search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 Point 0"

    விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ஆஸ்திரேலிய போலீஸ், ரஜினி படத்தை பயன்படுத்தி அவர்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். #Rajini #Rajinikanth
    மேற்கு ஆஸ்திரேலியாவின் டெர்பி நகரின் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ரஜினியின் படத்தை பயன்படுத்தி ஒரு வினோத வழக்கை பதிவு செய்துள்ளது.

    டெர்பி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்த ஒருவரை சோதனை செய்துள்ளனர். அவரது மூச்சுக்காற்றில் 0.341 அளவிற்கு ஆல்கஹால் இருப்பது கண்டறியப்பட்டது.



    இந்த அளவு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சையில் இருக்கும் நபர் அல்லது கோமா நிலையில் இருக்கும் நபர் வாகனத்தை ஓட்டி வருவதற்கு சமம் என்று போலீசார் கூறியுள்ளனர். அதனை ஆச்சரியமாக குறிப்பிடும் வகையில் ரஜினியின் 2.0 படத்தில் வரும் வசனம் உள்ள காட்சியை இதற்கு படமாக பதிவிட்டுள்ளனர். இதனை கண்ட ரஜினி ரசிகர்கள் தற்போது அந்த பதிவை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.



    விழிப்புணர்வு தொடர்பான தகவல்களை மக்களுக்கிடையே ஏற்படுத்துவதற்கு சமூக வலைதளங்களின் மீம்ஸ்தான் இன்றைய முக்கிய பிரசாரமாக விளங்குகிறது. அந்த வகையில் போலீசார் தொடங்கி பலரும் மக்களுக்கு நல்ல கருத்துகளை கொண்டு செல்லவும், விதி முறை மீறல்களால் ஏற்படும் பாதிப்புகளை தெரியப்படுத்தவும் திரைப்பட மீம்ஸை பயன்படுத்தி வருகின்றனர்.
    ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ள நடிகர் ரஜினி விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். #2Point0 #Rajini
    ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌‌ஷய் குமார், எமி நடிப்பில் கடந்த நவம்பர் 29-ம் தேதி வெளியான படம் 2.0. 3டி தொழில்நுட்பத்தில் வெளியான இந்த படத்துக்கு உலகம் முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்தது. வெளியான ஒரு வாரத்தில் உலகம் முழுக்க ரூ. 500 கோடி வசூலைத் தாண்டியது.

    தமிழ் படங்களை பொறுத்தவரை இது மிகப்பெரிய சாதனை. அடுத்த 10 நாட்களில் படத்தின் மொத்த வசூல் ரூ.1000 கோடியை தொட்டது. அதன் பிறகும் கூட 3டி தொழில்நுட்ப தியேட்டர்களில் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் மாபெரும் வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் படங்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளதை பெரிய அளவில் கொண்டாட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டது.



    ஆனால் ரஜினிகாந்த் இதில் ஆர்வம் காட்டவில்லை. வெற்றிக் கொண்டாட்டத்தில் மீட்டிலோ கலந்துகொள்ள விரும்பவில்லை என்று கூறிவிட்டாராம். ரஜினி இல்லாமல் வெற்றியை எப்படி கொண்டாடுவது என்று முடிவெடுத்து அனைத்து கொண்டாட்டத்தையும் தவிர்த்து விட்டார்கள். #2Point0 #Rajini
    ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் செல்போன் டவர்கள் பறவை இனங்களுக்கு எமனாக இருப்பதாக காட்டப்பட்டிருக்கும் நிலையில், செல்போனால் பறவைகள் அழிவது உண்மையா என்பது பற்றி ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #2Point0 #Radiation
    ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான படம் 2.0. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    ரஜினி மீண்டும் ‘சிட்டி’ ரோபோ அரிதாரம் ஏற்றிருக்கிறார். பிரபல இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமார் ‘பட்சி ராஜனாக’ பறவை ஆர்வலராக, பறவை உருவத்தில் சூப்பர் வில்லனாக மிரட்டி இருக்கிறார். 2.0 படம் செல்போன்கள், செல்போன் டவர்கள் சுற்றுச்சூழலுக்கு விளைவித்திருக்கும் மாற்றத்தைப் பேசியுள்ளது.

