என் மலர்
நீங்கள் தேடியது "slug 121377"
- குழந்தைகளுடன் 2 பெண்கள் மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
ராஜபாளையம் அருகே தென்கரையை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் கற்பகம்(22). இவரும் தென்கரை நடுத்தெருவை சேர்ந்த சங்கிலிபாண்டி என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கற்பகம் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். நேற்று ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக தனது 2 குழந்தைகளுடன் வெளியில் சென்ற கற்பகம் மாயமாகிவிட்டார்.
பெண் மாயம்
இதுபற்றி கீழராஜகுலராமன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கற்பகம் மற்றும் அவரது குழந்தைகளை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த ராஜாமணி என்பவரது மனைவி அனுசியாதேவி(24). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் காரியாபட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு தனது ஒரு குழந்தையுடன் சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது தாய் சாந்தி காரியாப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அனுசியாதேவி மற்றும் அவரது குழந்தையை தேடி வருகின்றனர்.
வாலிபர் மாயம்
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் தீர்த்தங்கன்(24). கட்டிடத் தொழிலாளி. இவர் சென்னையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதுபற்றி அவரது தந்தை சிவபிரகாஷ் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.
- நெல்களில் எழுத வைத்தும், நோட்டு பேனா பொருட்களை சிவனிடம் வைத்தும் வழிபட்டனர்.
- குழந்தைகளுக்கு நாவில் தேனால் எழுதப்பட்டது.
சுவாமிமலை:
கும்பகோணம் அருகே இன்னம்பூரில் பிரசித்தி பெற்ற கல்விக்குரிய சிறப்பு ஸ்தலமான எழுத்தறிநாதர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
பொதுமக்கள் காலை முதல் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
மேலும், நெல்மணிகளில் குழந்தைகளை எழுத வைத்தும், நோட்டு பேனா உள்ளிட்ட பொருட்களை சிவனிடம் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
மேலும் குழந்தைகளுக்கு நாவில் தேனால் எழுதப்பட்டும் வருகிறது.
- நவராத்திரி விழாவை யொட்டி குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவிலில் அம்மனுக்கு தினமும் ஒவ்வொரு அலங்கார வழிபாடு நடைபெற்றது.
- விஜயதசமி நாளையொட்டி அம்மன் சிம்ம வாகனத்தில் அருள்பாலித்தார்.
குமாரபாளையம்:
நவராத்திரி விழாவை யொட்டி குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவிலில் அம்மனுக்கு தினமும் ஒவ்வொரு அலங்கார வழிபாடு நடைபெற்றது. விஜயதசமி நாளையொட்டி அம்மன் சிம்ம வாகனத்தில் அருள்பாலித்தார்.
மேலும் குழந்தைகளுக்கு அம்மன் வேடமிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, குழந்தைகளுடன் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. முக்கிய வீதிகளின் வழியாக வந்த திருவீதி உலா கோவிலில் நிறைவு பெற்றது.
கோவிலில் பக்தர்கள் பக்தி பாடல்கள் பாட குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- சரஸ்வதி வெண்ணிற ஆடை தரித்து வெண் தாமரையில் பேரெழிலோடு வீற்றிருக்கிறாள்.
- விஜயதசமியன்று இக்கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும்.
தஞ்சாவூர்:
திருவாரூர்மாவட்டம் நன்னிலம் அருகே கூத்தனூ ரில் கல்விக்கடவுளான சரஸ்வதி கோவில் உள்ளது.
இந்தியாவிலேயே சரஸ்வதிக்கு என்று தனிக்கோ வில் அமைந்துள்ளது கூத்தனூரில் தான்.
இக்கோவிலில் சரஸ்வதி வெண்ணிற ஆடை தரித்து வெண் தாமரையில் பேரெழிலோடு வீற்றிருக்கிறாள்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டிற்கான நவராத்திரி விழா கடந்த 26-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. விழாவில் அம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்வான 9-வது நாளில் சரஸ்வதி பூஜையன்று அம்மனுக்கு பாத தரிசனம் நடைபெறும்.
அன்று அம்பிகையின் பாதங்களில் பக்தர்கள் மலரிட்டு அர்ச்சனை செய்யலாம்.
மேலும், 5-ம் தேதி விஜயதசமியன்று இக்கோவி லில் வித்யாரம்பம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும்.
பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் கல்வியில் சிறக்க குழந்தையின் விரல் பிடித்து தானியத்தில் 'அ' எனும் எழுத்தை எழுதி கல்வியை தொடங்குவர்.
குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி பயணத்தை இங்கிருந்து தொடங்குகின்றனர்.
விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்று அம்மனை மனமுருகி வழிபடுவர்.
- ஆதரவற்ற மற்றும் தொற்றினாள் பாதிக்கபட்ட குழந்தைகளுக்கு உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கலாம்.
