்காள தேசம் - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், வெள்ளிக்கிழமை இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
    இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுள்ளது. டோனி கேப்டனாக பணியாற்றுகிறார். #AsiaCup2018 #Dhoni
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், டோனி கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். அத்துடன் தீபக் சாஹர் அறிமுகமாகியுள்ளார்.

    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. லோகேஷ் ராகுல், 2. அம்பதி ராயுடு, 3. மணிஷ் பாண்டே, 4. டோனி, 5. தினேஷ் கார்த்திக், 6. கேதர் ஜாதவ், 7. ஜடேஜா, 8. தீபக் சாஹர், 9. சித்தார்த் கவுல், 10. குல்தீப் யாதவ், 11. கலீல் அகமது.
    ரோகித் சர்மாவின் கேப்டன் திறமையை பார்த்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் மனதார வாழ்த்தியுள்ளார். #AsiaCup2018 #RohitSharma
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று விளையாடும் இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை ஏற்றுள்ளார். இவரது தலைமையில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

    விராட் கோலி இல்லாத இந்திய அணியை ரோகித் சர்மாவால் பொறுப்பேற்று நடத்த முடியும் என்று ஹர்பஜன் சிங் கூறிய நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் மனதார வாழ்த்தியுள்ளார்.



    இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறுகையில் ‘‘இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா, அவரது வேலையை சிறப்பாக செய்துள்ளார். அவர் முன்னின்று அணியை வழி நடத்துகிறார். அவர் தொடர்ந்து மிகவும் எளிதாக ரன்கள் குவித்து வருகிறார்.

    அவருடன் துணைக் கேப்டன் ஆன ஷிகர் தவானும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர்கள் பேட்டிங் செய்ய வரும்போது, மிகவும் சிறப்பாக உள்ளோம் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு ஷாட்டையும் அடிக்கும் திறன் பெற்றிருக்கிறார்கள்’’ என்றார்.
    ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று சந்திக்கிறது. #AsiaCup2018 #INDvAFG
    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது. ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி இந்தப்போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது.

    ‘லீக்’ ஆட்டங்களில் ஹாங்காங்கை 26 ரன் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. ‘சூப்பர் 4’ சுற்றில் வங்காளதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்திம் வென்றது. இந்திய அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றியை ருசித்தது.

    இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று சந்திக்கிறது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு இந்தப்போட்டி தொடங்குகிறது.

    இந்த ஆட்டத்திலும் வென்று இந்தியாவின் அதிரடி நீடிக்கும்? என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது.

    பேட்டிங்கில் தவான் 327 ரன்னும், கேப்டன் ரோகித்சர்மா 269 ரன்னும், அம்பதி ராயுடு 116 ரன்னும் எடுத்து நல்ல நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் பும்ரா (7 விக்கெட்), புவனேஷ்வர் குமார் (6 விக்கெட்), குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல் (தலா 5 விக்கெட்) ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர்.

    இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று தெரிகிறது.


    தவான், டோனி அல்லது தினேஷ் கார்த்திக், பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவர்களுக்கு பதிலாக லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, சித்தார்த் கவூல், கலீல் அகமது ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

    ஆப்கானிஸ்தான் அணி ‘லீக்’ ஆட்டங்களில் இலங்கை, வங்காளதேசத்தை வீழ்த்தியது. ஆனால் ‘சூப்பர் 4’ சுற்றில் பாகிஸ்தான், வங்காளதேசத்திடம் தோற்று இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது. இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    இரு அணிகளும் இதற்கு முன்பு ஒரே ஒரு முறை மட்டுமே மோதியுள்ளன. இதில் இந்தியா வெற்றி பெற்று இருந்தது. #AsiaCup2018 #INDvAFG
    பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது ஒரு சிறந்த கேப்டன் அவரை ஆதரித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஊக்கப்படுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். #SarfrazAhmed #SouravGanguly
    புதுடெல்லி :

    14வது ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குரூப் பிரிவு ஆட்டத்திலும் பாகிஸ்தான் இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்தது.

    இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக பாகிஸ்தான் வீரர்களில் சிலர் கூறும்போது, நான் ஒருவனே இந்திய வீரர்களின் 10 விக்கெட்டையும் கைப்பற்றுவேன், கோலி இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவு என வெற்று வாய் சவடால் விட்டனர். ஆனால் நிஜத்தில் நடந்ததோ வேறு, இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளையும் சேர்த்து அவர்கள் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளனர்.

    மேலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் போராடி கடைசி ஓவரில் தான் வெற்றி பெற்றனர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி வீரர்கள் மீதும், கேப்டன் சர்பராஸ் அகமது மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சர்பராஸ் அகமது ஒரு சிறந்த கேப்டன் என புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

    சர்பிராஸ் அகமது ஒரு சிறந்த கேப்டன், அவரை போன்ற வீரர்கள் தினம் தினம் பிறந்து வர மாட்டார்கள். கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை அப்பழுக்கற்ற முறையில் சிறப்பாக வழிநடத்தி கோப்பையை வென்ற அவர் ஒரு தைரியமான வீரர்.

    ஆசிய கோப்பை தோல்விகளால் அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களை எல்லாம் புறம்தள்ளிவிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், முன்னாள் வீரர்களும் சேர்ந்து அவரை ஆதரித்து ஊக்கப்படுத்த வேண்டும் என கங்குலி கூறினார். #SarfrazAhmed #SouravGanguly
    ×