    இந்தியாவில் பெரும்பாலும் ஒவ்வொருவரின் கையிலும் செல்போன்கள் புழக்கத்தில் இருக்கின்றன. 2ஜியில் தொடங்கி 5ஜி தொழில்நுட்பம் வரை நவீன இணைய வசதிகள் அனைத்தும் இந்திய மக்களைச் சென்றடைந்துள்ளன. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு, மக்களுக்கு சேவைகளைக் குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகின்றன.



    செல்போன்கள் பயன்பாட்டுக்கு வந்தபோது, அதில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு புற்றுநோயை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தனர். அதுபோல செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மனித உடலிலும், பிற உயிர்களையும் தாக்குகிறது என உலகம் முழுவதும் புகார்கள் எழுந்தன. முதலில் சிட்டுக்குருவிகள் முதலிய பறவைகளின் அழிவுக்கும், செல்போன் டவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் நடந்த ஆராய்ச்சிகளில் செல்போன் டவர்களால் பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படுவது உறுதிபடுத்தப்பட்டது.

    இந்தியாவில் மத்திய சுற்றுச்சூழல் துறை 2011-ம் ஆண்டு அறிவியலாளர்களை வைத்து ஓர் ஆய்வை மேற்கொண்டது. இரண்டு ஆண்டுகள் நடந்த அந்த ஆய்வுகளின் முடிவுகள், செல்போன் டவர்கள் இருக்கும் இடங்களில் பறவைகளின் எண்ணிக்கை குறைவடைவது உண்மை தான் எனக் கூறின.



    ஆனால் பறவைகளின் எண்ணிக்கை குறைவதற்கு, செல்போன் டவர்கள் மட்டுமே காரணம் என்று எந்த ஆய்வும் இதுவரை உறுதிசெய்யவில்லை. மக்களிடையே பரவலாகப் பயன்பாட்டில் இருக்கும் பூச்சிக்கொல்லிகள், மரங்கள் வெட்டப்படுதல், மற்ற சுற்றுச்சூழல் மாசுப் பிரச்னைகள் முதலியனவும் பறவைகள் அழிவதற்குக் காரணங்களாக அமைவதால் ஆய்வுகளில் சரியான தீர்வை எட்ட முடியவில்லை.

    செல்போன் டவர்கள் வெளிப்படுத்தும் கதிர்வீச்சால், பெரிதும் பாதிக்கப்படுபவை சிட்டுக்குருவிகளும், தேனீக்களும் தான். நாடுகள் கடந்து பறக்கும் பறவைகள் செல்போன் டவர் கதிர்வீச்சால், திசை தெரியாமல் பயணித்து இறக்கின்றன என அமெரிக்காவில் ஆய்வு முடிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

    தேனீக்கள் கூட்டமாக வாழும் வழக்கமுடையவை. தேன் சேகரிக்கச் செல்லும் தேனீக்கள், கதிர்வீச்சு பாதிப்பிற்குள்ளாகி, மீண்டும் கூட்டுக்குத் திரும்ப முடியாத சூழல் உருவாகிறது. இது கூட்டமாக வாழும் தேனீக்களின் இயல்பைச் சிதைக்கிறது. பறவைகளின் முட்டைகள் கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்பட்டால், கருச் சிதைவுக்கு உள்ளாகின்றன என்பதையும் மத்திய சுற்றுச்சூழல் துறையின் ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தின. இந்த செய்திகளை பற்றித்தான் 2.0 படத்தில் பேசப்படுகிறது.



    2.0 திரைப்படம் வெளியாவதற்கு முன், செல்போன்களைத் தவறாகச் சித்திரிப்பதாக செல்போன் நிறுவனங்களின் இயக்குனர்கள் சங்கத்தினர் தணிக்கைத் துறையிடம் புகார் அளித்தனர். ஆனால் இந்த சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கும் முன்னணி நிறுவனங்கள் கடந்த 2015-ம் ஆண்டு மொத்தமாக ரூ.10.80 கோடி பணத்தை அனுமதிக்கப்பட்ட கதிர்வீச்சு அளவை விட அதிகமாக வைத்ததால் அபராதமாக அளித்துள்ளன.

