search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுசுகி ஜிக்சர் எஸ்.எஃப். 250"

    சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் புதிய ஜிக்சர் எஸ்.எஃப். 250 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

     

    சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் புதிய ஜிக்சர் எஸ்.எஃப். 250 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜிக்சர் எஸ்.எஃப். 250 மாடலின் விலை ரூ.1.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஜிக்சர் எஸ்.எஃப். 250 அந்நிறுவனத்தின் முதல் குவாட்டர்-லிட்டர் வாகனம் ஆகும். சுசுகி ஜிக்சர் எஸ்.எஃப். 250 மாடலில் முற்றிலும் புதிய வடிவமைப்பு பெரிய ஜி.எஸ்.எக்ஸ்.-ஆர். மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஐரோப்பிய வடிவமைப்பு மற்றும் பிரீமியம் தரம், அழகிய ஸ்டைலிங் உள்ளிட்டவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.



    ஃபுல்லி ஃபேர்டு ஜிக்சர் எஸ்.எஃப். 250 மாடலில் பெரிய டேன்க் வழங்கப்பட்டுள்ளது. அசத்தலான டூயல் எக்சாஸ்ட் மஃப்ளர் இந்த மாடலின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. இத்துடன் தங்க நிற என்ஜின் கவர், ஹேன்டிள்பார் க்ளிப்கள், எல்.இ.டி. ஹெட்லேம்ப் மற்றும் எல்.இ.டி. டெயில் லைட் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    சுசுகி ஜிக்சல் 250 மாடலில் புதிதாக உருவாக்கப்பட்ட 249 சிசி ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 26.5 பி.ஹெச்.பி. பவர் @9000 ஆர்.பி.எம். மற்றும் 22.6 என்.எம். டார்க் @7500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    சுசுகி ஜிக்சர் 250 மோட்டார்சைக்கிள் லிட்டருக்கு 38.5 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என சுசுகி தெரிவித்துள்ளது. இத்துடன் மோட்டார்சைக்கிளின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது.
    சுசுகி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் மோட்டார்சைக்கிளின் என்ஜின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.



    இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள சுசுகி நிறுவனத்தின் புதிய வரவாக ஜிக்சர் 250 சந்தைக்கு வர இருக்கிறது. இப்புதிய மாடல் மோட்டார்சைக்கிளை இம்மாதம் 20-ந் தேதி இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஆண்டின் மிகப் பெரிய, மறக்கமுடியாத அறிமுகமாக ஜிக்சர் 250 இருக்கும் என்று நிறுவனம் உறுதிபட நம்புகிறது.

    இந்நிறுவனம் மிகப் பெரிய எழுச்சியை பார்த்து ரசிக்க தயாராகுங்கள் என்கிற ரீதியில் விளம்பர வாசகம் மூலம் வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக புதிய மோட்டார்சைக்கிளை சுசுகி அறிமுகம் செய்யப் போகிறது என்ற செய்திகள் பரவலாக வெளிவந்துள்ளன.

    ஆனால் கடந்த ஆண்டுதான் 250 சி.சி. பிரிவில் ஒரு மோட்டார்சைக்கிளை இந்நிறுவனம் அறிமுகம் செய்யப் போவது உறுதியானது. இந்தியாவில் சுசுகி தயாரிப்புகளில் ஜிக்சர் பிராண்ட் மிகவும் பிரபலமாகிவிட்டது. இதனால் இந்தியாவில் ஜிக்சர் 250 என்ற பெயரில் இதை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.



    உறுதியான மோட்டார்சைக்கிளுக்குரிய அனைத்து வடிவமைப்புகளும் கொண்டதாக இது உள்ளது. இதில் 249 சி.சி., சிங்கிள் சிலிண்டர் என்ஜினைக் வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த என்ஜின் 26.5 பி.எஸ் மற்றும் 22.6 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. 

