search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "12 people killed"

    • இவர் தனியார் வங்கிக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் முருகன் மகள் கமலீஸ்வரி (வயது22). இவர் தனியார் வங்கிக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியை சேர்ந்தவர் ரங்கநாதன் மகள் தரணிஸ்ரீ (15). இவர் தேனியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    ஜிம்பாப்வே நாட்டில் கரும்பு லோடு ஏற்றிச்சென்ற லாரியும், தனியார் பேருந்தும் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Zimbabwe #BusAccident
    ஹராரே:

    ஜிம்பாப்வே நாட்டின் தென் கிழக்கில் அமைந்துள்ள சிபிங்கே என்ற பகுதியில் கரும்பு லோடு ஏற்றி வந்த லாரியும், தனியார் பேருந்தும் மோதிக் கொண்டன.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.  போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் உடனடியாக அங்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்ற மூன்றாவது பேருந்து விபத்து இதுவாகும். ஏற்கனவே, நவம்பர் 6ம் தேதி ருசாபே பகுதியில் நடைபெற்ற விபத்தில் 50 பேரும், நவம்பர் 15ம் தேதி மேற்கு நிக்கல்சன் பகுதியில் நடைபெற்ற பேருந்து விபத்தில் 42 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. #Zimbabwe #BusAccident
    ×