    2.0 படத்தில் இந்த அதிக கதிர்வீச்சு அபாயம் பற்றியும் அலசப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 4.64 லட்சம் செல்போன் டவர்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 39 ஆயிரம் டவர்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையில் உத்தரபிரதேசத்துக்கு அடுத்து 2 ஆம் இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. செல்போன் டவர் கதிவீச்சால் பறவைகளால் அதிக தொலைவு பறக்க முடியாது.

    பறவைகளின் திசையறியும் திறன் குறைகிறது. கூடுகள் உருவாக்கும் திறன் அழிகிறது. செல்போன் டவர்கள் பறவை இனத்துக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் புற்றுநோய் முதலான நோய்களை உருவாக்க கூடியவை என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். செல்போன் பயன்பாட்டை குறைப்பதே இதற்கான தீர்வாக அமையும். #2Point0 #Shankar #CellphoneTowers #Radiation

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.0’ படத்தின் ரோபா ரஜினியின் உருவ பொம்மை ஒன்றை அனிருத் தனது ஸ்டூடியோவில் வைத்துள்ளார். #Rajini #Anirudh
    ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற 29-ம் தேதி வெளியாகும் திரைப்படம் ‘2.0’. எந்திரன் படத்தின் கதாபாத்திரங்களான டாக்டர் வசீகரன் மற்றும் சிட்டி ரோபோ என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ரஜினி.

    சில கதாபாத்திரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஹீரோயினாக எமி ஜாக்சனும், வில்லனாக அக்‌‌ஷய் குமாரும் நடித்துள்ளனர். ‌ஷங்கர் இயக்கி உள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 3டியில் வெளியாகும் இந்தப் படம், இந்திய அளவில் மட்டுமின்றி, உலக அளவிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிட்டி ரோபோ கதாபாத்திரத்துக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சிட்டியின் அசாத்தியத் திறமைகளால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கவரப்பட்டுள்ளனர்.



    எந்திரன் படம் வெளியானபோது, பெரும்பாலான தியேட்டர்களில் சிட்டியின் உருவ பொம்மைகளை வைத்து ரசிகர்களை கவர்ந்தனர். தற்போது 2.0 ரிலீசாக இருப்பதால், மறுபடியும் சிட்டி ரோபோ பிரபலமாக தொடங்கியுள்ளது. இசையமைப்பாளரான அனிருத், தன்னுடைய ஸ்டூடியோவில் சிட்டி ரோபோ ரஜினியின் உருவ பொம்மை ஒன்றை வைத்துள்ளார். அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அனிருத்.
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தின் நீக்கப்பட்ட வசனங்களின் விவரம் வெளியாகியுள்ளது. #2Point0 #Rajinikanth #AkshayKumar
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 மணிநேரம் 28 நிமிடங்கள் 52 நொடிகளுக்கு இப்படம் இறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    இதுவரை உருவான ‌ஷங்கர் படத்திலேயே இதுதான் மிகக்குறைந்த நேரம் ஓடும் திரைப்படமாக இருக்கும். தணிக்கைக் குழுவினர் காட்சிகளில் பெரிய அளவில் கத்திரி வைக்கவில்லை.

    ஆனால், வசனங்களில் தாராளமாகக் கைவைத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. ‘யுனிசெல்’ என்ற நிறுவனத்தின் பெயரைத் திரைப்படத்தில் எங்கெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்களோ, அங்கெல்லாம் மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். அதுபோலவே, ‘புற்று நோய்,’ ‘கருச்சிதைவு’, ‘ஆண்மைக் குறைவு’, ‘லஞ்சம்’, ‘45 வருடம்’ ஆகிய வசனங்களை நீக்கச் சொல்லி உத்தரவிடப்பட்டிருக்கிறது.



