என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது ": Ramraj Cotton"
- முதலீட்டாளர்கள் மாநாட்டில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பாக ரூ.1000 கோடிக்கான தொழில் முதலீட்டில், நூற்பு நெசவு மற்றும் பதப்படுத்தும் ஆலையை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- முதல்-அமைச்சரிடம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் வழங்கினார்.
திருப்பூர் :
சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பாக ரூ.1000 கோடிக்கான தொழில் முதலீட்டில் 4 ஆயிரம் ேபருக்கு வேலைவாய்ப்பு, நூற்பு நெசவு மற்றும் பதப்படுத்தும் ஆலையை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் தொழில் முதலீட்டு வழிகாட்டு குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி பூஜா குல்கர்னி செய்திருந்தார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து கே.ஆர்.நாகராஜன் கூறும்போது , தமிழக அரசுடன் இணைந்து செயல்படுத்தவிருக்கும் தொழில் முதலீடுகள் மூலமாக இ்ன்னும் பல்லாயிரக்கணக்கான நெசவாளர்களுக்கு முழுமையான வேலைவாய்ப்பு அமைவதுடன், தொழில் முன்னேற்றத்தில் தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்ல பேருதவியாக இருக்கும் என்றார்.