- நகரப்பகுதிக்கு ரூ.30,000-லிருந்து ரூ.96,000 மாகவும் உயர்த்தி திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;-
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலமாக தாய், தந்தை அல்லது தந்தையை இழந்த குழந்தைகள், எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் மற்றும் சிறைவாசிகளின் குழந்தைகள் ஆகியோருக்கு மிஷன் வாட்சாலயா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாதந்தோறும் ரூ.4000 வீதம் 3 ஆண்டுகளுக்கு நிதி ஆதரவு உதவித்தொகை பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானச்சான்று உச்ச வரம்பு கிராம பகுதிக்கு ரூ.24000-த்தில் இருந்து ரூ.72000-மாகவும், நகரப்பகுதிக்கு ரூ.30000-லிருந்து ரூ.96000-மாகவும் உயர்த்தி திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
எனவே நிதி ஆதரவு திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வருமானச்சான்று ரூ.72000-(கிராமப்பகுதி), ரூ.96000-(நகரப்பகுதி)-க்குள் பெறப்பட்டு, அதனுடன் குழந்தையின் கல்விச்சான்று, வங்கி கணக்கு எண், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், பெற்றோரின் இறப்பு சான்று மற்றும் குழந்தையின் புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 36/2 திருமஞ்சன வீதி, திருஇந்தலூர், மயிலாடுதுறை என்ற முகவரிக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 100-க்கும் மேற்பட்டோர் கால்களில் சலங்கை அணிந்தபடி கும்மி ஆட்டம் ஆடியது அனைவரையும் கவர்வதாக அமைந்திருந்தது.
- ஆசிரியர்களை பாராட்டி நினைவு பரிசுகளும், பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.
அனுப்பர்பாளையம் :
கொங்கு மண்ணின் பாரம்பரிய கலையான கும்மி ஆட்ட அரங்கேற்ற விழா ஆண்டுதோறும் திருப்பூர் பாளையக்காடு பவளக்கொடி கும்மி ஆட்டக்குழு சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 35-வது கும்மி ஆட்டம் அரங்கேற்ற விழா அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இறைவணக்கத்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கால்களில் சலங்கை அணிந்தபடி கும்மி ஆட்டம் ஆடியது அனைவரையும் கவர்வதாக அமைந்திருந்தது. வாழ்த்து பாடல் மற்றும் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
நிகழ்ச்சியையொட்டி ஆசிரியர்களை பாராட்டி நினைவு பரிசுகளும், பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது. முன்னதாக பாளையக்காடு சக்தி மாரியம்மன், விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பெண்கள் ஊர்வலமாக வந்து கும்மியாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பவளக்கொடி கும்மி ஆட்டக்குழு மற்றும் பாளையக்காடு ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- பெற்றோரை இழந்த குழந்தைகள்-தந்தையை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கப்படும்.
- இந்த தகவலை மதுரை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் கலெக்டரை தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலமாக ''மிசன் வத்சல்யா'' திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த குழந்தைகள், தந்தையை இழந்த குழந்தைள், எச்.ஐ.வி.நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள் மற்றும் மிகவும் பின்தங்கிய குடும்ப பொருளாதார சூழ்நிலையில் உள்ள குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
கல்வி, மருத்துவம், ஊட்டச்சத்து, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு நிதிஆதரவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை தற்போது மாதம் ரூ.4 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த குழந்தைகளின் பெற்றோர்களது வருமானச்சான்று நகர்புறத்தில் ரூ.96ஆயிரமும் கிராமபுறத்தில், ரூ.72 ஆயிரமும் இருக்க வேண்டும்.
குழந்தைகள் பள்ளி செல்லும் குழந்தைகளாகவும், குழந்தைகள் இல்லம், விடுதிகளில் தங்காமல் பெற்றோர் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளாகவும், மதுரை மாவட்டத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். உதவித்தொகை அதிகபட்சமாக 3 ஆண்டுகள் அல்லது 18 வயது முடியும் வரை வழங்கப்படும்.
உதவித்தொகையினை பெற உரிய ஆவணங்களை மாவட்ட ஆட்சியரக கூடுதல் கட்டிடம், 3-வது தளம், மதுரை-625 020 என்ற முகவரியில் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவகங்கை செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் குழந்தைகளுக்கான கலை போட்டிகள் நடந்தது.
- பாட்டு, மாறுவேடம், நடனம் மற்றும் பேச்சுப்போட்டி என 4 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
காரைக்குடி
காரைக்குடி செல்ல ப்பன் வித்யா மந்திர் சர்வதேசப்பள்ளி மற்றும் காரைக்குடி சிட்டி லயன்ஸ் சங்கம் இணைந்து, 2 முதல் 6 வயது வரையிலுள்ள குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகளை நடத்தியது.
