என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "2 trapped"
- விழுப்புரம் அருகே அரசு கல்லூரி மாணவரை கொன்ற வழக்கில் மேலும் 2 பேர் சிக்கினர்.
- ஆத்திரம் அடைந்த நாங்கள் அருண்குமாரை அடித்து கொைல செய்ததை ஒப்புக்கொண்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே திருவெண்ணை நல்லூர் போலீஸ் சரகம் டி.எடையார் காலனியை சேர்ந்தவர் முத்துசாமி. அவரது மகன் அருண்குமார். விழுப்புரத்தில் உள்ள அரசு கலை கல்லூரியில் பி.ஏ.2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல்போனது. எனவே மோட்டார் சைக்கிளை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அருண்குமாரின் நண்பர்கள் 4 பேர் அங்கு வந்தனர். அப்போது அவ ர்கள் அருணை வெளியே அழைத்து சென்றனர். பின்னர் இரவு நேரமாகியும் அருண்குமார் வீட்டுக்கு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அப்போது நண்பர்களி–டம் விசாரிக்க சென்றபோது அவர்களும் மாயமாகி இருந்தனர். இதற்கிடையில் அருண்குமாரின் இன்னொரு நண்பர் ஒருவர் முத்து சாமியிடம் உங்களது மகனை 4 பேர் அடித்து கொன்று ஏரியில் உள்ள கிணற்றில் வீசியதாக தகவல் தெரிவித்தார். பதறிபோன முனுசாமி தனது மகன் அருண்குமாரை தேடினார்.இந்த நிலையில் அருண்குமார்அதே கிராமத்தில் உள்ள ஏரி கிணற்றில்பிணமாக மிதந்தார்.இதனை பார்த்தமுனுசாம மற்றும் உறவினர்கள்அதி ர்ச்சியடைந்தனர்.
தகவல் அறிந்த விழுப்புரம் போலீஸ் டி.எஸ்.பி. பார்த்திபன், திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு ஆகி யோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.உடலை கைப்பற்றிவிசாரணை நடத்தினர். விசாரணையில் அருண்குமார் அடித்து கொ லை செய்யப்பட்டி–ருப்பது தெரியவந்தது. எனினும் கொலையா ளிகளை கைது செய்யக்கோரி உறவி–னர்கள் எடையார் பஸ் நிறுத்தம் பகுதியில் கடலூர்-–திருக்கோவிலூர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். தகவல் அறிந்த போலீசார் விசார–ணை–யை முடுக்கினர். இதன்பேரில் அருண்கு–மாரை கொலை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் கீர்த்திவர்மன் (17), சத்யன் (16), சரசுராஜ் (17), வீரமணி (18) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் ராேஜஷ் (20), சந்துரு (17) ஆகி யோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் மது அருந்தி கொண்டிருந்தபோது அங்கு அருண்குமார் வந்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் அருண்குமாரை அடித்து கொைல செய்ததை ஒப்புக்கொண்டனர். உடனே போலீசார் அவர்களை மத்தியசிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்