search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "1343th Mutharaiyar"

    மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி ஒத்தக்கடை பகுதியில் மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை உள்ளது. பெரும்பிடுகு மன்னரின் 1343-வது பிறந்த நாள் விழா நேற்று தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நேற்று காலை அரசு சார்பில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் மன்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் கே.ராஜாமணி, எம்.பி.க்கள் ப.குமார், மருதைராஜா, செல்வராஜ் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, கே.கே.பாலசுப்பிரமணியன், பரஞ்சோதி, அண்ணாவி, பூனாட்சி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    தி.மு.க. சார்பில் மாநகர செயலாளர் அன்பழகன் தலைமையில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ. உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காங்கிரசார், மாவட்ட தலைவர்கள் ஜவகர், கலை தலைமையிலும், பாரதீய ஜனதா கட்சியினர் இளைஞர் அணி மாவட்ட தலைவர் கவுதம் நாகராஜன் தலைமையிலும், தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் டி.வி.கணேஷ், கிருஷ்ணகோபால், குமார் ஆகியோரும், த.மா.கா.வினர் மாவட்ட தலைவர்கள் குணா, ரவீந்திரன் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தனியாக வந்து மாலை அணிவித்தார். மேலும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் முத்தரையர் சங்கங்கள் சார்பிலும் ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர். இதனை தொடர்ந்து சிலை அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    ×