பாட்டு, மாறுவேடம், நடனம் மற்றும் பேச்சுப்போட்டி என 4 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலுள்ள பள்ளிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசு, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.மொத்தம் 72 வகையான பரிசுகள் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவுக்கு பள்ளியின் தாளாளர் சத்தியன் தலைமை தாங்கினார். காரைக்குடி லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் மாவட்ட கவர்னர் ஜானகிராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல்வர் ராணி போஜன் வரவேற்றார். பள்ளியின் கல்வி அதிகாரி டாக்டர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். காரைக்குடி லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் கேபினட் செயலாளர் பாதம் பிரியன், மாவட்ட லியோ தலைவர் மதிவாணன், மண்டலத்தலைவர் முத்துகுமார், ஜோன் தலைவர் முத்துகண்ணன், பொருளாளர் லட்சுமணன், செயலா ளர் பழனிவேல், பிரெ சிடெண்ட் சண்முகசு ந்தரம், லியோ செயலாளர் தீப்ஷா, ஒருங்கிணைப்பாளர் ஆஷிஷ் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியம்பட்டி ஊராட்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடங்கள் பழுதடைந்து காணப்பட்டது.
- இதை தொடர்ந்து சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியம்பட்டி ஊராட்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடங்கள் பழுதடைந்து காணப்பட்டது. இடிந்து விழும் நிலையில் இருந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டிகொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இதை தொடர்ந்து சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அதேபோல புளியம்பட்டி காலனி பகுதியில், பழுதடைந்த மற்றொரு தார்சு கட்டிடமும் 2 லட்ச ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த கட்டிடங்களின் திறப்பு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி தலைமையில், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் அழகிரி, அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் சரவணன், முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணன், அய்யனார் ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தையும், புதுபிக்கப்பட்ட கட்டிடத்தையும் திறந்து வைத்தனர்.
தொடர்ந்து குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். முடிவில் ஊராட்சி மன்ற செயலர் லட்சுமணன் நன்றி கூறினார்.
- கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷ் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
- நானும் எனது குழந்தைகளும் பாதுகாப்பின்றி உள்ளோம்.
நாகப்பட்டினம்:
நாகை திருக்கண்ணப்புரம் அருகே விசலுார் ராராத்திமங்கலம் புதுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ்.
இவரது மனைவி உமா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷ் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் உமா மற்றும் அவரின் குழந்தைகளுக்கு எந்தவித பொருளாதார உதவியும் செய்யாமல், அந்த பெண் வீட்டிலேயே ரமேஷ் வசித்து வந்துள்ளார்.
மேலும் அடித்து துன்புறுத்துகிறார். இது குறித்து அவரிடம் கேட்டபோது உமாவை தாக்கி உள்ளார்.
இதுகுறித்து நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உமா புகார் அளித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக உமா தனது பிள்ளைகளுடன் வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
நானும் எனது குழந்தைகளும் பாதுகாப்பு இன்றி உள்ளோம்.
எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராஜபாளையத்தில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமாதாக கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
- இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண் மற்றும் குழந்தைகளை தேடி வருகிறார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முகில்வண்ணன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 28), கொத்தனார். இவரது மனைவி அழகேஸ்வரி (27). இவர்களுக்கு சக்திகுமார் (5), சசிகுமார் (3) என்ற மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் மாணிக்கம் கடந்த 4 நாட்களாக வெம்ப க்கோட்டை பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அவர் வீடு திரும்பினார். அப்போதுஅவரது மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை. அவர்களை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை.
இதுபற்றி ராஜபாளையம் தெற்கு போலீசில் மாணிக்கம் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண் மற்றும் குழந்தைகளை தேடி வருகிறார்.
- சொக்கன்குளம் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளை கலெக்டர் லலிதா பார்வையிட்டார்.
- குழந்தைகளுக்கு வழங்குவதற்காக சமைத்து வைக்கப்பட்டுள்ள உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
சீர்காழி:
சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகணி ஊராட்சியில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார் ஊராட்சியில் நடைபெற்று வரும் பாரதப்பிரதமர் வீடு கட்டத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பயனாளிகளின் விவரங்களை சரிபார்த்தார்.
தொடர்ந்து தென்னங்குடி குளம் சீரமைக்கும் பணி சொக்கன்குளம் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளையும் கலெக்டர் லலிதா பார்வையிட்டார்.
தொடர்ந்து நிம்மேலி ஊராட்சியில் அரசு கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டார்.
பின்னர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக சமைத்து வைக்கப்பட்டுள்ள உணவின் தரம் மற்றும் சுவை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலு வலர் இளங்கோ வன், ஒன்றிய பொறியா ளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, அகணிஊராட்சி மன்ற தலைவர் மதியழகன், நிம்மேலி ஊராட்சி மன்ற தலைவர் வசந்திகிருபாநிதி, ஒப்பந்தக்காரர் ராஜதுரை, மற்றும் ஊராட்சி செயலர்கள், உறுப்பினர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.