    4-வால்வ் கொண்ட இந்த என்ஜின் 6 கியர்களை உடையதாகவும் இது பி.எஸ்.6 புகைவிதிகளுக்கு உட்பட்டு இருக்கும். யமஹா பேஸர் மாடலுக்கு போட்டியாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.1.35 லட்சம் முதல் ரூ.1.45 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
    சுசுகி ஜிக்சர் 250 மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #suzuki #Gixxer250



    சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் ஜிக்சர் 250 மோட்டார்சைக்கிள் மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஜிக்சர் 250 இந்தியாவில் அடுத்த ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சுசுகி நிறுவனம் ஜி.எஸ்.எக்ஸ்.250 ஆர் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

    புதிய 250சிசி ஜிக்சர் மாடல் இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் ஜிக்சர் 150 மாடலை போன்று இருக்கும் என தெரிகிறது. இந்திய மாடலில் ட்வின்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படாமல், லிக்விட்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.



    ஜிக்சர் 150 போன்று ஜிக்சர் 250 மாடலும் நேக்கட் மற்றும் ஃபுல்லி-ஃபேர்டு வேரியன்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. வடிவமைப்பை பொருத்த வரை தற்போதைய 150சிசி மாடலைத் தழுவி சுசுகி ஜிக்சர் 250 மாடல் வடிவமைக்கப்படுகிறது. எனினும், இரு மாடல்களை வித்தியாசப்படுத்த சில மாடல்கள் கூடுதலாக வழங்கப்படலாம்.

    அதன்படி கூடுதல் அம்சங்களாக இன்வெர்டெட் ஃபோர்க், முன்புறம் மற்றும் பின்பக்கம் டிஸ்க் பிரேக், டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வசதி ஸ்டான்டர்டு அம்சமாக இருக்கும். தற்போதைய ஜிக்சர் 250 விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சில விவரங்கள் இணையத்தில் வெளியாகலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்சமயம் சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ஜிக்சர் மற்றும் ஜிக்சர் எஸ்.எஃப். 155சிசி மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்கிறது. இரண்டு வேரியன்ட்களிலும் 155சிசி ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 14.5 பி.ஹெச்.பி. பவர், 14 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    சுசுகி நிறுவனத்தின் ஜிக்சர் 250 மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Suzuki #Gixxer250



    இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 150சிசி மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாக சுசுகி ஜிக்சர் 150 இருக்கிறது. என்ட்ரி-லெவல் பிரிவில் மற்ற மாடல்களை விற்பனை செய்யாத நிலையில், சுசுகி நிறுவனம் ஜிக்சர் 250 மாடலினை 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து ஆட்டோகார் வெளியிட்டிருக்கும் தகவல்களில் சுசுகி ஜிக்டசர் 250சிசி பைக் தற்போதைய ஜிக்சர் 150 மாடலுக்கு சிறந்த அப்கிரேடாக இருக்கும். துவகத்தில் ஜிக்சர் 250 நேக்கட் வெர்ஷன் அனைவரும் வாங்கக்கூடிய விலையில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின், ஜிக்சர் 250 ஃபேர்டு வெர்ஷன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    புதிய ஜிக்சர் 250 மாடலில் GSX-S750  மற்றும் GSX-S1000 மாடல்களை போன்ற ஸ்டைலிங் செய்யப்படும் என கூறப்படுகிறது. எனினும் இந்தியாவுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் ஜிக்டர் 250சிசி மாடல்கள் பிரத்யேக வடிவமைப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.



    ஜிக்சர் 250 மாடலில் 250சிசி இன்ஜின் மற்றும் ஆயில் கூலிங் சிஸ்டம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 22 முதல் 25 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஜிக்சர் 250 என்ட்ரி-லெவல் டூரிங் மோட்டார்சைக்கிளாக பிரான்டிங் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    சுசுகி ஜிக்சர் 250 மாடலின் ஃபிரேம் தற்போதைய ஜிக்சர் 150 மாடலை போன்ற ஃபிரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிளில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கம், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது. இதில் டிஸ்க் பிரேக் மற்றும் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    ×