search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிக்சல் 3XL"

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன் மாடல்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இதன் லைவ் படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #smartphone

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3XL ஸ்மார்ட்போன் மாடல்கள் அக்டோபர் 9-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகமாக இருக்கிறது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட்போன் மாடல்களின் லைவ் படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. முன்னதாக பலமுறை பிக்சல் 3 சீரிஸ் படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.

    அந்த வகையில், பிரபல டிப்ஸ்டரான எவான் பிளாஸ் பதிவிட்டு இருக்கும் ரென்டர்களில் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3XL ஸ்மார்ட்போன் மாடல்களின் முன்புறம் காட்சியளிக்கிறது. இறுதியில் புதிய பிக்சல் மாடல்களுக்கென வயர்லெஸ் சார்ஜிங் டாக் ஒன்றை வழங்கவும் கூகுள் திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது. 

    இம்முறறை வெளியாகி இருக்கும் விவரங்கள் ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும் 15 வருடங்களாக டிப்ஸ்டராக இருக்கும் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூகுள் பிக்சல் 3XL மாடலின் லைவ் படங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

    அதன்படி புதிய பிக்சல் 3XL ஸ்மார்ட்போனில் சிறிய கைரேகை சென்சார், டிஸ்ப்ளே நாட்ச், பெரிய சின் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மாடலில் ஃபிராஸ்ட் செய்யப்பட்ட கிளாஸ் பேக் மற்றும் பக்கவாட்டுகளில் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்படலாம் என தெரிவித்திருக்கிறார்.

    புகைப்படம் நன்றி: 9to5Google

    இத்துடன் பிக்சல் 3 மாடல்களுக்கு என வயர்லெஸ் சார்ஜிங் டாக் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆன்ட்ராய்டு தளத்திற்கான கூகுள் செயலியில் இடம்பெற்று இருந்த குறியீடு மூலம் இந்த தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் போன் போர்டிரெயிட் வடிவில் டாக் செய்யப்படும் புகைப்படங்களும் லீக் ஆகியுள்ளது.

    கூகுள் போன்களில் வழக்கமாக டூயல்-டோன் கருப்பு வெள்ளை நிறங்களுக்கு மாற்றாக இம்முறை புதிதாக மின்ட் நிறம் இடம்பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பிக்சல் 2 XL மாடலில் இருந்த ஆரஞ்சு நிற பவர் பட்டன் இம்முறை மின்ட் நிறம் கொண்டிருக்கிறது. இத்துடன் பக்கவாட்டுகளிலும் மின்ட் நிறம் கொண்ட பிக்சல் 3 புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகியிருந்தன.

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி பிக்சல் 3 மாடலில் நாட்ச் இல்லாமல் 5.5 இன்ச் 2160x1080 பிக்சல் 18:9 டிஸ்ப்ளே, டூயல் முன்பக்க ஸ்பீக்கர், கிளாஸ் + மெட்டல் பேக், பின்புறம் கைரகை சென்சார், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் 8.1 எம்.பி. செல்ஃபி கேமரா, F/1.8 மற்றும் F/2.2 மற்றும் 2915 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது.

    பிக்சல் 3XL மாடலில் 6.2 இன்ச் 1440x2960 பிக்சல் 19:9 ரக டிஸ்ப்ளே, நாட்ச், டூயல் முன்பக்க ஸ்பீக்கர், கிளாஸ் + மெட்டல் பேக், பின்புறம் கைரகை சென்சார், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் 8.1 எம்.பி. செல்ஃபி கேமரா, F/1.8 மற்றும் F/2.2 மற்றும் 3430 எம்.ஏ.ஹெச். பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் யு.எஸ்.பி. டைப்-சி ஹெட்போன்களுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன் மாடல்களின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. #Pixel3XL

    கூகுள் நிறுவன 2018 பிக்சல் ஸ்மார்ட்போன்களின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி கூகுள் ஹார்டுவேர் நிகழ்வு அக்டோபர் 9-ம் தேதி அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கிறது. அழைப்பிதழில் எண் 3 அச்சிடப்பட்டு இருப்பது கூகுள் பிக்சல் 3 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட இருப்பதை உணர்த்துகிறது.

    புதிய ஸ்மார்ட்போன்களுடன் கூகுள் நிறுவனத்தின் புதிய ஹார்டுவேர் சாதனங்களும் இதே விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பிக்சல் வாட்ச் அறிமுகம் செய்யாது என்றும், மற்ற ஹார்டுவேர் உற்பத்தியாளர்களுடன் இணைந்து வியர் ஓ.எஸ்.-ஐ மேம்படுத்துவதில் கூகுள் அதிக கவனம் செலுத்தலாம் என கூறப்படுகிறது.

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி பிக்சல் 3 மாடலில் நாட்ச் இல்லாமல் 5.5 இன்ச் 2160x1080 பிக்சல் 18:9 டிஸ்ப்ளே, டூயல் முன்பக்க ஸ்பீக்கர், கிளாஸ் + மெட்டல் பேக், பின்புறம் கைரகை சென்சார், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் 8.1 எம்.பி. செல்ஃபி கேமரா, F/1.8 மற்றும் F/2.2 மற்றும் 2915 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது.

    பிக்சல் 3XL மாடலில் 6.2 இன்ச் 1440x2960 பிக்சல் 19:9 ரக டிஸ்ப்ளே, நாட்ச், டூயல் முன்பக்க ஸ்பீக்கர், கிளாஸ் + மெட்டல் பேக், பின்புறம் கைரகை சென்சார், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் 8.1 எம்.பி. செல்ஃபி கேமரா, F/1.8 மற்றும் F/2.2 மற்றும் 3430 எம்.ஏ.ஹெச். பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் யு.எஸ்.பி. டைப்-சி ஹெட்போன்களுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் இதர விவரங்கள் அடுத்த மாதம் தெரியவரும். வழக்கம்போல் இந்த ஆண்டும் கூகுள் தனது ஹார்டுவேர் நிகழ்வினை யூடியூப் சேனலில் நேரலை செய்யும்.
    ×