search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "17 person arrest"

    அயனாவரம் சிறுமியை கற்பழித்த வழக்கில் 17 பேருக்கும் மத்திய அரசின் புதிய அவசர சட்டத்தின்படி தூக்கு தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. #ChennaiGirlHarassment #POCSOAct
    சென்னை:

    சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-ம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சிறுமி கற்பழிப்பு தொடர்பாக அந்த குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாரன் மற்றும் ஏரோல் பிராஸ், முருகேசன், பரமசிவம், சுரேஷ், ராஜசேகர், தீன தயாளன், குணசேகரன், பாபு, பழனி, ராஜா, சூர்யா, ஜெயகணேஷ், ஜெயராமன், உமாபதி ஆகிய 17 பேர் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதானார்கள்.

    இந்த வழக்கில் கைதான 17 பேரும் ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    17 பேரும் ஜாமீன் கோரி இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் மனு தாக்கல் செய்தனர். மகளிர் கோர்ட்டு அவர்களது மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

    17 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையின் அடிப்படையில் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் குண்டர் சட்டத்தின் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதன்படி கடந்த 5-ந்தேதி 17 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனது விசாரணையை முடித்துள்ளார்.

    இதையடுத்து மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்பு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 300 பக்கங்களை கொண்டதாக இருந்தது.

    அந்த சிறுமியை 17 பேரும் 7 மாதங்களாக மாறிமாறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

    சிறுமியை கற்பழித்த வழக்கில் 17 பேருக்கும் மத்திய அரசின் புதிய அவசர சட்டத்தின்படி தூக்கு தண்டனை கிடைக்கலாம்.

    12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யபட்டால் ஆயுள் முழுவதும் சிறைத்தண்டனை அல்லது தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் புதிய கிரிமினல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. போக்சோ சட்டம் ஏற்கனவே இருக்கிறது. இதில் 376 ஏ.பி. மற்றும் 376 டி.பி. ஆகிய 2 சட்ட பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி 17 பேருக்கும் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை கிடைக்கலாம்.  #ChennaiGirlHarassment #POCSOAct
    அயனாவரத்தில் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கை 3 மாதத்தில் நடத்தி முடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஒரு மாதத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது சிறுமி 17 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக வேப்பேரி மகளிர் போலீசார் விசாரணை நடத்தி கைதான 17 பேரிடமும் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

    இந்த கொடூர சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட உடனேயே தாமதமின்றி உரிய நடவடிக்கைக்கு கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன் மேற்பார்வையில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 50 போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதன் காரணமாகவே சிறுமியை சீரழித்த 17 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சிறுமி கற்பழிப்பு வழக்கை 3 மாதத்தில் நடத்தி முடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    ஒரு மாதத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி ஹாசினி கற்பழிப்பு வழக்கில் குற்றவாளியான வாலிபர் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுத்தது போல 17 பேருக்கும் தூக்கு தண்டனை வாங்கி கொடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். #ChennaiGirlHarassment #POCSOAct
    ×