search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹூன்டாய் எலைட் i20 CVT"

    ஹூன்டாய் நிறுவனத்தின் எலைட் i20 CVT மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஹூன்டாய் நிறுவனத்தின் எலைட் i20 CVT இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய ஆட்டோமேடிக் வேரியன்ட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே கொண்டுள்ளது.

    ஹூன்டாய் எலைட் i20 CVT ஆட்டோமேடிக் மாடல் மேக்னா மற்றும் ஆஸ்டா என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. புதிய i20 எலைட் கார் முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    புதிய ஹூன்டாய் எலைட் i20 மாருதி பலேனோ மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய எலைட் i20 மாடலில் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் வழக்கமான பாதுகாப்பு அம்சங்கள் (டூயல் ஏர்-பேக்) மற்றும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

    ஹூன்டாய் எலைட் i20 CVT ஆட்டோமேடிக் மாடலில் 1.2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 83 பி.ஹெச்.பி. பவர் @6000 ஆர்.பி.எம். 114 என்.எம். டார்கியூ @4000 ஆர்.பி.எம். பவர் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 



    புதிய ஹூன்டாய் எலைட் i20 டீசல் மாடலில் 1.4 லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர் @4000 ஆர்.பி.எம்., 220 என்.எம். டார்கியூ @1500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. 

    மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு, கூர்மையான ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டி.ஆர்.எல். வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்த வரை புதிய 2018 எலைட் i20 மாடலில் இரண்டு டெயில் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 இன்ச் அலாய் வீல், ஆறு வித நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் மூன்று நிறங்கள் டூயல் டோன் செய்யப்பட்டிருக்கிறது. 

    உள்புற அம்சங்களை பொருத்த வரை புதிய i20 மாடலில் டூயல் டோன் பிளாக் மற்றும் பெய்க் தீம் செய்யப்பட்டுள்ளது. இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் 7-இன்ச் தொடுதிரை வசதி கொண்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதியும், 8 ஸ்பீக்கர் ஆடியோ செட்டப் வழங்கப்பட்டுள்ளது. 

    பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை புதிய எலைட் i20 மாடலில் 2 ஏர்பேக், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) உள்ளிட்டவையும், டாப் எண்ட் மாடலில் 6 ஏர்பேக் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3 ஆண்டுகள் / ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரண்டி வழங்கப்படுகிறது. 

    எலைட் i20 CVT மேக்னா விலை ரூ.7.04 லட்சமும், டாப் என்ட் ஆஸ்டா வேரியன்ட் விலை ரூ.8.16 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    ×