    அத்துடன் ‘9’ என்ற வார்த்தையை நீக்கச் சொல்லியும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். ‘9’ என்ற எண்ணை, ‘வார்த்தை’ என சென்சார் குழு குறிப்பிட்டிருப்பதன் காரணம் அது ஒரு தனி நபரைக் குறிப்பதாகவே இருக்க வேண்டும்.
    ஐதராபாத்தில் கட்டப்பட்டியிருக்கும் மகேஷ் பாபுவின் திரையரங்கை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைக்க இருப்பதாகவும், அந்த திரையரங்கில் முதல் படமாக 2.0 படத்தை திரையிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. #2Point0 #Rajinikanth #AMBCinemas
    தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனான மகேஷ்பாபு ஐதராபாத்தில் திரையரங்கு ஒன்றை தொடங்கி இருக்கிறார்.

    ஏசியன் சினிமாஸ் உடன் இணைந்து மிகப் பிரமாண்டமான திரையரங்க மால் ஒன்றை ஐதராபாத்தில் மகேஷ் பாபு நிறுவ உள்ளார். ஏஎம்பி சினிமாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரையரங்கில் முதல் படமாக அமீர்கான் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தானை வெளியிட்டு தொடக்க விழாவிற்கு அமீர் கானை வரவழைக்க ஏற்பாடு நடந்தது.



    ஆனால் அமீர் கான் பிசியாக இருக்கவே அந்த முயற்சி பின்னர் கைவிடப்பட்டது. அதன் பின்னர் பிரமாண்டமான ஒரு தொடக்கத்திற்காக சரியான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த அவர்களுக்கு ரஜினியின் 2.0 படம் தற்போது கையில் கிடைத்துள்ளது.



    அந்தவகையில் ரஜினியின் இந்தப் படமே அந்தத் திரையரங்கினில் முதல் படமாக வெளியிடப்படவுள்ளது. இந்த தொடக்க விழாவிற்கு ரஜினியை அழைத்திருக்கிறார்கள். 2.0 படத்திற்கான விளம்பரமாகவும் அமையும் என்பதால் ரஜினி இதில் கலந்துகொள்வார் என தெரிகிறது. #2Point0 #Rajinikanth #AMBCinemas #MaheshBabu

    இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் 2.0 படத்தின் பின்னணி இசை வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போது, அவரது எரிச்சலை பாடகர் அட்னன் சமியின் குழந்தை மாற்றியுள்ளது. #ARRahman #AtnanSami
    இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தற்போது லண்டனில் 2.0 படத்தின் பின்னணி இசை வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் இந்தி திரையுலகை சேர்ந்த பின்னணி பாடகர் அட்னன் சமியின் ஒரு வயது பெண் குழந்தை தன் தந்தை போனில் இருந்து தவறுதலாக ஏ.ஆர் ரகுமானுக்கு வீடியோ கால் செய்துள்ளார்.

    உடனே போனை எடுத்த ரகுமான் குழந்தையுடன் சிரித்துப் பேசி விளையாடியுள்ளார். இதுகுறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்த அட்னன் ’போனுக்கு பாஸ்வேர்டு போடும் நேரம் வந்துவிட்டது. என் குழந்தை மெடினா என் போனை எடுத்து ஏ.ஆர். ரகுமானுக்கு வீடியோ கால் செய்துவிட்டார்.
    பிறகு இருவரும் பேசினர். தொடர்ந்து லண்டனில் 2.0 படத்துக்கு இசையமைக்கும் ரெக்கார்டிங் ஸ்டுடியோவை அவளுக்குச் சுற்றிக்காட்டினார்” எனப் பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள ரகுமான்’அன்புள்ள அட்னன்... அவளின் வீடியோ கால் என் எரிச்சலான மனநிலையை பணிச் சுமைகளை மாற்றிவிட்டது. நன்றி மெடினா. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்” எனப் பதிவிட்டுள்ளார். இருவரின் பதிவுகளும் சமூகவலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. #ARRahman #AtnanSami

    ×