search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "12 Militants entry"

    ஜம்மு-காஷ்மீரில் 12 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து ஜம்மு நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பு திட்டமிட்டு இருப்பது தெரிய வந்தது.

    இதற்காக அந்த அமைப்பின் 12 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி இருப்பதை உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த 12 பயங்கரவாதிகளும் தற்கொலை படையைச் சேர்ந்தவர்கள்.

    காஷ்மீரில் நாளை (சனிக்கிழமை) 2 இடங்களில் மிகப்பெரிய தாக்குதலுக்கு அந்த 12 பயங்கரவாதிகளும் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு பிராந்தியத்தில் அவர்கள் கைவரிசை காட்ட திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    ஒருவேளை நாளை தாக்குதல் நடத்த முடியாவிட்டால் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்குள் தங்களது திட்டத்தை நிறைவேற்ற
    பயங்கரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி உளவுத் துறை அமைப்பினர் மத்திய அரசுக்கும், காஷ்மீர் மாநில அரசுக்கும் தகவல் தெரிவித்து எச்சரித்துள்ளனர்.

    நாளை ரம்ஜான் நோன் பின் 17-வது நாளாகும். கடந்த ஆண்டு இதே தினத்தன்று காஷ்மீரில் பயங்கரவாதிகள் மிகப் பெரிய தாக்குதலை நடத்தினார்கள். அதே போன்றும் இந்த ஆண்டும் தாக்குதலுக்கு அவர்கள் குறி வைத்துள்ளனர்.

    இந்த திட்டத்திற்காக கடந்த புதன்கிழமை 12 பயங்கரவாதிகளும் ஊடுருவியதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அந்த அமைப்பின் 8 பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் காஷ்மீரில் பதுங்கி இருக்கிறார்கள் என்று ஏற்கனவே உளவுத்துறை கூறி உள்ளது. இந்த 20 பயங்கரவாதிகளும் சேர்ந்து தாக்குதலுக்கு தயாராகி வருவதாக உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

    உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. முக்கிய அரசு அலுவலகங்களில் துப்பாக்கியுடன் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இதுதவிர துணைநிலை ராணுவத்தினர் கண்காணிப்பு பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ×