search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2018 Honda CR V"

    ஹோன்டா நிறுவனத்தின் 2018 சி.ஆர்.வி. கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #AllNewCRV #HondaCRV



    ஹோன்டா நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய 2018 சி.ஆர்.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2018 ஹோன்டா சி.ஆர்.வி. மாடலின் துவக்க விலை ரூ.28.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    2018 ஹோன்டா சி.ஆர்.வி. மாடலின் வெளிப்புறம் அப்டேட் செய்யப்பட்டு புதிய வடிவமைப்பும், புதிய டீசல் இன்ஜின் மற்றும் ஏழு-பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2018 ஹோன்டா சி.ஆர்.வி. மாடலின் டாப்-என்ட் மாடல் விலை ரூ.32.75 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய 2018 ஹோன்டா சி.ஆர்.வி. மாடலில் புதிய ஷார்ப் மற்றும் ஆங்குலர் வடிவமைப்பு கொண்டுள்ளது. காரின் முன்பக்கம் க்ரோம் பார், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், பகலில் எரியும் லைட்கள், எல்.இ.டி. ஃபாக் லேம்ப்கள், சில்வர் ஸ்கிட் பிளேட் மற்றும் மஸ்குலர் பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது.

    காரின் பக்கவாட்டில் புதிய ஹோன்டா சி.ஆர்.வி. மாடலில் புதிய டைமன்ட் கட், 3-ஸ்போக், 18 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. காரின் பின்புறம் மேம்படுத்தப்பட்ட டெயில் லைட் கிளஸ்டர், க்ரோம் பார், ஷார்க்-ஃபின் ஆன்டெனா மற்றும் ஸ்கிட் பிளேட் கொண்டுள்ளது.



    புதிய ஹோன்டா சி.ஆர்.வி. மாடல்: வைட் ஆர்ச்சிட் பியல், ரேடியன்ட் ரெட், கோல்டன் பிரவுன் மெட்டாலிக், மாடன் ஸ்டீல் மெட்டாலிக் மற்றும் லூனார் சில்வர் மெட்டாலிக் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய 2018 ஹோன்டா சி.ஆர்.வி. மாடலின் உள்புறம் ஆடம்பரமாகவு்ம, பிரீமியம் தோற்றத்துடன் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுள்ளது. புதிய சி.ஆர்.வி. மாடலில் 7 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ, டி.எஃப்.டி. எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், யு.எஸ்.பி. போர்ட், ஹெச்.டி.எம்.ஐ. போர்ட் மற்றும் எட்டு-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் லெதர் இருக்கைகள், டூயல்-சோன் கிளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், பேடில் ஷிஃப்டர்கள், பின்புற ஏ.சி. வென்ட்கள், எட்டு-வழி பவர் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட் மற்றும் டேஷ்போர்டு மற்றும் கதவுகளில் பிரீமியம் வுட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

    2018 ஹோன்டா சி.ஆர்.வி. காரின் பெட்ரோல் வேரியன்ட் 2-லிட்டர் 4-சிலிண்டர், i-VTEC இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 151 பி.ஹெச்.பி. பவர், 189 என்.எம். டார்கியூ செயல்திறன், CVT கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய காரில் புதிய 1.6 லிட்டர், 4-சிலிண்டர், o-DTEC டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 118 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன், 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
    ×